உள்ளடக்கத்துக்குச் செல்

சாதாரணக் காட்டுக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tephrodornis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சாதாரணக் காட்டுக் கீச்சான்
T. p. pondicerianus, இந்தியா
Calls of T. p. pondicerianus

Calls of T. p. pallidus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Tephrodornis
இனம்:
இருசொற் பெயரீடு
Tephrodornis pondicerianus
(Gmelin, JF, 1789)
Rough distribution range

சாதாரணக் காட்டுக் கீச்சான் ( common woodshrike) (Tephrodornis pondicerianus ) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு பறவை இனமாகும். இது இப்போது பொதுவாக வாங்கிடே குடும்பத்தின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. இதன் உடல் சிறியதாகவும், சாம்பல் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் கன்னத்தில் ஒரு கருமையான திட்டும், அதற்கு மேல் வெள்ளை புருவமும் இருக்கும். இது ஆசியா முழுவதும் முக்கியமாக வறள் காடுகளையும், குறுங்காடுகளையும் வாழ்விடமாக கொண்டது. இவை பூச்சிகளை வேட்டையாடுகின்றன, பெரும்பாலும் மற்ற பூச்சி உண்ணும் பறவைக் கூட்டங்களுடன் சேர்ந்து இரை தேடுகின்றன. இலங்கையில் காணப்படும் ஒரு துணையினமாகக் கருதப்பட்ட வடிவம் இப்போது இலங்கை காட்டுக் கீச்சான் என்று ஒரு தனி இனமாக கருதப்படுகிறது.

வகைப்பாடு

[தொகு]

இதில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • T. p. pallidus டைஸ்ஹர்ஸ்ட், 1920 - பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியா
  • இந்தியக் காட்டுக் கீச்சான் T. p. Ponicerianus ( Gmelin, JF, 1789) - கிழக்கு இந்தியா முதல் தெற்கு லாவோஸ் வரை
  • T. p. orientis Deignan, 1948 – கம்போடியா மற்றும் தெற்கு வியட்நாம்

இலங்கை காட்டுக் கீச்சான் ( Teprodornis affinis ) முன்னர் இதன் ஒரு துணையினமாக கருதப்பட்டது. அதன் தனித்துவமான இறகுகள் மற்றும் அதன் அழைப்புகளின் அடிப்படையில் அது தனி இனம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. சாதாரண காட்டுக் கீச்சானைப் போலல்லாமல், இலங்கை காட்டுக் கீச்சான் வலுவான பால் ஈருருமைத் தன்மையைக் கொண்டுள்ளது.[2][3]

விளக்கம்

[தொகு]

சாதாரண காட்டுக் கீச்சானில் உடல் மங்கிய சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற காட்டுக் கீச்சான்களைப் போலவே பெரிய தலையும் அதில் வலுவான கொக்கி முனையுள்ள அலகையும் கொண்டுள்ளது. இவற்றின் கன்னத்தில் கருமையான திட்டும் அதற்கு மேலே பாலேட்டு வெள்ளை நிறப் புருவமும் கொண்டுள்ளது. இதன் வாலின் வெளியோர இறகுகள் வெண்மையாக இருக்கும். இளம் பறவைகளுக்கு உச்சந்தலையில் கோடுகள் மற்றும் புள்ளிகள் மற்றும் தோள்பட்டை சார்ந்த பகுதியில் வெள்ளை புள்ளிகள் உள்ளன. மேலும் இளம் பறவைகளின் கீழ்ப்பகுதியிலும் மார்பகத்திலும் கோடுகள் காணப்படும். வடக்கு துணையினமான பாலிடசின் (T. p. pallidus) மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளது.[3][4][5]

நடத்தையும் சூழலியலும்

[தொகு]
டி. பி. பாலிடஸ் வாலின் வெளியோர இறகுகளின் வெண்மை மற்றும் பழுப்பு மத்திய வால் இறகுகள் ( பஞ்சாப் ) ஆகியவற்றைக் காட்டுகிறது.

பொதுவாக இவை இணையாக காணப்படும். இவற்றின் வழக்கமான அழைப்பானது வெட்-வீட், அதைத் தொடர்ந்து வை-வி-வி-வி-வீ? என இருக்கும். இவை முக்கியமாக பூச்சிகள் மற்றும் சில சமயங்களில் பழங்களை உண்கின்றன. இவை பெரும்பாலும் மரங்களுக்குள் கிளைகள் மற்றும் இலைகளில் உணவை சேகரிக்கின்றன, ஆனால் சில சமயங்களில் பறந்தும் பூச்சிகளைப் பிடிக்கின்றன அல்லது தரையில் இறங்கியும் உணவு தேடுகின்றன. இவை மழைக்காலத்திற்கு முன் கோடையில் கூடு கட்டுகின்றன. இவற்றின் கூடு கோப்பை வடிவில் இழைகள், பட்டைகளையும், பட்டு போன்ற தாவர இழைகளைக் கொண்டும் அமைக்கபடுகிறது. பொதுவாக மூன்று முட்டைகளை இடுகின்றன. பெற்றோர் இருவரும் அடைகாக்கின்றன என்றாலும் பெண் பறவை மட்டுமே குஞ்சுகளுக்கு உணவளிக்கும் என்று கருதப்படுகிறது. இளம் பறவைகள் பூச்சிகள் மற்றும் பழங்களை உணவாக கொள்கின்றன.[6][7] சில ஆண்டுகளில் ஆண்டில் இரண்டு முறை குஞ்சுகள் வளர்க்கப்படலாம்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International. 2017. Tephrodornis pondicerianus (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T103703875A112334632. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103703875A112334632.en. Downloaded on 20 July 2018.
  2. {{cite web}}: Empty citation (help)
  3. 3.0 3.1 Birds of South Asia. The Ripley Guide. Smithsonian National Museum of Natural History and Lynx Edicions.
  4. Oates, E W (1889). The Fauna of British India. Birds. Volume 1. London: Taylor and Francis. pp. 475–476.
  5. Whistler Hugh (1949). Popular Handbook of Indian Birds (4th ed.). London: Gurney and Jackson. pp. 145–146.
  6. Sundararaman, V (1989). "On the parental care of Wood Shrike (Tephrodornis pondicerianus)". J. Bombay Nat. Hist. Soc. 86 (1): 95. https://biodiversitylibrary.org/page/48710439. 
  7. Soni, H.; Pankaj, J.; J. Joshua (2005). "Nesting behaviour and unusual feeding pattern in Common Woodshrike (Tephrodornis pondicerianus)". J. Bombay Nat. Hist. Soc. 102 (1): 120. https://biodiversitylibrary.org/page/48378803. 
  8. Santharam, V. (2007). "Rishi Valley after the rains". Indian Birds 3 (2): 67–68. http://www.indianbirds.in/pdfs/IB.3.2.67-68.pdf. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tephrodornis pondicerianus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: