உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஷிக்கி 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷிக்கி 2
இயக்கம்மோகித் சூரி
தயாரிப்புபூஷன் குமார்
முகேஷ் பாட்
கிரிஷன் குமார்
திரைக்கதைசாகுஃப்டா ரஃபிக்
இசைமிதூன்
ஜீத் கங்குலி
அங்கித் திவாரி
நடிப்புஆதித்யா ராய் கபூர்
சாரதா கபூர்
ஷாத் ரந்துவா
ஒளிப்பதிவுவிஷ்ணு ராவ்
கலையகம்டி சீரிஸ் ஃபிலிம்ஸ்
விசேஷ் ஃபிலிம்ஸ்
வெளியீடு26 ஏப்ரல் 2013 (2013-04-26)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு90 மில்லியன் (US$1.1 மில்லியன்)[1]
மொத்த வருவாய்1.1 பில்லியன் (US$14 மில்லியன்)(100 Days)[2][3]

ஆஷிக்கி 2 என்பது 2013 இல் வெளியான இந்தி திரைப்படம் ஆகும். இதை மோகித் சூரி இயக்கியுள்ளார். ஆதித்யா ராய் கபூர் , சாரதா கபூர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை பூஷன் குமார் தயாரித்தார். ராகுல் என்ற பாடகனுக்கும், ஆரூகி என்ற பாடகிக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டது கதை. இது இதற்கு முன்னர் வெளியான ஆஷிக்கி என்ற திரைப்படத்தின் தொடர்ச்சி. எ ஸ்டார் இஸ் பார்ன் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் சாயலைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, மொத்தம் நூறு கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது. அதிக வருவாய் ஈட்டி இந்தி திரைப்படங்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் வெளியான தும் ஹி ஹோ, சுன் ரஹா ஹே ஆகிய பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.

கதை

[தொகு]

ராகுல் ஜய்கர் என்ற பாடகன் இந்தியாவின் முன்னணி பாடகர்களுள் ஒருவனாகத் திகழ்கிறான். ஆதித்யா ராய் கபூர் ராகுல் ஜய்கராக நடித்துள்ளார். இவரது குடிப்பழக்கத்தால் இவரின் புகழ் குறைகிறது. இவர் மேடையில் பாடுவதாக கதை ஆரம்பிக்கிறது. ஆர்யன் என்ற மற்றொரு பாடகன் இவரை வெறுப்பேற்ற, மேடையில் இருந்து இறங்கி வந்து அவனுடன் ராகுல் சண்டையிடுகிறான். பாடல் முடியும் முன்பே இறங்கி வந்ததால் விழா ஏற்பாடு செய்தவர் எரிச்சலடைகிறார். அங்கிருந்து வெளியேறி மதுக்கடைக்குள் நுழைகிறான். ஆரூகி கேஷவ் ஷிர்கே மதுக்கடையில் பாடும் தொழில் செய்கிறாள். அவள் லதா மங்கேஷ்கர் படத்தை பார்ப்பதை இவன் காண்கிறான். அவளுக்கு பாடகியாகும் எண்ணம் இருப்பதாக கருதுகிறான். அவள் குரலில் மயங்கிய ராகுல் அவளை புகழ்மிக்க பாடகியாக்குவதாக வாக்களிக்கிறான். அவன் வாக்கை நம்பி, மதுக்கடையில் இருந்து வெளியேறுகிறாள். அவனுக்காக் மும்பை வருகிறாள். அவனை தொலைபேசியில் அழைக்கிறாள். அவனை ஒரு கும்பல் சூழ்ந்து அடிக்கின்றனர். அவனால் அவளது தொலைபேசி அழைப்பை ஏற்று பேச முடியவில்லை. அவனனை பல முறை தொடர்பு கொள்ள முயன்று தோற்கிறாள். அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி ஊடகங்களுக்கு தெரியக்கூடாது என அவன் நண்பன் விவேக் எண்ணுகிறான். அவளது அழைப்புகளை துண்டிக்கிறான். ஆரூகி, தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறாள். அவள் பெற்றோரும் வறுமையில் வாட, அவள் ஏமாந்தது கண்டு வருந்துகிறாள். மீண்டும் வேறு மதுக்கடையில் சேருகிறாள். உடல் நிலை சரியான பின்னர், ராகுல் அவளை தேடுகிறான். அவள் மதுக்கடையில் வேலை செய்வதை அறிகிறான். அவளிடம் பேசி, தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறான் ராகுல். அவளை புகழடையச் செய்வதாக கூறுகிறான். அவளுக்கு திரைப்படப் பாடல்களை பாடும் வாய்ப்பை பெற்றுத் தருகிறான். பல பாடல்களைப் பாடி புகழ் பெறுகிறாள். அவளை ராகுல் தன் வேலைக்காரியாக வைத்துக் கொள்ளவே பாடகியாக ஆக்கினான் என வதந்திகள் பரவுகின்றன. அதனால் எரிச்சல் அடைந்து, ராகுல் மதுவை குடிக்கிறான். அவன் மீது காதல் கொண்ட ஆரூகி, தன் புகழை விட, அவனையே அதிகம் விரும்புகிறாள். காலப்போக்கில், ராகுல் அதிகம் குடிக்கிறான். அவனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, ஆரூகி முயற்சி மேற்கொள்கிறாள். தன் தொழிலையும் விட்டு, அவனுடன் இருந்து அவனுக்கு உதவுகிறாள். ஆரூகியின் பாடல் நிகழ்ச்சியின் போது, ராகுல் ஆரூகியை இன்பத்திற்காக பயன்படுத்தியதாக ஒருவன் கூற, தகராறு ஏற்படுகிறது. ராகுல் அவனை அடிக்கிறான். பின்னர், சிறையில் அடைக்கப்படுகிறான். அவனை வெளியில் எடுத்து, வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக, தன் தொழிலை விடத் துணிகிறாள். அவளது வாழ்க்கைக்கும், புகழுக்கும் தடையாக இருப்பதாக எண்ணி, அவளை விட்டு விலக நினைக்கிறான். அவளிடம் கூறிவிட்டு, வேறு இடத்திற்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறான். அவனது இறப்பை தாங்க முடியாத ஆரூகி, தன் தொழிலை விட்டுவிட்டு வீடு திரும்புகிறாள். அவளை தடுத்து, அறிவுரை கூறுகிறான் ராகுலின் நண்பனான விவேக். அவளை பாடகியாக்க ராகுல் எடுத்த முயற்சிகளை பற்றி சொல்கிறான். ராகுலைப் போல், ஆரூகி தன் புகழை இழந்துவிடக் கூடாது என்றும், அப்படி இழக்க நேரிட்டால் அது ராகுலின் முயற்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டதாகிவிடும் என்றும் கூறுகிறான். தனக்கு உதவிய ராகுலின் எண்ணம் ஈடேற பாடல் தொழிலை மேற்கொள்கிறாள். ஒரு நாள் அவளிடம் ஒரு தம்பதி வந்து, அவளின் ரசிககர்கள் என்று கூறி கையெழுத்து கேட்கின்றனர். அதில் ஆரூகி ராகுல் ஜய்கர் என்று எழுதுகிறாள். இதன் மூலம் அவனுடனான காதலை வெளிப்படுத்தினாள். திடீரென்று மழை பொழிய, அந்த தம்பதி தங்கள் தங்கள் மேல்சட்டையை போர்த்திக் கொள்கின்றனர். அவளும் ராகுலும் இதைப் போன்ற ஒரு மழை நாளில் மேல்சட்டையை மேலே போர்த்தி, காதலை வெளிப்படுத்தியதை நினைவு கூர்கிறாள்.

