சினலோ காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சினலோ காகம்
Sinaloa crow
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. sinaloae
இருசொற் பெயரீடு
Corvus sinaloae
டேவிசு, 1958
சினலோ காகம் பரம்பல்

சினலோ காகம் (Sinaloa crow)(கோர்வசு சினாலோயே) என்பது மேற்கு மெக்சிகோவைப் பூர்வீகமாகக் கொண்ட காக சிற்றினம் ஆகும்.

விளக்கம்[தொகு]

சினலோ காகம் கிட்டத்தட்ட தமௌலிபாசு காகம் (கோர்வசு இம்பரேடசு) போன்று தோற்றமுடையது. உடல் நீளம் அதேபோன்று 34 முதல் 38 செ.மீ. ஆகும். இது ஊதா நிறத்துடன் பளபளப்பான, பட்டு போன்ற, கருப்பு நிற இறகுகளுடன் கருப்பு அலகு, கால்கள் மற்றும் பாதங்களைக் கொண்டுள்ளது. இரண்டு இனங்களும் குரலில் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன.

பரவலும் வாழிடமும்[தொகு]

சினலோ காகம் பசிபிக் சரிவில் தெற்கு சோனோராவிலிருந்து தெற்கே மன்சானிலோ வரை காணப்படுகிறது. இக்காக்கை கடலோரப் பகுதிகளில் வசிக்கிறது. இங்கு இது கடற்கரை, பகுதி பாலைவனம், திறந்த வனப்பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் 300 மீட்டர் உயர மலைகளில் உணவு தேடுகிறது. கடலோர நகரங்கள் மற்றும் கிராமங்களில் இது மிகவும் பொதுவாகக் காணப்படும்.

உணவு[தொகு]

தரையில் மற்றும் மரங்களில் உணவு எடுத்துக்கொள்ளும். கடலோரத்தில் தனது உணவைக் கண்டுபிடிப்பதற்காகப் பொருட்களைத் திருப்புவதைக் காணலாம். மேலும் இது சிறிய மட்டி, நண்டு மற்றும் பூச்சி போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உட்கொள்கிறது. பல வகையான பழங்களையும் உண்ணும். மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது முட்டை மற்றும் கூடுகளில் காணப்படும் குஞ்சுகளையும் உணவாக உட்கொள்ளும்.

இனப்பெருக்கம்[தொகு]

பெரும்பாலும், இந்த பறவை முள் மரத்திலோ அல்லது உயரமான தென்னை மரத்திலோ கூடு கட்டும். இதன் கூடு சிறியதாக இருந்தாலும் அமெரிக்க காகத்தை ஒத்ததாகக் கூறப்படுகிறது.

குரல்[தொகு]

குரல் தமௌலிபாசு காகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

பட இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2020). "Corvus sinaloae". IUCN Red List of Threatened Species 2020: e.T22705999A137723522. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22705999A137723522.en. https://www.iucnredlist.org/species/22705999/137723522. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினலோ_காகம்&oldid=3929837" இலிருந்து மீள்விக்கப்பட்டது