வசுதாரா
வசுதாரா(वसुधारा) என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாகக் கருதுவர்.[1][2][3]
பொதுவான கருத்துகள்
[தொகு]வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர்.
சித்தரிப்பு
[தொகு]பொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார்.
கீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன.மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Gods of Northern Buddhism / Online HTML version with Footnotes and Images
- HimalayanArt.org
- AsianArt.com
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pratapaditya, Pal. (1985) Art of Nepal. p. 32
- ↑ Shaw, Miranda. (2006) Buddhist Goddesses of India. p. 259
- ↑ "Vasudhara: Goddess of Abundance". 4 May 2019.