உள்ளடக்கத்துக்குச் செல்

கெண்டி (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெப்பந்திசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெண்டி
Nepenthes edwardsiana
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Core eudicots
வரிசை:
Caryophyllales
குடும்பம்:
Nepenthaceae

Dumort.
பேரினம்:
Nepenthes

உயிரியற் பல்வகைமை
>129 இனங்கள்[1]
வேறு பெயர்கள்
  • Anurosperma Hallier
  • Bandura Adans.
  • Phyllamphora Lour.

கெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes) அல்லது குடுவையுருத்தாவரம் எனப்படுவது நெப்பந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். கெண்டி பேரினத்தில் வெவ்வேறு காலநிலைகளில் வளரக்கூடிய ஏறக்குறைய 130 இனங்கள் காணப்படுகின்றன. இதில் சுமார் 70 வகைச் செடி இனங்கள் உள்ளன. இவை ஜாடிச் செடிகள் ( Pitcher Plant) என தோட்டவியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தொங்கும் குடுவைகள் (Hanging Pitcher Plant) என்றும் அழைக்கப்படுகின்றன.

தாவரம் காணப்படும் இடங்கள்

[தொகு]

கெண்டித் தாவரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 10,000 அடி உயரம வரை உள்ள இடங்களில் வளர்கின்றன. இவை ஈரம் மிக்க ஆதிக்காடுகளிலோ, சதுப்பு பிரதேசங்களில் உள்ள குட்டை ஓரங்களிலோ செழித்து வளர்கின்றன. நியூகலிடோனியா, நியூகினி முதல் அயன ஆஸ்திரேலியா, கண்டா தீவுகள், இலங்கை, மடகாஸ்கர். மலேயா பிலிப்பைன், சீனா வங்காளம், இந்தியா போன்ற நாடுகளில் இச் செடிகளைக் காணலாம்.

கட்டமைப்பு

[தொகு]

ஆழம் குறைந்த வேர் ஏறும் தண்டு கொண்ட ஒரு படரித்தாவரம் ஆகும். இவற்றில் ஒரு அடி உயரம் கொண்ட சிறு செடி முதல் 70 அடி உயரம் வரை பற்றி ஏறும் தொற்றுக் கொடிகளும் உள்ளன. நெப்பந்தீஸ் இனங்களில் பல வகையான தொற்றுக் கொடிகள் (Epiphytes) உள்ளன. நெப்பந்தீஸ் வீய்ச்சி என்ற வகையில் செடியின் தண்டில் ஒன்று விட்ட ஒழுங்கில் தோன்றும் வாளுருவான இலை. இலையின் நடு நரம்பே பற்றுக் கம்பியாக மாறி பற்றிப்படர உதவும். இத்தந்து அதன் முடிவில் குடுவையை ஆக்கும். இக்குடுவை ஆரம்பத்தி்ல் ஒரு முகையாக ஆரம்பிக்கும். பின் படிப்படியாக குடுவையாக மாறும்.[2] பற்றுக்கம்பி இனத்திற்குத் தக்கவாறு நீளம் மாறுபடுகிறது. இது செடிகளின் மேலே ஏறிச் செல்ல உதவியாக உள்ளது. மேலும் குடுவையயும் குடுவையில் உள்ள திரவத்தின் எடையையும் தாங்கிப் பிடிக்கிறது.

பூச்சிகளைக் கவருதல்

[தொகு]

இளம் குடுவைகள் மூடியே இருக்கும். முதிர்ந்த குடுவைகள் வாயின் மேல் மூடி போல ஒரு பாகம் நீண்ண்டிருக்கும். இலையின் மேற்பரபு குழிவாக உள் மடங்கி வளர்ந்து கிண்ணம், புனல், குடுவை, லோட்டா போன்ற பல வடிவங்களில் இருக்கும். இந்த குடுவையில் மூன்றில் ஒரு பங்கு 'பெப்சின்' என்ற திரவம் இருக்கும். குடுவையின் வாயிலே எண்ணற்ற தேன் சுரப்பிகள் இருக்கும். மேலும் இக்குடுவைகள் கவர்ச்சிகரமான வண்ணங்கள், புள்ளிகள், திட்டுகள் கொண்டு காணப்படும். இது எறும்பு, கரப்பான் பூச்சி, மற்றும் ஊர்ந்து செல்லும் சிறிய பூச்சியினங்கள் ஆகியவைகளைக் கவரும். தேன், நிறம், வாசனை மற்றும் குடுவையின் அமைப்பாலும் கவரப்பட்டு இப்பூச்சிகள் தேன் சுரப்பிகளிடம் செல்லும் போது அவை வழுவழுப்பான பாகத்தினால் சறுக்கி குடுவையினுள் விழுகின்றன. அவை மேலே வர முடியாமல் உள்நோக்கி வளைந்திருக்கும் குடுவையின்முடிகள் அவைகளைத் தடுத்து விடுகின்றன.
குடுவையில் உள்ள பெப்சின் திரவம் பூச்சியை செரிமானம் செய்து அவற்றின் சாரத்தை இழுத்துக் கொள்கிறது. இதன் மூலம் இத்தாவரத்திற்கு பற்றாக்குறையான நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் சத்தைப் பெறுகின்றன. குடுவையின்மீது உள்ள மூடி போன்ற அமைப்பு மழை நீரை உள்ளே விடாமல் தடுக்கிறது.[3].

