சபுக்திகின்
சபுக்திகின் سبکتگین | |||||
---|---|---|---|---|---|
கசனவியப் பேரரசின் எமீர் | |||||
ஆட்சிக்காலம் | 20 ஏப்ரல் 977 – ஆகத்து 997 | ||||
முன்னையவர் | போரிதிகின் | ||||
பின்னையவர் | இசுமாயில் | ||||
பிறப்பு | அண். 942 பருசுகான் (தற்கால கிர்கிசுத்தான்) | ||||
இறப்பு | 5 ஆகத்து 997 (அகவை 55) பல்கு, குராசான் | ||||
துணைவர் | அலுப்திகினின் மகள் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | இசுமாயில் மகுமூது அபுல் முசாபர் நசீர் யூசூப் குர்ராயி கல்சி | ||||
| |||||
அரசமரபு | சபுக்திகின் குடும்பம் | ||||
தந்தை | காரா பசுகம்[1] | ||||
மதம் | சன்னி இசுலாம் (அனாபி) |
அபு மன்சூர் நசீர் அல்-தின் சபுக்திகின் (Abu Mansur Nasir al-Din Sabuktigin) (பாரசீக மொழி: ابو منصور سبکتگین) (அண். 942 – ஆகத்து 997) என்பவர் கசனவிய அரசமரபை நிறுவியவர் ஆவார். இவர் 977 முதல் 997[2] வரை ஆட்சி புரிந்தார். இவரது துருக்கிய பெயரின் பொருள் விரும்பப்படும் இளவரசன் என்பதாகும்.[3]
தன்னுடைய இளவயதில் இவர் ஒரு அடிமையாக வாழ்ந்தார். பின்னர் தன்னுடைய மாமனார் அலுப்திகினின் மகளை மணந்து கொண்டார். அலுப்திகின் கசுனி பகுதியை கைப்பற்றி இருந்தார். இப்பகுதியே தற்போதைய ஆப்கானித்தானின் கசுனி மாகாணம் ஆகும். அலுப்திகின் மற்றும் சபுக்திகின் ஆகியோர் தொடர்ந்து சாமனிய மேலாட்சியை ஏற்றுக்கொண்டனர். சபுக்திகினின் மகன் மகுமூதுவின் காலத்தில்தான் காசுனியின் ஆட்சியாளர்கள் தனித்து இயங்க ஆரம்பித்தனர்.[4][5]
இவரது மாமனார் அலுப்திகின் இறந்த போது சபுக்திகின் புதிய ஆட்சியாளரானார். உதபந்தபுரத்தின் செயபாலனைத் தோற்கடித்த பிறகு தன்னுடைய இராச்சியத்தை விரிவாக்கினார். காசுமீரின் நீலம் ஆறு வரையிலும், தற்போதைய பாக்கித்தானின் சிந்து ஆறு வரையிலும் இருந்த நிலப்பரப்பை கைப்பற்றினார்.[6]
சபுக்திகின்[a] 942ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தார். இவர் துருக்கிய பருசுகான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[b] கிர்கிசுத்தானின் தற்போதைய பருசுகோன் என்ற இடத்தில் பிறந்தார். அண்டை பழங்குடியினமான துக்சிகளால் ஒரு பழங்குடியினப் போரில் இவர் பிடிக்கப்பட்டார். சச்சில் இருந்த சாமனிய அடிமை சந்தையில் விற்கப்பட்டார். சாமனிய அடிமைக் காவலர் என்ற நிலையில் இருந்து தன்னுடைய தலைவர் கசீப் அலுப்திகினின் புரவலத் தன்மைக்கு கீழ் வரும் நிலைக்கு உயர்ந்தார்.[8]
"நுசிர் கசி என்ற பெயருடைய ஒரு வணிகர் சபுக்திகின் சிறுவனாக இருந்த போது இவரை விலைக்கு வாங்கினார். துருக்கிய புல்வெளிகளில் இருந்து புகாராவுக்கு இவரை அழைத்து வந்தார். அங்கு இவர் அலுப்திகினிடம் விற்கப்பட்டார்" என்று ஜுஸ்ஜனி குறிப்பிடுகிறார்.[9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "The Turkish name Sebüktegin means “beloved prince,” but the second element (tegin “prince”) had declined in status from Orkhon Turkish times, becoming part of the onomastic of Turkish slave (ḡolām) commanders under the ʿAbbasids."
- ↑ It is possible the Barskhan tribe was part of the Qarluq Turks.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:TDV Encyclopedia of Islam
- ↑ C.E. Bosworth, "Ghaznavids" in Encyclopaedia Iranica.
- ↑ The Turkish name Sebüktegin means “beloved prince,” but the second element (tegin “prince”) had declined in status from Orkhon Turkish times, becoming part of the onomastic of Turkish slave (ḡolām) commanders under the ʿAbbasids (Golden, pp. 52–53).
- ↑ C.E. Bosworth, "Ghaznavids" in Encyclopaedia Iranica.
- ↑ Frye 1975, ப. 165–166.
- ↑ "AMEER NASIR-OOD-DEEN SUBOOKTUGEEN". Ferishta, History of the Rise of Mohammedan Power in India, Volume 1: Section 15. Packard Humanities Institute. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
- ↑ Bosworth 1963, ப. 39.
- ↑ Bosworth 1968, ப. 6.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Ferishta
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Massullo, Martina (2018). "EPIGRAPHIC SURVEY ON THE MAUSOLEUM OF MUḤAMMAD ŠARĪF ḪĀN AT GHAZNI (AFGHANISTAN)". Bulletin d'études orientales 67: 161. பன்னாட்டுத் தர தொடர் எண்:0253-1623. https://www.jstor.org/stable/27076364.
- ↑ "غزنی، دیروز و امروز". BBC News (in பெர்ஷியன்). 31 May 2011.