உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா ராணி
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
மூலம்கீ அபோன் கி போர்
திரைக்கதைமருது ஷங்கர் (வசனம்)
இயக்கம்பிரவீன் பேனாட்
நடிப்பு
முகப்பு இசைஇளையவன்
முகப்பிசைஇளையவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்77
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வெங்கடேஷ் பாபு
குளபல் வில்லஜெர்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
 • டி.பிரேம்
 • பி.ஏ. வினோத் குமார்
படவி அமைப்புபல்வகைக் கமரா
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்29 மே 2017 (2017-05-29) –
13 சூலை 2019 (2019-07-13)
Chronology
முன்னர்தெய்வம் தந்த வீடு
தொடர்புடைய தொடர்கள்கீ அபோன் கி போர்
வெளியிணைப்புகள்
இணையதளம்

ராஜா ராணி என்பது 29 மே 2017 முதல்13 சூலை 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 7 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது வங்காளி மொழி தொடரான 'கீ அபோன் கீ போர்' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரவீன் பேனாட் என்ப்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடர் 13 ஜூலை 2019 இல் 582 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[3][4]

இந்த தொடரின் இரண்டாவது பருவம் 10 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் புதிய கதைக்களத்துடன் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.

கதைத் தளம்

[தொகு]

கதைத் தளம் இராஜசேகர் குடும்பத்து வேலைக்காரியான செம்பா(அலியா மனோசா)வை மையமாகக் கொண்டது. இராஜசேகரும் அவரது மனைவி லக்‌ஷ்மியும் செம்பாவை தமது மகளாக பாவனை செய்கின்ற அதே வேளை அவர்களது மருமக்களாகிய அர்ச்சனாவும் வடிவும் அப்படி கொள்ளாமல் அவளை ஒதுக்குகின்றார்கள். இராஜசேகரின்கா இளைய மகன் கார்த்திக் (சஞ்சீவ்) நீண்ட காலம் சிங்கப்பூரில் இருந்து விட்டு சென்னை திரும்புகிறான். செம்பா படும் சிரமங்களுக்கு எதிராக கார்த்திக் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றான். சூழ்நிலை கார்த்திக்கை செம்பாவைத் திருமணம் செய்ய வைக்கின்றது. செம்பா கார்த்திக்குக்கு உரிய குடும்ப பெண்ணாக தன்னை நிரூபிப்பாரா? என்பதுதான் கதை.

கதை செல்லும் போக்கில் இராஜசேகரின் மூத்த மருமக்கள் இருவரும் மற்றும் அவரது மூத்த மகளும் வேலைக் காரியான செம்பாவுக்கு இளைய மகன் கார்த்திக்கும் எதிராகவே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை கார்த்திக் அவர்களுக்கு வந்து சேர வேண்டிய குடும்ப சொத்தில் பங்கு பெற்று தமது பங்கு குறைவதற்கு காரணமாக உள்ள ஒருவன்.

ஒரு நாள் கார்த்திக் பூசை ஒன்றில் இருக்கும்போது இளைய மருமகளான வடிவின் தம்பி சஞ்சை செம்பாவுடன் தவறாக நடக்க மூற்படுகின்றான். இதனை கார்த்திக் வெளிப்படுத்துகின்றான். இதன் பின் கார்த்திக் சம்பாவின் திருமணத்துக்கு ஆலோசனை வழங்குகின்றான் செம்பாவின் விபரத்தை திருமண சேவையில் பதிவு செய்கின்றான். ஆயினும் வரும் மாப்பிள்ளைகளெல்லாம் எல்லாம் சஞ்சை கூறும் செம்பாவைப் பற்றிய அவதூறுகளால் திரும்பிவிடுகின்றார்கள். இதில் அர்ச்சனாவும் இணைந்து வடிவு மற்றும் சஞ்சையுடன் செயற்படுகின்றாள்.

அர்ச்சனா தனது தூரத்து உறவு முறையான ஒருவரை மாப்பிள்ளையாக கொண்டுவவ்து தனது சூழ்ச்சியை ஆரம்பிக்கின்றார். ஆரம்பத்தில் கார்த்திக் இதில் சந்தேகப்பட்டாலும் பின் தன தீர்மானத்தை மாற்றிக் கொள்கிறார். மாப்பிள்ளையின் குடும்பம் இரண்டு நாட்களில் திருமணத்தை முன்மொழிய அதை இராஜசேகர் ஏற்றுக் கொள்கிறார். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் திருமணத்தின் போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் மனைவியைக் கைவிட்டு செம்பாவுடம் திருமணத்திற்கு உடன்பட்டிருப்பதும் தெரியவருகின்றது.

