சமபக்க முக்கோணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமபக்க முக்கோணி
Triangle.Equilateral.svg
Type ஒழுங்கான பல்கோணி
விளிம்புகள் மற்றும் உச்சிகள் 3
ஷ்லாஃப்லி குறியீடு {3}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் CDel node 1.pngCDel 3.pngCDel node.png
பரப்பளவு \tfrac{\sqrt{3}}{4} a^2
உட்கோணம் (பாகை) 60°

சமபக்க முக்கோணி (Equilateral Triangle) என்பது மூன்று பக்கங்களும் சமமாக உள்ள முக்கோணி ஆகும்.[1] எந்தவொரு முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.[2] ஆகவே, எந்தவொரு சமபக்க முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையும் 180° ஆகவே இருக்கும்.

சமபக்க முக்கோணியொன்றின் அகக்கோணமொன்று 60° ஆகவும் புறக்கோணமொன்று 120° ஆகவும் இருக்கும்.[3]

முதன்மை இயல்புகள்[தொகு]

  • சமபக்க முக்கோணியின் பரப்பளவு A=\frac{\sqrt{3}}{4} a^2 ஆகும்.[4]
  • சமபக்க முக்கோணியின் சுற்றளவு p = 3a ஆகும்.[5]
  • சமபக்க முக்கோணியின் சுற்றுவட்டத்தின் ஆரை R=\frac{\sqrt{3}}{3} a ஆகும்.
  • சமபக்க முக்கோணியின் உள்வட்டத்தின் ஆரை r=\frac{\sqrt{3}}{6} a ஆகும்.
  • சமபக்க முக்கோணியின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.
  • எந்தப் பக்கத்திலிருந்தும் சமபக்க முக்கோணியின் செங்குத்துயரம் h=\frac{\sqrt{3}}{2} a ஆகும்.[6]

அமைப்பு[தொகு]

கவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்திச் சமபக்க முக்கோணியை வரைய முடியும்.

சமபக்க முக்கோணி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமபக்க_முக்கோணி&oldid=1864867" இருந்து மீள்விக்கப்பட்டது