சஞ்சீவ்
சஞ்சீவ் | |
---|---|
பிறப்பு | 17 சூலை 1989 கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | நடிகர் நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2008-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஆலியா மானசா (2019-தற்போது வரை) |
சஞ்சீவ் என்பவர் தமிழ்நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவரின் இயற் பெயர் சயீத் ஆகும். திரையுலகிற்காக சஞ்சீவ் கார்த்திக் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டார்[1]. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் நடிகர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சஞ்சீவ் ஜூலை 17, 1989 அன்று கோவையில் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமிய தமிழர் குடும்பத்தில் பிறந்தார். கோவையில் உள்ள ஜெய்சி மேல்நிலைப்பள்ளியில் தனது படிப்பை முடித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவருடன் ராஜா ராணி என்ற தொடரில் நடித்த நடிகை ஆலியா மானசா என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.[2]
நடிப்புத்துத்துறை
[தொகு]இவர் 2008ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆட்டம் பட்டம் என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் கலா என்பவர் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து அபூர்வா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.
2009 இல் குளிர் 100 ° என்ற கல்லூரி சார்ந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காதல் தோழி (2009), நீயும் நானும் (2010), சகாக்கள் (2011), ஆங்கில படம் (2018) போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்.[3]
2017 இல் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. திரைப்படத்திரையில் அடையாத வெற்றியை தொலைக்காட்ச்சி துறை மூலம் வெற்றிகொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். இந்த தொடரின் வெற்றியை அடுத்து தற்பொழுது அதே தொலைக்காட்சியில் 2019 இல் காற்றின் மொழி என்ற தொடரில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கின்றார்.
தொடர்கள்
[தொகு]ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2008 | ஆட்டம் பட்டம் | போட்டியாளராக | கலைஞர் தொலைக்காட்சி |
2017-2019 | ராஜா ராணி | கார்த்திக் | விஜய் தொலைக்காட்சி |
2018 | எங்கிட்ட மோதாதே | விருந்தினராக | |
2018 | அரண்மனை கிளி | விருந்தினராக | |
2019-–ஒளிபரப்பில் | காற்றின் மொழி | சந்தோஷ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sampathkumar, Rajiv (7 April 2021). "Sanjeev Karthick Age, Height, Wife, Serials, Family, Caste, Birthday, Instagram, Movies, Affairs, Wiki, Biography, Photos and Videos". பரணிடப்பட்டது 2021-04-20 at the வந்தவழி இயந்திரம் WikiNBio - Wikipedia and Biography. Retrieved 20 April 2021.
- ↑ "Vijay TV's Alya Manasa secretly marries her beau Sanjeev Karthick". www.ibtimes.co.in.
- ↑ "Actor Sanjeev Interview". Chennai Online. Archived from the original on 8 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2013.