நடிப்பு

[தொகு]

பாடல்கள்

[தொகு]
எண். பாடல் எழுதியவர் இசையமைப்பு பாடியவர் நீளம்
1. "தும் ஹி ஹோ" மிதூன் மிதூன் அரிஜித் சிங் 4:22
2. "சுன் ரஹா ஹே (ஆண்)" சந்தீப் நாத் அங்கித் திவாரி அங்கித் திவாரி 6:30
3. "சஹூன் மைன் யா நா" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி அரிஜித் சிங், பாலக் முச்சல் 5:04
4. "ஹும் மர் ஜாயங்கே" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி அரிஜித் சிங், துளசி குமார் 5:06
5. "மேரி ஆஷிக்வி" இர்ஷாத் கமில் மிதூன் சர்மா அரிஜித் சிங், பாலக் முச்சல் 4:26
6. "பியா ஆயே நா" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி கே.கே. துளசி குமார் 4:46
7. "புலா தேனா" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி முஸ்தபா சாகித் 4:00
8. "ஆசான் நஹின் யாஹன்" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி அரிஜித் சிங் 3:34
9. "சுன் ரஹா ஹே (பெண்)" சந்தீப் நாத் அங்கித் திவாரி ஷ்ரேயா கோஷல் 5:14
10. "மில்னே ஹே முஜ்சே ஆயி" இர்ஷாத் கமில் ஜீத் கங்குலி அரிஜித் சிங் 4:55
11. "ஆஷிக்வி - கருப் பாடல்" இசை மிதூன் இசை 2:42
12. "ஆஷிக்வி 2 மேஷப்" மிதூன், சந்தீப் நாத், இர்ஷாத் கமில் மிதூன், அங்கித் திவார், ஜீத் கங்குலி அங்கித் திவாரி,அரிஜித் சிங்,
பாலக் முச்சல், பிரமோத் ராவத், ஷிரேயா கோசல், துளசி குமார்
5:02

[4]

விருதுகள்

[தொகு]
பிலிம்பேர் விருதுகள்:
  • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது - அங்கித் திவாரி, மிதூன், ஜீத் கங்குலி
  • சிறந்த பாடகருக்கான விருது - அரிஜித் சிங்
ஸ்க்ரீன் விருதுகள் [5]
  • சிறந்த பாடகருக்கான விருது - அரிஜித் சிங்
  • சிறந்த பாடகிக்கான விருது - ஷிரேயா கோஷல்
  • சிறந்த இணையருக்கான விருதுகள் - ஆதித்யா ராய் கபூர் & சாரதா கபூர்
உலகளாவிய இந்திய திரைப்பட அமைப்பின் விருதுகள்
  • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது: மிதூன், அங்கித் திவார், ஜீத் கங்குலி
  • சிறந்த பாடகருக்கான விருது: அரிஜித் சிங்
  • சிறந்த பாடகிக்கான விருது: ஷிரேயா கோஷல்
  • சிறந்த பாடல்வரிக்கான விருது: மிதூன்

சான்றுகள்

[தொகு]
  1. Indo-Asian News Service (29 May 2013). "Aashiqui 2 joins Rs. 100 crore club". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 30 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://www.boxofficeindia.com/Details/art_detail/gundayworldwidebusiness#.UwW9amKSyAo
  3. "Worldwide TOP TEN 2013". Box Office India. 12 December 2013. Archived from the original on 4 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. Indo-Asian News Service (8 April 2013). "Bhatts, Bhushan Kumar get emotional at 'Aashiqui 2' music launch". Zee News. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  5. http://www.ibtimes.co.in/articles/533445/20140108/annual-screen-award-2014-complete-list-nominees.htm

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆஷிக்கி_2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷிக்கி_2&oldid=3574829" இலிருந்து மீள்விக்கப்பட்டது