சமந்தபத்திரர் (போதிசத்துவர்)
சமந்தபத்திரர்(समंतभद्र) மஹாயான பௌத்தத்தில் உண்மையின் மூர்த்தியாக கருதப்படுபவர். இவர் அனைத்து புத்தர்களின் தியானத்தின் உருவகமாக திக்ழ்பவர். இவரே தாமரை சூத்திரத்தின் பாதுகாவலராக போற்றப்படுகிறார். மேலும் அவதாம்சக சூத்திரத்தின் படி, போதிசத்துவத்துக்கு அடிப்படையான பத்து உறுதிமொழிகளை இவர் பூண்டுள்ளார். வஜ்ரயான பௌத்தத்தில் இவர் வஜ்ரசத்துவர் என அழைக்கப்படுகிறார்.
சமந்தபத்திரர் என்றால் எங்கும் நிறைந்திருக்கும் வள்ளன்மை என பொருள்கொள்ளலாம். இவர் சாக்கியமுனி புத்தரின் சேவகராக கருதப்படுகிறார். ஜப்பானில் இவர் தாமரை சூத்திரத்தின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார்.
பொதுவாக சமந்தபத்திரர் தன்னையே போதிசத்துவராக சுட்டிக்கொண்டாலும், சில மறைபொருள் தந்திர பௌத்த பிரிவுகள் அவளை ஆதிபுத்தராக கருதிகின்றன.மேலும் சில யோகசாரப் பிரிவுகள் வைரோசனரை தவிர்த்து இவரே யோகசாரத்தை நிர்மாணித்ததாக நிம்புகின்றனர.
சித்தரிப்பு
[தொகு]இவர் பெரும்பாலும் தனியாகச் சித்தரிக்கப்படுவதில்லை. சாக்கியமுனியுடன் திரிமூர்த்தியாகவோ இல்லையெனில் வைரோசன புத்தருடனோ தான் இவர் சித்தரிக்கப்படுகிறார்.
சீனத்தில், சில சமயங்களில், பெண் வடிவத்தில் ஆறு தந்தங்களை உடைய யானையை வாகனமாகவும் கையில் தாமரை இலையை குடையாகவும் கொண்டவராக சித்தரிக்கப்படுவதுண்டு. இவ்வடிவில் இவர், எமேய் மலையில் உள்ள பௌத்த மடங்களின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- Ancient Tibet: Research materials from the Yeshe De Project. 1986. Dharma Publishing, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89800-146-3
- Dudjom Rinpoche and Jikdrel Yeshe Dorje. The Nyingma School of Tibetan Buddhism: its Fundamentals and History. Two Volumes. 1991. Translated and edited by Gyurme Dorje with Matthew Kapstein. Wisdom Publications, Boston. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-087-8</ref>