சாணக்கியபுரி

ஆள்கூறுகள்: 28°35′30″N 77°10′19″E / 28.59153°N 77.171895°E / 28.59153; 77.171895
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாணக்கியபுரி
துணைக் கோட்டம்
சாணக்கியபுரி is located in டெல்லி
சாணக்கியபுரி
சாணக்கியபுரி
தில்லியில் சாணக்கியபுரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°35′30″N 77°10′19″E / 28.59153°N 77.171895°E / 28.59153; 77.171895
நாடு India
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
அரசு
 • நிர்வாகம்புது தில்லி மாநகராட்சி மன்றம்
 • மக்களவை உறுப்பினர்மீனாட்சி லேகி
பரப்பளவு
 • மொத்தம்6.085 km2 (2.349 sq mi)
ஏற்றம்236.67 m (776.48 ft)
மொழிகள்
 • Officialஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்110021
மக்களவைத் தொகுதிபுது தில்லி மக்களவைத் தொகுதி
நிர்வாகம்புது தில்லி மாநகராட்சி மன்றம்
சாணக்கியபுரியில் உள்ள அக்பர் விடுதி, 1965-1969 இல் கட்டப்பட்டது
வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள சாந்தி பாதை

சாணக்யபுரி ( Chanakyapuri) என்பது தில்லியின் அண்மைப் பகுதியாகும். 1950 களில் புது தில்லியில் நிறுவப்பட்ட பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.[1] [2] இது புது தில்லி மாவட்டத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளது. சாணக்கியபுரி, அதாவது "சாணக்கியரின் நகரம்", பண்டைய இந்திய தத்துவஞானியும், அரசியல்வாதியும், இராணுவ வியூகவாதியும் மற்றும் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் ஆலோசகருமான சாணக்கியரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சாணக்கியபுரி என்பது இலுட்யன்சின் தில்லி பகுதியைத் தாண்டி புது தில்லியின் முதல் பெரிய விரிவாக்கப் பகுதியாகும். மத்திய பொதுப்பணித் துறை 1950 களில் இந்தப் பகுதியை உருவாக்குவதற்காக அங்கு அமைந்திருந்த குஜ்ஜர் இனத்தவர் தங்கியிருந்த கிராமத்திலிருந்து கையகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர், இந்த நிலம் தூதரகங்கள், அதிபர்கள், உயர் அலுவலகங்கள் மற்றும் தூதர்களின் குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த உறைவிடம் சாந்தி பாதை (அமைதி சாலை) என அழைக்கப்படும் பரந்த மத்தியச் சாலையைச் சுற்றி பரந்த பசுமையான பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த நேரு பூங்கா 1969 இல் தூதரக பணியாளர்களின் குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், இரண்டு சந்தைகள், இரண்டு கல்லூரிகள் மற்றும் தூதரகங்களால் நடத்தப்படும் பள்ளிகள் ( பிரித்தானியப் பள்ளி மற்றும் அமெரிக்க தூதரகப் பள்ளி உட்பட) அருகில் நிறுவப்பட்டன. [3]

அக்பர் விடுதி 1965-69 இல் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்காக இந்திய கட்டிடக் கலைஞர் சிவநாத் பிரசாத்தால் கட்டப்பட்டது. [4] [5] அதைச் சுற்றி யஷ்வந்த் வணிக வளாகம் கட்டப்பட்டது. பின்னர், 1969 இல் சாணக்கியா திரையரங்கம் ஒன்று சேர்க்கப்பட்டது. [6] [7] திரையரங்கம் பின்னர் இடிக்கப்பட்டது. 2017 இல் ஒரு புதிய திரையரங்கத்துடன் வணிக வளாகமாக மீண்டும் உருவாக்கப்பட்டது [8]

அணுகல்[தொகு]

சாணக்கியபுரியின் முக்கிய சாலைகளில் சாந்தி பாதை, நியாய மார்க், நிதி மார்க், சந்திரகுப்த மார்க் மற்றும் பஞ்சசீல் மார்க் ஆகியவை அடங்கும். இவை தவிர, வட்டச் சாலை சுற்றுப்புறத்தின் தெற்கு விரிவாக்கம் வழியாக செல்கிறது. மேலும், அண்டைப் பகுதியான தௌலா குவான் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 8 ஐ கடக்கிறது. சர்தார் படேல் மார்க் மேற்கில் அமைந்துள்ளது. அதே சமயம் நேரு பூங்காவிற்கு அப்பால் அமைந்துள்ள சாணக்கியா திரையரங்கம் தென்மேற்கே அமைந்துள்ளது. தில்லி வட்டச் சலை த்கொடர் வண்டி சாணக்கியபுரியில் நிற்கிறது. அதே நேரத்தில் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையம் மற்றும் ஜோர் பாக் மெட்ரோ நிலையம் ஆகியவை தில்லி மெட்ரோவின் அருகிலுள்ள நிலையங்களாகும்.

இத்னையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. What Lies Inside Delhi's Diplomatic Enclaves?
  2. Delhi’s Belly - Secret republics
  3. Viswambhar Nath. Urbanization, urban development, and metropolitan cities in India. 
  4. "An Ode to Shivnath Prasad: The le Corbusier of India".
  5. "MEA to house its new offices in ITDC's prestigious Akbar Hotel".
  6. Sahu, Ipsita (2018). "From the Ruins of Chanakya: Exhibition History and Urban Memory". BioScope: South Asian Screen Studies 9 (1): 73. doi:10.1177/0974927618767285. https://www.academia.edu/37186556. 
  7. "Chankaya's lost glory". https://www.thehindu.com/news/cities/Delhi/chankayas-lost-glory/article7449697.ece. 
  8. "A decade after it was razed, Chanakya cinema returns to New Delhi".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணக்கியபுரி&oldid=3828344" இலிருந்து மீள்விக்கப்பட்டது