சாரசீனியா
சாரசீனியா | |
---|---|
Sarracenia species and hybrids | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | |
பேரினம்: | Sarracenia |
இனங்கள் | |
See text. | |
![]() | |
Sarracenia range (all species) |

சாரசீனியா(Sarracenia) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ (sarraceniaceae) என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 10 வகைச் செடிகளும் சில கலப்பினச் செடிகளும் உள்ளன. இச்செடிகள் வட அமெரிக்காவில் வெப்பப்பிரதேச புல்வெளியில் உள்ள ஈரமான சேறு நிறைந்த பகுதியில் நன்கு வளர்கின்றன. மங்கிப்போன சருகுடன் கூடிய கருப்பு மணல் நிறைந்த பகுதிகளில் இவை நன்கு வளர்கின்றன. இதன் இலைகள் ஜாடி வடிவத்தில் மிகவும் அழகாக இருக்கும். இதன் பூக்களின் அழகுக்காகவே தோட்டங்களில் இதனை வளர்ப்பார்கள். சுமார் 300 ஆண்டுகளாக இவை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன். டாக்டர். டி. சாரசின் (Dr. Sarrasin) என்ற புகழ் பெற்ற மருத்துவர் பெயரே இச்செடிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பெயர்கள்
[தொகு]இச்செடிகளை கீழ்க்கண்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
- ஜாடிச் செடி (pitcher plant)
- இந்தியன் ஜாடிச் செடி(Indian pitcher plant)
- பிசாசு பூட்ஸ் அல்லது பேய் பூட்ஸ்( Devils boots)
- முன்னோர்களின் கிண்ணம் அல்லது கோப்பை(Forefathers cup)
- வேடுவன் அல்லது வேட்டைகாரனின் கிண்ணம்(Huntsmaans cup)
- ஊதுகுழல்கள்(Trumpets)
- வட அமெரிக்கன் ஜாடிச் செடி (North American pitcher plant))
- தொலைநோக்கிச் செடி( Watches)
அமைப்பு
[தொகு]இச்செடிகள் பல பருவச் செடியாகும். இதன் அடியில் மட்டத்தண்டுக் கிழங்கு உள்ளது. இதிலிருந்து 3 முதல் 8 இலைகள் சுமார் 10 முதல் 70 செ. மீ நீளம் வரை வளரும். இதன் இலைகள் அனைத்தும் ஜாடிகளாகவே உள்ளன. இந்த ஜாடிகள் ஊது குழாய் போன்ற அமைப்பில் உள்ளன. இவை வசந்த காலத்தில் வளர்கின்றன. சில இனச் செடிகளில் இலையுதிர் காலத்தில் இதன் ஜாடிகள் தட்டையாக வளர்கின்றன. இலையின் விரிந்த காம்பே ஜாடியாக மாறுகிறது. இலைப் பரப்பு மூடியாக மாறி உள்ளது.
ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு
[தொகு]வரிசைஎண் | குடும்பம் | பேரினம் | வகைகள் |
---|---|---|---|
1 | பிப்ளிடேசியீ | பிப்ளிஸ் | 2 |
ரோரிடுலா | 1 | ||
2 | செப்பலோடேசியீ | செபலோட்டசு | 1 |
3 | திரோசிரேசியீ | ஆல்ட்ரோவாண்டா | 1 |
டயோனியா | 1+1 | ||
திரோசிரா | 90 | ||
திரொசோபில்லம் | 2 | ||
4 | லண்டிபுளோரேசியீ | பிங்குவிக்குலா | 40 |
ஜென்லிசியா | 1 | ||
பயோவுலேரியா | 1 | ||
யூட்ரிக்குளோரியா | 275 | ||
பாலிபாம்போலிக்ஸ் | 2 | ||
5 | நெப்பந்தேசியீ | நெப்பந்திசு | 70 |
6 | சாரசீனியேசியீ | டார்லிங்டோனியா | 1+1 |
ஹிலியாம்போரா | 3 | ||
சாரசீனியா | 6 |