வணிக வளாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிக வளாகம் என்பது வணிகம் நடைபெறுவதற்காகக் கட்டமைக்கப்பட்ட இடம். விற்பதும் விற்கும்பொருளை வாங்குவதும் இங்கு நடைபெறும். முற்காலத்தில் அங்காடி எனும் பெயரில் வழங்கப்பட்ட வரலாற்றைச் சிலப்பதிகாரம் மற்றும் பிற இலக்கியங்கள் வழியாக அறிய முடிகிறது.

வணிக வளாகத்தின் வகை[தொகு]

நாள்தோறும் வணிகம் நடைபெறும் நாள் வணிக வளாகம் வாரந்தோறும் வணிகம் நடைபெறும் வார வணிக வளாகம் என இரு வகைகள் உண்டு. பழங்காலத்தின் இரண்டு வகை அங்காடிகளாவன நாளங்காடி மற்றும் அல்லங்காடி. நாளங்காடி என்பது பகலில் வணிகம் நடைபெறும் இடம். அல்லங்காடி என்பது இரவில் வணிகம் நடைபெறும் இடம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_வளாகம்&oldid=3177185" இலிருந்து மீள்விக்கப்பட்டது