உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°06′06″N 76°57′59″E / 11.101768°N 76.966435°E / 11.101768; 76.966435
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Logo Of Srec college photo
சின்னமும், கல்லூரியியன் முகப்பு தோற்றமும்
குறிக்கோளுரைEnlightenment through Education
வகைதமியார் கல்லூரி (தன்னாட்சி கல்வி நிறுவனம்)
உருவாக்கம்1994
நிறுவுனர்சேவாரத்தினம் முனைவர் ஆர். வெங்கடேசலு
முதல்வர்முனைவர் என். ஆர். அலமேலு
அமைவிடம், ,
11°06′06″N 76°57′59″E / 11.101768°N 76.966435°E / 11.101768; 76.966435
சுருக்கப் பெயர்SREC,Ramakrishna Engg
சேர்ப்புசென்னை அண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.srec.ac.in

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ( Sri Ramakrishna Engineering College ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் உள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்லூரி ஆகும். இதை சேவாரத்னா டாக்டர் ஆர். வெங்கடேசலு நிறுவினார். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது தேசிய அங்கீகார வாரியத்திடம் அதன் பெரும்பாலான படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், தமிழக அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த கல்லூரி 1994 ஆம் ஆண்டில் தொழிலதிபர் சேவாரத்னா டாக்டர் ஆர். வெங்கடசாலு அவர்களால் நிறுவப்பட்டது. இது பொறியியல் மற்றும் பிற தொழில்நுட்ப படிப்புகளில் பல்வேறு இளங்நிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. 2007-2008 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் ஆறு வெவ்வேறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது இக்கல்லூரி தன்னாட்சி கல்லூரியாக ஆனது. இக்கல்லூரியானது எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் பல கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கல்லூரி மொத்தம் 42 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

கல்வி

[தொகு]
  • பி.இ. கணினி அறிவியல் பொறியியல்
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • பி.இ.. வான்வெளிப் பொறியியல்
  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
  • பி.இ. உயிர் மருத்துவ பொறியியல்

முதுநிலை படிப்புகள்

[தொகு]
  • எம்.இ. ஆற்றல் மின்னணு மற்றும் செயலிகள்
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. உற்பத்தி பொறியியல்
  • எம்.இ. பதிகணினியியல் தொழில்நுட்பங்கள்
  • எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று
  • எம்.இ. நானோ தொழில்நுட்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • எம்.இ. கட்டுப்பாடு மற்றும் கருவி பொறியியல்
  • முதுநிலை வணிக மேலாண்மை

ஆராய்ச்சி படிப்புகள் (பாரதியார் பல்கலைக்கழகம்)

[தொகு]
  • ஆய்வியல் நிறைஞர் (கணினி அறிவியல்)
  • பிஎச்.டி (கணினி அறிவியல் பொறியியல் நிரலாக்க)

சேர்க்கை நடைமுறை

[தொகு]

இளநிலை படிப்புகளுக்கு - முதல் ஆண்டு படிப்பு

[தொகு]
  • சேர்க்கையானது ஒற்றை சாளர அமைப்பை அடிப்படையாகக் கொண்டது
  • +2 தேர்வு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை
  • நிர்வாக இடங்களுக்கான சேர்க்கை 35%

இளநிலை படிப்புகளுக்கு - இரண்டாம் ஆண்டு படிப்பு (பக்கவாட்டு நுழைவு)

[தொகு]
  • இளநிகலை படிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட 10% இடங்கள்
  • டிஓடிஇ / அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி.

எம்சிஏ & எம்பிஏ படிப்புகளுக்கு

[தொகு]
  • ஒற்றை சாளர சேர்க்கை
  • தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி பட்டம் மற்றும் டான்செட் தகுதி தரவரிசை அடிப்படையில்
  • தமிழக அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு கொள்கை.

இருப்பிடம்

[தொகு]

இது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் வட்டமலைபாளையத்தில் அமைந்துள்ளது.

நூலகம்

[தொகு]

கல்லூரி நூலகத்தின் மொத்த பரப்பளவு 35172 சதுரடி. பொது இருக்கைகள் 100, பத்திரிக்கை படிக்க 40 இருக்கைகள்.

மொத்த தலைப்புகள்: 17273

மொத்த தொகுதி நூல்கள்: 52221

போக்குவரத்து மற்றும் உணவகம்

[தொகு]

கல்லூரியில் 32 பேருந்துகள் உள்ளன. கோயம்புத்தூர் நகரம் மற்றும் புறநகரின் பல இடங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.

மருத்துவ வசதிகள்

[தொகு]

வளாகத்தில் மருத்துவ சேவை வழங்க ஒரு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. அவசர காலங்களில், மாணவரை சிகிச்சைக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக 24 மணிநேர ஆம்புலன்ஸ் வசதி உள்ளது.

விடுதிகள்

[தொகு]

தற்சமயம் வளாகத்தில் மூன்று விடுதி தொகுதிகள் உள்ளன; இரண்டு விடுதிகள் மாணவர்களுக்கு உள்ளது. மேலும் ஒரு விடுதி கட்டுமானத்தில் உள்ளது. ஒரு விடுதி மாணவிகளுக்கு உள்ளது. இவற்றில் மொத்தம் 1,900 மாணவர்கள் தங்க இயலும்.

வேலைவாய்ப்பு

[தொகு]

இங்குள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவானது கல்லூரியியன் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வளாக ஆட்சேர்ப்பு நிகழ்வை மாணவர்களின் இறுதி கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்துகிறது. இதற்கு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் போன்றவை இங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலர் (பிஓ) மற்றும் துறைசார் வேலை வாய்ப்பு பிரதிநிதிகள் (பிஆர்) ஆகியோரால் அழைத்துவரப்படுகின்றனர்.

விளையாட்டு

[தொகு]

இக்கல்லூரியியல் கால்பந்து, ஹாக்கி, துடுப்பாட்டம், கைபந்து, தடகள விளையாட்டு, பூப்பந்து மைதானங்கள், கைப்பந்து மைதானங்கள், கூடைப்பந்து மைதானங்கள் ஆகியவை உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]