சாஹோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Saaho
சுவரிதழ்
இயக்கம்சுஜீத்
தயாரிப்பு
 • வம்சி கிருஷ்ணா ரெட்டி
 • பிரமோத்
 • பூசன் குமார்
கதை
 • சுஜீத்
 • (கதை, திரைக்கதை மற்றும் தெலுங்கு வசனம்)
 • K. G. R. அசோக்
 • (தமிழ் வசனம்)
 • அப்பாஸ் தலால்
 • ஹுசேன் தலால்
 • (இந்தி வசனம்)
இசை
 • பாடல்கள்:
 • தனிஷ்க் பாக்சி
 • குரு
 • பாதுஷா
 • சங்கர்-எஸ்ஸான்-லாய்
 • பின்னனி:
 • ஜிப்ரான்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுமதி
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்
 • யூவி கிரியேஷன்ஸ்
 • டி-சீரிஸ்
விநியோகம்ஏஏ பிலிம்ஸ் (இந்தியா)
யாஷ்ராஜ் பிலிம்ஸ்
பார்ஸ் பிலிம் (பன்னாடு)[2]
வெளியீடு30 ஆகத்து 2019 (2019-08-30)
ஓட்டம்170 நிமிடங்கள்[3]
நாடுஇந்தியா
மொழி
 • இந்தி
 • தமிழ்
 • தெலுங்கு
ஆக்கச்செலவு350 கோடி[4]
மொத்த வருவாய்மதிப்பீடு. 424 கோடி[5]

சாஹோ (saaho) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். சுஜீத் எழுதி இயக்கி, டி-சிரீஸ் பதாகையின் கீழ் வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் பூசண் குமார் ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்தது.[6] இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.  பிரபாஸ் கதாநாயகனாகவும், சிரத்தா கபூர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் ஷ்ரத்தா கபூர் தென்னந்திய சினிமாத் துறையில் அறிமுகமாகியுள்ளார்.[7]

சாஹோ திரைப்படத்திற்கான முதன்மை புகைப்படம் எடுத்தல் 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆரம்பமாகியது. படப்பிடிப்பு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா மற்றும் ஆஸ்திரியாவில் நடைப்பெற்றது. ஐமாக்ஸ் ஒளிப்படக் கருவிகள் மூலம் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.[8] இத்திரைப்படம் 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. அதிக செலவில் இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். படத்தின் ஒலிப்பதிவு டி-சீரிஸ் பதாகையின் கீழ் வெளியிடப்பட்டது. சாஹோ 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று இந்தியாவின் திரையரங்குகளிலும் ஐமாக்ஸிலும் வெளியிடப்பட்டது.[9]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படம் 350 கோடி இந்திய ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.[10] ஆஸ்திரியா, ஐதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ருமேனியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டது. அருண் விஜய், ஜாக்கி சுருப், லால், நிதின் முகேஷ் மற்றும் மந்த்ரா பேடி ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். படத்தின் அதிரடி காட்சிகளை படமாக்க பணப்பாதீட்டில் பெரும் பகுதி செலவிடப்பட்டது. அதிரடி காட்சிகளுக்காக பன்னாட்டு சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் கென்னி பேட்ஸ் அழைத்து வரப்பட்டார்.[11] இந்த திரைப்படத்தில் பிரபாஸ் காவலரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி எதிர்மறை வேடங்களில் நடித்திருக்கின்றனர்.[12] நடன இயக்குனர் வைபவி மெர்சன்ட் இரண்டு காதல் பாடல்களை படமாக்கியுள்ளார். பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆரம்பத்தில் ஆஸ்திரியாவின் ஆல்பைன் நகரமான இன்ஸ்ப்ரூக்கில் தொடங்கியது.

ஒலிப்பதிவு[தொகு]

சாஹோ திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பாக்சி, குரு ரந்தாவா, பாட்சா, சங்கர்-எஹான்-லோய் மற்றும் கிப்ரான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்தி மொழியில் தனிஷ்க் பாக்சி, குரு ரந்தாவா, பாட்சா, மற்றும் மனோஜ் யாதவும், மலையாளத்தில் விநாயக் சசிகுமாரும், தமிழில் மதன் கார்க்கியும், தெலுங்கில் ஸ்ரீஜோ மற்றும் கிருஷ்ணா காந்த் ஆகியோரும் பாடல்களை எழுதியுள்ளனர்.[13]

வெளியீடு[தொகு]

இத்திரைப்படத்தின் டீஸர் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படத்தின் வெளியீட்டுடன் வெளியிடப்பட்டது.[14] பிரபாஸின் முதல் தோற்ற சுவரிதழ் 22 அக்டோபர் 2017 அன்று அவரது பிறந்த நாளில் வெளிப்பட்டது.[15] 2019 ஆம் ஆண்டு சூலை 30 இல் யு.வி கிரியேசன்ஸ் மற்றும் டி-சீரிஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர்களை  இந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டன. யூடியூபில் டீஸர் அனைத்து மொழிகளிலும் 97 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[16] 2019 ஆம் ஆண்டு ஆகத்து 10 அன்று யு.வி கிரியேசன்ஸ் மற்றும் டி-சீரிஸ் படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டங்களை இந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தின. யூடியூபில் முன்னோட்டங்கள் அனைத்து மொழிகளிலும் 105 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[17]

இந்த திரைப்படம் உலகளவில் 2019 ஆம் ஆண்டு ஆகத்து 30 இல் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஆகிய வெளியிடப்பட்டது.

