சிபிலி நோமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌலானா, இமாம், அலாமா

சிபிலி நோமானி
சுய தரவுகள்
பிறப்பு(1857-06-04)4 சூன் 1857 [1]
இறப்பு18 நவம்பர் 1914(1914-11-18) (அகவை 57)[1]
சமயம்இசுலாம்
Eraநவீன காலம்
பகுதிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்
Jurisprudenceஹனாபி[2]
Creedமாதுரிடி[3]
Main interest(s)இசுலாமிய மெய்யியல் வாழ்க்கை வரலாறு கல்வி வரலாறு திருக்குர்ஆன் மொழி
Notable idea(s)Sirat-un-Nabi
Alma materஉருது Masters English masters அரபு மொழி Masters Persian masters German masters Turkish Masters
பதவிகள்
Influenced by

சிபிலி நோமானி (Shibli Nomani) ( 1857 சூன் 3 - 1914 நவம்பர் 18, ஆசம்கர் மாவட்டம்) இவர் பிரித்தானிய இராச்சியத்தின் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த இசுலாமிய அறிஞராவார். இவர் இன்றைய உத்தரப் பிரதேத்தின் ஆசம்கர் மாவட்டத்தின் பிந்த்வாலில் பிறந்தார். 1883 ஆம் ஆண்டில் அசாம்கரில் தேசியக் கல்லூரியையும், தாருல் முசானிஃபின் (எழுத்தாளர்கள் மன்றம்) என்பதையும் நிறுவப்பட்டதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். இவர், அரபு, பாரசீகம், துருக்கியம், உருது போன்ற மொழிகளில் அறிஞராக இருந்தார். மேலும் இவர் ஓர் கவிஞருமாவார். முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றி இவர் பல விஷயங்களை சேகரித்தார். ஆனால் சிரத்-உன்-நபி என்ற திட்டமிட்ட படைப்பின் முதல் இரண்டு தொகுதிகளை மட்டுமே எழுத முடிந்தது. இவரது சீடர், சுலைமான் நத்வி, இதனைப் பயன்படுத்திக் கொண்டார். மேலும் கூடுதலாக பொருளாக அதில் சேர்த்தார். மேலும் இவரது வழிகாட்டியின் மரணத்திற்குப் பிறகு சிரத்-அன்-நபியில் மீதமுள்ள ஐந்து தொகுதிகளை எழுதினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் சேக் அபீபுல்லா, மொக்கீமா கத்தூன் ஆகியோருக்கு பிறந்தார். [1] இவரது இளைய சகோதரர்கள் கல்விக்காக இங்கிலாந்தின் இலண்டனுக்குச் சென்று பின்னர் சட்டத்தரணிகளாகத் திரும்பி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினர். இவர் ஒரு பாரம்பரிய இசுலாமிய கல்வியைப் பெற்றார். இவர் 'நோமானி' குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் அபு அனிபா நோமானி பின் சபித்திலிருந்து வந்தவர்கள். இப்போது நவீன இந்தியாவில் உத்தரப்பிரதேசம் என்று அறியப்படுகிறது. [4] ஒரு பகுத்தறிவு அறிஞரான மௌலானா முகம்மது பாரூக் சிராயகோட்டி என்பவர் இவரது ஆரம்பகால ஆசிரியராவார் . இவர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள மக்காவுக்குச் சென்றார். அங்கு இவர் இசுலாமிய இறையியல், வரலாறு, தத்துவம், சுபி ஆகியவற்றில் தனது படிப்பை அரேபியாவில் உள்ள பல்வேறு அறிஞர்களிடமிருந்து மேற்கொள்வதற்காக தனது நேரத்தை செலவிட்டார். [5] இவரது சிறு வயதில் இந்த இரண்டு எதிர் தாக்கங்கள் காரணமாக, "சிப்லி, அலிகாரால் ஈர்க்கப்படுவதற்கும், விரட்டப்படுவதற்கும் காரணங்கள் இருந்தன."