நெப்பந்தீசு பூ அமைப்பு

[தொகு]

நெப்பந்தீசு த் தாவர வகையில் ஆண், பெண் என இரு வகைகள் உள்ளன. இவற்றின் பூக்கள் ஒழுங்கானவை. 'ரசீம்' எனும் வளர்நுனி மஞ்சரிகளாக அமைந்திருக்கும். இதழ்கள்2-2: ஆண் பூவில் 4 முதல் 16 வரை கேசரங்கள் இருக்கும். பெண் பூவில் சூலகம் 4 சூலறைகள் கொண்டது. பல சூல்கள் பல வரிசைகளில் பொருந்தியிருக்கும். கனி இணை சூலக வெடிகனி ஆகும். விதைகள் 100 முதல் 500 வரை இருக்கும். இவை இலேசானதகவும் அவற்றின் முனைகளில் நீண்ட மயிரிழைகள் நீட்டிக் கொண்டும் இருக்கும்.

குடுவை அமைப்பு.

[தொகு]
  • வெளிப் புறத்தில் இருக்கும் பகுதி வசீகரிக்கும் பகுதி
  • வாயின் உள்புறத்தில் இருக்கும் பூச்சிகளை மயக்கக்கூடிய பகுதி
  • வழவழப்பாக இருக்கும் பூச்சிகளை வழிநடத்தும் பகுதி
  • செரிமானப் பகுதி.

சுரப்பிககள

[தொகு]

நெப்பந்தீசு செடியில் பல சுரப்பிகள் இருந்தாலும் குறிப்பாக 4 வகைகள் குடுவையில் காணப்படுகின்றன.

  1. ஹைடாதோடஸ் (Hydathodes) என்ற சுரப்பி குடுவைகளில் நீர் போன்ற வழுவழுப்பன திரவத்தைச் சுரக்கிறது.
  2. குடுவையின் வெளிப்புறம் தேன் சுரப்பிகள் உள்ளன.
  3. குடுவையின் கழுத்துப் பகுதியில் உள்ள சுரப்பிகளில் பூச்சிகளை மேலே வரவிடாமல் செய்யும் பல சுரப்பிகல் உள்ளன.
  4. சாடியின் அடிப்பகுதியில் செரிமனச் சுரப்பிகள் உள்ளன.

நெப்பந்தீசு இனம் மற்றும் கலப்பினம் ஆகியவற்றில் பெரும்பாலும் குடுவையின் உள்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வழவழப்பாகவும் ஊதா நிறத்துடனுமே திரவங்கள் காணப்படுகின்றன.

நெப்பந்தீசு வகைகள்

[தொகு]

நெப்பந்தீசு இனத்தில் சுமார் 70 வகைச் செடிகளும் பத்துக்கும் மேற்பட்ட கலப்பினச் செடிகளும் உள்ளன. வித்தியாசமான குடுவை அமைப்புகளுடன் உள்ள சில செடிகளுள் சில:

  1. நெப்பந்தீசு அம்புலாரியா ( N.ampullaria)
  2. நெப்பந்தீசு வில்லோசா (N. villoosa)
  3. நெப்பந்தீசு லோவி (N.lowii)
  4. நெப்பந்தீசு பைகால்கரட்டா (N. paikalkarattaa)
  5. நெப்பந்தீசு ராஜா (N. rajah)
  6. நெப்பந்தீசு காசியானா.(N. khasiana)
  7. நெப்பந்தீசு வீய்ச்சி (N.veitchii)

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு

[தொகு]
வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

மருத்துவப் பயன்

[தொகு]

நெப்பந்தீசுத் தாவரத்தின் திறக்காத இளம் குடுவைகள் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், சிறுநீரகக் கோளாறுக்கும், சர்க்கரை (நீரிழிவு) நோய்க்கும் கண் நோய்க்கு சொட்டு மருந்தாகவும் அஸ்ஸாம் பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் குடுவையை அரைத்து தொழுநோய் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குத் தடவுவார்கள்.

உசாத்துணை.

[தொகு]

ஏற்காடு இளங்கோ அவர்கள் எழுதிய அதிசயத் தாவரங்கள். அறிவியல் வெளியீடு. மார்ச்சு-2004

ஆதாரங்கள்

[தொகு]
  1. McPherson, S.R. 2010. Carnivorous Plants and their Habitats. 2 volumes. Redfern Natural History Productions, Poole.
  2. Barthlott, W., Porembski, S., Seine, R., and Theisen, I. 2007. The Curious World of Carnivorous Plants. Portland, Oregon: Timber Press.
  3. Gaume, L. & Y. Forterre 2007. A Viscoelastic Deadly Fluid in Carnivorous Pitcher Plants. PLoS ONE 2(11): e1185. doi:10.1371/journal.pone.0001185

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nepenthes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெண்டி_(தாவரம்)&oldid=3290321" இலிருந்து மீள்விக்கப்பட்டது