உள்ளடக்கத்துக்குச் செல்

சின் பெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின் பெயின்
Sinn Féin
நிறுவனர்ஆர்தர் கிரிபித்
தலைவர்மேரி லூ மெக்டொனால்ட்
துணைத் தலைவர்மிசேல் ஓ'நீல்
தொடக்கம்
 • 28 நவம்பர் 1905; 118 ஆண்டுகள் முன்னர் (1905-11-28) (தொடக்க வடிவம்)
 • 17 சனவரி 1970; 54 ஆண்டுகள் முன்னர் (1970-01-17) (தற்போதைய வடிவம்)
தலைமையகம்44 பார்னெல் சதுக்கம், டப்லின் 1, அயர்லாந்து
செய்தி ஏடுஆன் பொப்லாக்ட்
இளைஞர் அமைப்புஓக்ரா சின் பெயின்
நநஈதி பிரிவுசின் பெயின் LGBTQ[1]
வெளிநாட்டுப் பிரிவுசின் பெயினின் நண்பர்கள்
கொள்கைஐரிய குடியரசுவாதம்[2]
சனநாயக சோசலிசம்[2]

இடதுசாரி தேசியவாதம்[3]
அரசியல் நிலைப்பாடுநடு-இடது[4] இடதுசாரி வரை[5]
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் – GUE/NGL
கீழவை[6]
36 / 160
மேலவை[7]
4 / 60
வட அயர்லாந்து சட்டமன்றம்[8]
27 / 90
மக்களவை
(வ.அ இடங்கள்)]][9]
7 / 18
ஐரோப்பிய நாடாளுமன்றம்[10]
1 / 13
அயர்லாந்து உள்ளாட்சிகள்[11]
80 / 949
வட அயர்லாந்து உள்ளாட்சிகள்[12]
104 / 462
இணையதளம்
www.sinnfein.ie இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

சின் பெயின் (Sinn Féin[13] ஐரிய மொழியில் "நாம்" நாமே)[14] என்பது அயர்லாந்து குடியரசு, வட அயர்லாந்து நாடுகளில் இயங்கும் ஓர் ஐரிய குடியரசுவாத[2] சனநாயக சோசலிச[2] அரசியல் கட்சி ஆகும்.

தொடக்க கால சின் பெயின் அமைப்பு 1905 இல் ஆர்தர் கிரிபித் என்பவரால் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் அயர்லாந்து விடுதலைக்கான போரில் புரட்சிகர அயர்லாந்துக் குடியரசை நிறுவியவர்கள். அயர்லாந்து உள்நாட்டுப் போரில் இவ்வமைப்பு இரண்டு கட்சிகளாக உடைந்தது. இன்றைய சின் பெயின் கட்சி 1970 இல் மேலும் பிளவடைந்து உருவானது. மற்றைய பிரிவு தொழிலாளர் கட்சியாக உருவானது. வட அயர்லாந்து மோதல்களின் போது, சின் பெயின் ஐரியக் குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) உடன் இணைந்து பணியாற்றியது.[15] சின் பெயின் கட்சி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டாலும், பிரித்தானிய நாடாளுமன்றம், ஐயர்லாந்து நாடாளுமன்றங்களில் வாக்களிக்காத கொள்கையைக் கொண்டிருந்தது. 1983 இல் ஜெரி ஆடம்சு கட்சித் தலைவரானதை அடுத்து, தேர்தல் அரசியல் அதிக முக்கியத்துவம் பெற்றது. 1986 இல் கீழவையில் "வாக்களிக்காத கொள்கை"யைக் கைவிட்டது. இதற்கு எதிராக அக்கட்சியின் சிர் குடியரசு சின் பெயின் என்ற கட்சியைத் தொடங்கினர். 1990களில், செரி ஆடம்சு, மார்ட்டின் மெக்கினசு தலைமையில் வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இது பெல்பாஸ்ட் உடன்பாட்டுக்கு வழிவகுத்து, வட அயர்லாந்து சட்டமன்றத்தை உருவாக்கியது. 2006 இல் வட அயர்லாந்து காவல்துறை சேவையை உருவாக்கிய செயின்ட் ஆன்ட்ரூசு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

வட அயர்லாந்து சட்டமன்றத்தில் சின் பெயின் ஐரியத் தேசியவாதத்தின் வரலாற்றில் முதல் தடவையாக அது 2022 மே மாத தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.[16][17] 2007 முதல் 2022 வரை வட அயர்லாந்து சட்டமன்றத்தில் சனநாயக ஒன்றியக் கட்சிக்கு அடுத்தபடியாக சென் பெயின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக இருந்து வந்தது. சின் பெயினின் உறுப்பினர்கள் துணை முதலமைச்சராகப் பதவியில் இருந்து வந்தனர். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில், சின் பெயினிடம் ஏழு தொகுதிகள் உள்ளன. ஆனாலும், அது அங்கு "வாக்களிக்காத கொள்கை"யைக் கடைப்பிடித்து வருகிறது. அயர்லாந்து கீழவையில் சின் பெயின் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.

கட்சியின் தற்போதைய தலைவர் மேரி லூ மெக்டொனால்ட் ஆவார். இவர் 2018 இல் செரி ஆடம்சிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sinn Féin LGBTQ". Twitter (in ஆங்கிலம்). Archived from the original on 13 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
 2. 2.0 2.1 2.2 2.3 "General election 2019: A simple guide to Sinn Féin". BBC News. 14 November 2019 இம் மூலத்தில் இருந்து 12 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200912212517/https://www.bbc.co.uk/news/election-2019-50315250. 
 3. Suiter 2016, ப. 134.
 4. "Irish PM's pro-EU party ahead in European vote, polls suggest". France 24. 25 May 2019 இம் மூலத்தில் இருந்து 24 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191024222212/https://www.france24.com/en/20190525-ireland-varadkar-eu-european-elections. 
 5. Culloty & Suiter 2018, ப. 5.
 6. "Find a TD". Houses of the Oireachtas. Archived from the original on 5 January 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
 7. "Find a Senator". Houses of the Oireachtas. Archived from the original on 5 January 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
 8. "The Northern Ireland Assembly". Archived from the original on 5 January 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
 9. "State of the parties". ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம். Archived from the original on 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
 10. "Full list of MEPs". ஐரோப்பிய நாடாளுமன்றம். Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
 11. "2019 Local Elections". electionsireland.org. Archived from the original on 5 January 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
 12. "Local Council Political Compositions". Open Council Date UK. 7 January 2018. Archived from the original on 30 September 2017. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
 13. "Sinn Féin". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
 14. Dinneen, Patrick (1992) [1927]. Irish-English Dictionary. Dublin: Irish Texts Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-870166-00-0.
 15. Flackes & Elliott 1994.
 16. "NI election results 2022: Sinn Féin wins most seats in historic election". BBC News. 7 May 2022 இம் மூலத்தில் இருந்து 8 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220508001323/https://www.bbc.co.uk/news/uk-northern-ireland-61355419. 
 17. McClements, Freya; Graham, Seanín; Hutton, Brian; Moriarty, Gerry (8 May 2022). "Assembly election: Sinn Féin wins most seats as parties urged to form Executive". The Irish Times (Dublin). https://www.irishtimes.com/news/politics/assembly-election-sinn-f%C3%A9in-wins-most-seats-as-parties-urged-to-form-executive-1.4872352. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சின் பெயின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_பெயின்&oldid=3595471" இலிருந்து மீள்விக்கப்பட்டது