வரவேற்பு[தொகு]

இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் பெரிய அளவில் பாராட்டப்படவில்லை என்றாலும் வசூலில் வெற்றியடைந்தது.[18] சாஹோ திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளில் 130 கோடி டாலர் (19 மில்லியன் அமெரிக்க டாலர்) வசூலை பெற்றது.[18] இரண்டாவது நாளுக்குப் பிறகு உலகளாவிய வசூல் 220 கோடி ஆகும்.[19] இந்த திரைப்படம் அதன் முதல் வார இறுதியில் உலகளவில் 4 294 கோடி (அமெரிக்க $ 43 மில்லியன்) வசூலித்தது. இந்தியாவில் நிகர வசூல் 4 வது வார இறுதிக்குள் சுமார் 295 கோடியாக இருந்தது.[20]

குறிப்புகள்[தொகு]

 1. "Saaho: Ghibran replaces Shankar-Ehsaan-Loy in Prabhas' magnum opus, will do background score for film". https://www.firstpost.com/entertainment/saaho-ghibran-replaces-shankar-ehsaan-loy-in-prabhas-magnum-opus-will-do-background-score-for-film-6714601.html/amp. 
 2. "A Yash Raj Films International Release in collaboration with Phars Film.". யாஷ்ராஜ் பிலிம்ஸ். https://twitter.com/yrf/status/1167355887876550661. பார்த்த நாள்: 30 August 2019. 
 3. "Saaho (2019)". https://bbfc.co.uk/releases/saaho-2019. பார்த்த நாள்: 29 August 2019. 
 4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 5. Hooli, Shekhar H. (13 September 2019). "Saaho 14-day total box office collection: Prabhas-Shraddha film sees 85% drop in week 2" (in english). International Business Times, India Edition. https://www.ibtimes.co.in/saaho-14-day-total-box-office-collection-prabhas-shraddha-film-sees-huge-drop-week-2-805365. பார்த்த நாள்: 14 September 2019. 
 6. "Saaho: T-Series to bring Prabhas-Shraddha Kapoor starrer to the Hindi market" (in en). 2018-04-17. https://www.deccanchronicle.com/entertainment/bollywood/170418/t-series-to-bring-prabhas-Shraddha-kapoor-starrer-saaho-to-the-hindi-m.html. 
 7. Aug 15, Roshmila BhattacharyaRoshmila Bhattacharya | Updated:; 2017; Ist, 02:30. "Prabhas’s search ends at Shraddha" (in en). https://punemirror.indiatimes.com/entertainment/bollywood/prabhass-search-ends-at-shraddha/articleshow/60064777.cms. 
 8. "Saaho director: Only fair that we shoot biggest actioner in IMAX" (in en). 2019-08-10. https://www.mid-day.com/articles/saaho-director-only-fair-that-we-shoot-biggest-actioner-in-imax/21508166. 
 9. "Saaho to be released in IMAX format - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/saaho-to-be-released-in-imax-format/articleshow/70467406.cms. 
 10. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 11. "Saaho: Prabhas Begins Shooting For The Film; Joins The Cast On Set". https://www.news18.com/news/movies/saaho-prabhas-begins-shooting-for-the-film-joins-the-cast-on-set-1495069.html. 
 12. "​ Mandira Bedi and Neil Nitin Mukesh in negative roles - Saaho: Interesting facts about the Prabhas and Shraddha Kapoor starrer". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/photo-features/saaho-interesting-facts-about-the-prabhas-and-shraddha-kapoor-starrer/-Mandira-Bedi-and-Neil-Nitin-Mukesh-in-negative-roles/photostory/60526112.cms. 
 13. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 14. "Prabhas' Saaho: Shraddha Kapoor Begins Second Schedule. Details Here". https://www.ndtv.com/entertainment/prabhas-saaho-shraddha-kapoor-begins-second-schedule-details-here-1792242. 
 15. "Saaho first look: Prabhas stares menacingly in an all-black avatar; film to release in 2018- Entertainment News, Firstpost" (in en). 2017-10-23. https://www.firstpost.com/entertainment/saaho-first-look-prabhas-stares-menacingly-in-an-all-black-avatar-film-to-release-in-2018-4166537.html. 
 16. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 17. "Prabhas And Shraddha Kapoor's Saaho Gets A New Release Date: Reports". https://www.ndtv.com/entertainment/prabhas-and-shraddha-kapoors-saaho-gets-a-new-release-date-reports-2071103. 
 18. 18.0 18.1 Hooli, Shekhar H. (2019-08-31). "This is why negative reviews won't affect Saaho box office collection for 3 days" (in english). https://www.ibtimes.co.in/this-why-negative-reviews-wont-affect-saaho-box-office-collection-3-days-804528. 
 19. "Saaho Box Office Collection Day 2: Prabhas' film breaks Rajinikanth's 2.0 record, becomes 2nd highest opener". https://www.businesstoday.in/trending/box-office/saaho-box-office-collection-day-2-prabhas-film-breaks-rajinikanth-2-point-0-record-becomes-2nd-highest-opener/story/376566.html. 
 20. "Saaho All Formats Update - India And Overseas - Box Office India". https://boxofficeindia.com/report-details.php?articleid=5444. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஹோ&oldid=3641624" இருந்து மீள்விக்கப்பட்டது