கொடுக்குச் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடுக்குச் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: லண்டிபுளோரேசியீ
பேரினம்: ஜென்லிசியா
துணைப்பேரினம்: ஜென்லிசியா
இனம்: ஜென்லிசியா ரிப்பன்ஸ்
இருசொற் பெயரீடு
ஜென்லிசியா ரிப்பன்ஸ்
Benj. (1847)
வேறு பெயர்கள்
  • Genlisea pulchella
    Tutin (1934)
  • Genlisea pusilla
    Warm. (1874)
  • Genlisea repens
    auct. non Benj.: G.Cheers (1992)
    [=Utricularia quelchii]
  • Utricularia obovata
    G.Weber ex Benj. (1847)

கொடுக்குச் செடி (Genlisea repens, ஜென்லிசியா ரிப்பன்ஸ்) என்பது ஊனுண்ணித் தாவர வகையைச் சார்ந்த செடி ஆகும். லண்டிபுளோரேசியீ குடும்பத்தைச் சேர்ந்த இவ்வினத்தில் ஒரே வகைச் செடி மட்டுமே உள்ளது. இது மிகச் சிறிய பூச்சி உண்ணும் தாவரம் ஆகும்.

காணப்படும் இடங்கள்[தொகு]

பெரும்பாலான செடிகள் பிரேசில் நாட்டில் வளர்கிறது. மற்றவை தென் அமெரிக்காவில் வளர்கிறது. இச்செடிகள் சதுப்புநிலங்களிலும் நீர் ஆழமில்லாத பகுதிகளிலும் வளர்கிறது. இது ஆழமற்ற நீரில் வாழும் செடியாகும்.

அமைப்பு[தொகு]

கொடுக்குச் செடி

இச்செடி நீரின் அடிப்பகுதியில் வளர்கிறது. ஆனால் பூக்கள் நீருக்கு மேலே வளருகிறது.இதன் அடிப்பகுதியில் மட்டத் தண்டு கிழங்கு உள்ளது. இதில் வேர் இல்லை. மட்டத்தண்டு கிழங்கை ஒட்டி , அடிப்பகுதியில் இலைகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. இச்செடியில் இரண்டு வகையான இலைகள் வளர்கின்றன. இயற்கையான இலைகள் கரண்டி வடிவில் இருக்கும். மற்றொரு வகை இலை பூச்சியைப் பிடிக்கும் பொறியாகச் செயல்படுகிறது.பூச்சியைப் பிடிக்கும் குழாய் வடிவ இலைகள் நேரடியாக மட்டத்தண்டு கிழங்கோடு இணைந்து இருக்கும். இது நீரின் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். இந்த இலைகள் மிகச் சிறியதாக 1 செ. மீ. நீளம் மட்டுமே உடையது. இதன் அடிப்பகுதியில் உள்ள சிறிய காம்பு கெட்டியாக இருக்கும். இதன் மையப் பகுதி ஊதிய பை போல இருக்கும். இதன் மேல் பகுதி இரண்டாகப் பிரிந்து கை போலக் காணப்படும். இந்த குழாய் வடிவ சாடி மேல் நாடுகளில் ஈல் (விலாங்கு மீன்) என்ற ஒரு வகை மீனைப் பிடிக்கப் பயன் படும் பொறி போல இருக்கும். இதன் இலைகள் கொடுக்குப் போல இருக்கும். இந்தக் கைகள் சுருளாக முறுக்கிக் காணப்படும். இந்தக் கைகளின் மேல் பகுதியில் மிகச் சிறிய துவாரங்கள் இருக்கும்.

பூச்சிகளைப் பிடிக்கும் முறை[தொகு]

குழாய் வடிவ இலையின் மேல் பகுதியில் பல சுரப்பிகள் உள்ளன. இதில் தேன் போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. பையின் உள் பகுதியில் பல முடிகள் கீழ் நோக்கி வளைந்து இருக்கும். இதற்குக் கீழே பூச்சிகளைச் செரிக்கக்க் கூடிய சீரண சுரப்பிகள் உள்ளன. துவாரத்தின் வழியாக உள்ளே செல்கின்ற பூச்சிகள் பையின் அடியில் உள்ள சீரண சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிப்பு நீரால் செரிக்கப்படுகிறது.

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு[தொகு]

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

உசாத்துணை[தொகு]

ஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுக்குச்_செடி&oldid=2189833" இலிருந்து மீள்விக்கப்பட்டது