மத்திய கிழக்கில்[தொகு]

இவர் மத்திய கிழக்கில் இருந்து இந்தியா திரும்பியபோது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை நிறுவிய சையத் அகமது கானை (1817-1898) சந்தித்தார்.[சான்று தேவை] 1882 பிப்ரவரி 1 ஆம் தேதி நோமானி பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பதவியில் சேர்ந்தார்.[சான்று தேவை] இவர் பதினாறு ஆண்டுகளாக அலிகாரில் பாரசீகமும், அரபு மொழிகளையும் கற்பித்தார், அங்கு இவர் தாமஸ் அர்னால்டு போன்ற பிற பிரித்தானிய அறிஞர்களைச் சந்தித்தார். அவர்களிடமிருந்து நவீன மேற்கத்திய மேற்கத்திய கருத்துக்களையும் எண்ணங்களையும் கற்றுக்கொண்டார். இவர் 1892 இல் தாமஸ் அர்னால்டுடன் சிரியா, எகிப்து, துருக்கி, மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்குச் சென்று அவர்களின் சமூகங்களின் நேரடி மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பெற்றார்.[சான்று தேவை] கெய்ரோவில், பிரபல இசுலாமிய அறிஞர் ஷேக் முகம்மது அப்துவை (1849-1905) சந்தித்தார். [4]

ஐதராபாத்திலும் லக்னோவிலும்[தொகு]

1898 இல் சர் சையத் அகமது இறந்த பிறகு, அலிகார் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி ஐதராபாத் மாநிலக் கல்வித் துறையில் ஆலோசகரானார். ஐதராபாத் கல்வி முறையில் பல சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இவரது கொள்கையிலிருந்து, ஐதராபாத்தின் உசுமானியா பல்கலைக்கழகம் உருது மொழியை கற்பிக்கும் ஊடகமாக மாறியது. அதற்கு முன்னர், இந்தியாவின் வேறு எந்த பல்கலைக்கழகமும் எந்தவொரு வடமொழியையும் உயர் படிப்புகளில் கற்பிக்கும் ஊடகமாக இல்லை. 1905 ஆம் ஆண்டில், ஐதராபாத்தை விட்டு வெளியேறி இலக்னோ சென்று நத்வத் துல்-உலூமின் ( நத்வா ) முதல்வரானார். பள்ளியின் கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஐந்து ஆண்டுகள் அந்தப் பள்ளியில் தங்கியிருந்தார். ஆனால் பழமைவாத வகுப்பு அறிஞர்கள் இவருக்கு விரோதமாக மாறினர். மேலும் இவர் 1913 இல் தனது சொந்த ஊரான அசாம்கரைச் சுற்றியுள்ள பகுதியில் குடியேற லக்னோவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. [4]

தாருல் முசானிஃபின் நிறுவப்பட்டது[தொகு]

முன்னதாக நத்வாவில், தாருல் முசன்னிஃபின் அல்லது "எழுத்தாளர்கள் சபையை" நிறுவ இவர் விரும்பினார். ஆனால் அந்த நேரத்தில் இவரால் இதைச் செய்ய முடியவில்லை. இவர் தனது மாளிகையையும் மா பழத்தோட்டத்தையும் இப்பணிக்காக தனது இறப்புக்குப்பின் எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும், தனது குலத்தின் உறுப்பினர்களையும், உறவினர்களையும் இதைச் செய்ய ஊக்கப்படுத்தி, அதில் வெற்றி பெற்றார். இவர் தனது சீடர்களுக்கும் பிற பிரபலங்களுக்கும் கடிதங்களை எழுதி அவர்களின் ஒத்துழைப்பை நாடினார். இறுதியில் தனது சீடர்களில் ஒருவரான சையத் சுலைமான் நாத்வி தனது கனவை நிறைவேற்றி அசாம்கரில் தாருல் முசானிஃபினை நிறுவினார். இவர் இறந்த மூன்று நாட்களுக்குள், நிறுவனத்தின் முதல் முறையான கூட்டம் 1914 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. [1] [6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிலி_நோமானி&oldid=3695343" இருந்து மீள்விக்கப்பட்டது