நீல் நிதின் முகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் நிதின் முகேஷ்
3ஜி என்ற படதின் அறிமுக நிகச்சியில் முகேஷ், 2013
பிறப்புநீல் நிதின் முகேஷ் சந்த் மாத்தூர்
15 சனவரி 1982 (1982-01-15) (அகவை 42)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இருக்மணி சஹாய் (தி. 2017)
[1]
பிள்ளைகள்1
உறவினர்கள்முகேஷ் (தாத்தா)

நீல் நிதின் முகேஷ் சந்த் மாத்தூர் (Neil Nitin Mukesh Chand Mathur) (பிறப்பு 15 ஜனவரி 1982) ஒரு இந்திய நடிகரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக பாலிவுட் படங்களில் பணியாற்றுகிறார். பின்னணி பாடகர் நிதின் முகேஷ் அவர்களின் மகனும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் முக்கேஷ் அவர்களின் பேரனும் ஆவார். நிதின், விஜய் (1988) மற்றும் ஜெய்சி கர்னி வைசி பர்னி (1989) ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் இளம் வயதில் ஜானி கதார் (2007) திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் நியூயார்க் (2009), கத்தி (2014) தமிழில் அறிமுகம்) , பிரேம் ரத்தன் தன் பாயோ (2015), கோல்மால் அகெய்ன் (2017) மற்றும் சாஹோ (2019), கவசம் (2018) (தெலுங்கு அறிமுகம்) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர், நீல் நிதின் முகேஷ் சந்த் மாத்தூர் என்ற பெயரில் 15 ஜனவரி 1982 அன்று மகாராட்டிராவின் மும்பையில் பிறந்தார்.[2][3] மூத்த பாடகர் முக்கேஷின் மகனான நிதின் முகேஷ் பாலிவுட் பின்னணி பாடகர் இவரது தந்தையாவார்.[4] இவரது தந்தைவழி பாட்டி குசராத்தி ஸ்ரீமாலி பிராமணர், அவரது தந்தைவழி தாத்தா தில்லியைச் சேர்ந்த மாத்தூர் காயஸ்த பிராமணர் ஆவார்.[5] அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை லதா மங்கேஷ்கர் இவருக்கு சூட்டினார்.[6] சிறுவயதில், இவர் விஜய் (1988) மற்றும் ஜெய்சி கர்னி வைசி பர்னி (1989) ஆகிய படங்களில் முறையே ரிஷி கபூர் மற்றும் கோவிந்தாவின் சிறு வயது பாத்திரங்களில் தோன்றினார்.

முகேஷ் மும்பையில் உள்ள எச் ஆர் கல்லூரியில் கல்வி பயின்று. வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[7] பாடகர்களின் குடும்பத்தில் பிறந்தாலும், நடிப்புத் தொழிலைத் தொடர முடிவு செய்தார்.[4] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "பாடுவது எனது பொழுதுபோக்கு, ஆனால் நடிப்பு எனது ஆர்வம் என்றார்.[4] நீல், கிசோர் நமித் கபூர் நடிப்பு நிறுவனத்தில் நான்கு மாத பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றார். மேலும் நடிகர் அனுபம் கெரிடமும் பயிற்சி பெற்றார்.[7]

சொந்த வாழ்க்கை[தொகு]

2017 இல், முகேஷ் ருக்மிணி சகாய் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு நூர்வி நீல் முகேஷ் என்ற மகள் 20 செப்டம்பர் 2018 அன்று பிறந்தார்.[8]

சமூகச் செயல்பாடு[தொகு]

2009 ஆம் ஆண்டில், முகேஷ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். ஏழைப் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தொழில் பயிற்சி அளித்து அவர்களைத் தாங்களே ஆதரிப்பதற்கு உதவினார். இவரது பாட்டி சரல் தேவி மாத்தூரின் பெயரில் இந்த மனிதநேய திட்டம் பெயரிடப்பட்டது.[9] 2012 இல், "திங்க் ப்ளூ" என்ற சுற்றுச்சூழல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக Volkswagen நிறுவனத்துடன் இணைந்தார். இது தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பிற அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாகும்.[10]

சான்றுகள்[தொகு]

  1. "PHOTOS: Inside Neil Nitin Mukesh's wedding". Rediff.com. 10 February 2017. Archived from the original on 15 December 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2019.
  2. "He didn't get GOT but here's a Neil Nitin Mukesh primer". Hindustan Times. 14 November 2015 இம் மூலத்தில் இருந்து Dec 4, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151204091619/https://www.hindustantimes.com/brunch/he-didn-t-get-got-but-here-s-a-neil-nitin-mukesh-primer/story-n5tiD6FVILPhFNEZ0RzYkJ.html. 
  3. India TV Entertainment Desk (15 January 2019). "Happy Birthday Neil Nitin Mukesh: Check out ten best family moments of Golmaal Again star". India TV. https://www.indiatvnews.com/entertainment/celebrities-happy-birthday-neil-nitin-mukesh-check-out-ten-best-family-moments-of-golmaal-again-star-499113. 
  4. 4.0 4.1 4.2 Naval Shetye, Aakanksha (11 September 2007). "Neil Nitin Mukesh's Bollywood break". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2012.
  5. "Exclusive : Neil Nitin Mukesh & Nitin Mukesh In Conversation With Karan Thapar". YouTube. India Today. 23 October 2016.
  6. "Celebs named after famous people". Mid-Day. பார்க்கப்பட்ட நாள் 21 February 2013.
  7. 7.0 7.1 Mulchandani, Amrita (16 June 2008). "I am in Love: Neil Nitin Mukesh Chand". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 21 February 2013.
  8. Team, DNA Web (23 September 2018). "Neil Nitin Mukesh welcomes daughter Nurvi Neil Mukesh home, See pics". DNA India.
  9. "Neil champions the cause of women". DNA India இம் மூலத்தில் இருந்து 25 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091225183001/http://www.dnaindia.com/entertainment/report_neil-champions-the-cause-of-women_1326383. 
  10. "Neil supports environment awareness campaign". The Indian Express. http://www.indianexpress.com/videos/entertainment/20/neil-supports-environment-awareness-campaign/9419. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_நிதின்_முகேஷ்&oldid=3847858" இலிருந்து மீள்விக்கப்பட்டது