இறுதியாக திருமணம் நிறுத்தப்படுகின்றது. செம்பாவின் இந்த நிலைமைக்காக இராஜசேகரனை அனைவரும் குற்றஞ்சாட்டுகின்றனர், அடுத்து இராஜசேகர் செம்பாவை கார்த்திக்கு திருமணம் முடிக்க தீர்மானிக்கின்றார்.கார்த்திக் தான் திவ்யாவைக் காதலிப்பதை தனது குடும்பத்திற்கு தெரிவிக்கின்றான்.கார்த்திக்கின் விருப்பத்திற்கு வீட்டில் அனைவரும் சம்மதிக்கின்றனர். செம்பாவுக்கு திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் திவ்வியா கார்த்திக் நிட்சயதார்த்தத்தையும் நடாத்த தீர்மானிக்கப்படுகின்றது. திவ்யா சிங்கப்பூரில் இருந்து வரும் தம் பெற்றோர்களை அழைத்துவர திவ்வியா விமான நிலையம் செல்கிறாள். இதனிடையில் இராஜசேகர் கார்த்திக்கை செம்பாவைத் திருமணம் செய்ய உடன்படவைக்கின்றார். இறுதியாக செம்பாவை கார்த்திக் திருமணம் செய்கிறான். கடைசி நேரத்தில் திவ்வியா வந்தடைகின்றாள். திவ்வியா பெரும் அதிச்சிக்குள்ளாகின்றாள்.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
 • சஞ்சீவ் - கார்த்திக்
 • ஆல்யா மானசா- செம்பருத்தி (செம்பா)

துணை கதாபாத்திரம்

[தொகு]
 • ராஜலட்சுமி - லட்சுமி ராஜசேகர்
 • ஆடிடோர் ஸ்ரீதர் - ராஜசேகர்
 • எம் .ஜே ஸ்ரீராம் - சந்திரசேகர்
 • ஈஸ்வர் → குரோஷி - சந்திரன்
 • ஸ்ரீதேவி - அர்ச்சனா
 • ஷப்னம் - வடிவு சந்திரன்
 • பவித்திரா → அனுஷ் ரெட்டி - திவ்வியா
 • கார்த்திக் சசிதரன் - சஞ்சய்
 • கோவை பாபு - அமுர்தன்
 • வைஷாலி → கீதாஞ்சலி → ரித்திகா - விநோதினி
 • கே.எஸ். ஜெயலக்ஷ்மி
 • அஷ்வர்யா -நதினி
 • சாந்தினி பிரகாஷ் - ஸ்வர்ணா

மதிப்பீடுகள்

[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2017 4.1% 6.3%
2017 4.5% 5.7%
2019 3.9% 5.6%

விருதுகள்

[தொகு]

இந்த தொடர் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் கலாட்டா நட்சத்திரா விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்தவில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 19 க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு

[தொகு]

இது ஒரு வங்காளி மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
வங்காளி கீ அபோன் கீ போர் ஸ்டார் ஜல்சா 25 ஜூலை 2016 ஒளிபரப்பில்
தமிழ் ராஜா ராணி விஜய் தொலைக்காட்சி 29 மே 2017 ஒளிபரப்பில்
கன்னடம் புத்மல்லி ஸ்டார் சுவர்ணா 11 டிசம்பர் 2017 22 ஜூன் 2018
தெலுங்கு காதலோ ராஜகுமாரி ஸ்டார் மா 29 ஜனவரி 2018 24 ஜனவரி 2020

பருவம் 2

[தொகு]

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Vijay TV launches new serial Raja Rani". timesofindia.indiatimes.com.
 2. "All about love, hatred and conflicts". timesofindia.indiatimes.com.i at 7 PM|work=|publisher=tvnews4u.com}}
 3. "விஜய் டிவியில் புதிய தொடர் ராஜா ராணி". cinema.dinamalar.com.
 4. "Vijay TV to launch new fiction show Raja Rani at 7 PM". tvnews4u.com.

வெளி இணைப்புகள்

[தொகு]
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி இரவு 7 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ராஜா ராணி
(29 மே 2017 – 13 ஜூலை 2019)
அடுத்த நிகழ்ச்சி
தெய்வம் தந்த வீடு ஆயுத எழுத்து
(15 ஜூலை 2019 - 18 செப்டம்பர் 2020)