சிரத்தா கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிரத்தா கபூர்
Shraddha Kapoor walks the ramp for Rahul Mishra at Lakme Fashion Week 2017.jpg
2017 இல் ஒரு விழாவில்
பிறப்பு3 மார்ச்சு 1987 (1987-03-03) (அகவை 34)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகை
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்பொழுது வரை

சிரத்தா கபூர் (Shraddha Kapoor) (பிறப்பு 3 மார்ச் 1987) இந்தி படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார் . இவர் இந்தி நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். 2010ஆம் ஆண்டு தீன் பத்தி என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தனது நடிப்பு தொழிலை தொடங்கினார். இளம் வயதினர் நாடகத்திரைப்படமான லவ் கா தி எண்ட் (2011) திரைப்படத்தில் முதன்முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கபூர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற காதல் திரைப்படமான ஆஷ்கி 2 (2013) இல் ஒரு பாடகராக நடித்ததற்கு பரவலான அங்கீகாரம் பெற்றார். அதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . அடுத்த வருடத்தில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் துயர நாடகமான அம்லட்டின் தழுவலாக விசால் பரத்வாஜின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடக திரைப்படமான ஹைடர் (2014) இல் நடித்தார். ஓபிலியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாத்திரத்தை அவர் சித்தரித்தார். சிரத்தா, காதல் திரைப்படமான ஏக் வில்லன் (2014), நடன திரைப்படமான ஏபிசி 2 (2015) மற்றும் அதிரடி திரைப்படமான பாக்கி (2016) ஆகியவற்றில் நடித்தார். இவையனைத்தும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[2][3] பின்னர் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வணிகரீதியாக தோல்வியுற்று வந்தது. அதன்பின் நகைச்சுவை திகில் திரைப்படமான ஸ்திரி (2018) திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவர் நடித்த படங்களிலேயே வியாபார ரீதியில் அதிக வெற்றி பெற்றது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

தந்தை சக்தி கபூருடன் சிரத்தா கபூர். சிரத்தா நடித்த முதல் படத்தில் அவரது தந்தை ஒரு கௌவர வேடத்தில் தோன்றினார்.

கபூர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தாய் மராத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4] சிரத்தா சிறுமியாக இருந்தபொழுது அடிக்கடி சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக கூறினார்.[5]

சிரத்தாவின் தந்தை சக்தி கபூர், தாய் சிவாங்கி கபூர். மூத்த சகோதரர் சித்தன்த் கபூர் , அவரது இரண்டு அத்தை பத்மினி கோலாபுரே மற்றும் தேஜாஸ்வினி கோலாப்பரே ஆகியோர் ஆவர்.

2016 இல் பாக்கி என்ற இந்தி திரைப்படத்திற்கான நிகழ்ச்சியில்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_கபூர்&oldid=2701195" இருந்து மீள்விக்கப்பட்டது