உள்ளடக்கத்துக்குச் செல்

மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்ஹஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜனி
பிறப்பு1193
கோர், கோரி அரசமரபு
இறப்பு1266க்கு பிறகு
மம்லூக் இந்தியா
பணிவரலாற்றாளர்
பணியகம்கோரி அரசமரபு
மம்லூக் சுல்தானகம்

மின்ஹஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜனி (பிறப்பு 1193) என்பவர் ஒரு 13ஆம் நூற்றாண்டு பாரசீக வரலாற்றாளர்[1] ஆவார். இவர் கோர் பகுதியில் பிறந்தார்.[2] இவரது முழுப் பெயர் மின்ஹஜ்-அல்-தின் அபு அமர் உதுமான் இப்னு சிராஜ்-அல்-தின் முகம்மத் ஜுஸ்ஜனி ஆகும்.

1227இல் ஜுஸ்ஜனி உச் நகரத்திற்கும் பிறகு தில்லிக்கும் இடம்பெயர்ந்தார்.[3] வட இந்தியாவில் தில்லியின் மம்லூக் சுல்தானகத்திற்கு முதன்மை வரலாற்றாளர் ஜுஸ்ஜனி தான்.[4] இவர் கோரி அரசமரபைப் பற்றி எழுதியுள்ளார்.[5] இவர் தபகத்-இ நசீரி (1260) நூலை தில்லியின் சுல்தான் நசீருதீன் மஹ்முத் ஷாவிற்காக எழுதியுள்ளார்.[6] இந்நூல் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் 1266க்கு பிறகு இறந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. James P. Delgado, Khubilai Khan's Lost Fleet: In Search of a Legendary Armada, (University of California Press, 2008), p.38.
  2. Bosworth 2000.
  3. C.E. Bosworth, The Later Ghaznavids, (Columbia University Press, 1977), 112.
  4. Shafique N. Virani, The Ismailis in the Middle Ages: A History of Survival, A Search for Salvation, (Oxford University Press, 2007), 23;"Minhaj-i-Siraj Juzjani, the foremost historian of the Delhi Sultanate, wrote his "Nasirid Generations"(Tabaqat-i Nasiri)...."
  5. "SURIS OF GHOR AND THE SHINASP FAMILY". Abdul Hai Habibi. alamahabibi.com. பார்க்கப்பட்ட நாள் August 14, 2012. Minhaj Siraj Juzjani, historian of the Ghorid court, speaks of other celebrated and powerful personalities of the Suris who were the ancestors of the kings of Ghor.
  6. Indian Historical Writing c.600-c.1400, Duad Ali, The Oxford History of Historical Writing: Volume 2: 400-1400, (Oxford University Press, 2012), 94.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ஹஜ்-இ_சிராஜ்_ஜுஸ்ஜனி&oldid=3453929" இலிருந்து மீள்விக்கப்பட்டது