சச்சார் குழு
2005 மார்ச்சில், அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் இராஜேந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர் நிலைக் குழுவை அமைத்து. இந்தக் குழுவுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செயும் பணி ஒப்படைக்கபட்டது. குழு தனது அறிக்கையை 2006 இல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 2006 நவம்பர் 30 இல் பொது களத்துக்கு கிடைத்தது. 403 பக்க அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பரிந்துரைகளும் தீர்வுகளும் இருந்தன.[1]
பின்னணி
[தொகு]இந்தியாவில் எட்டு ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபின் மீண்டும் 2004 ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது, 1947 மற்றும் 2004 க்கு இடையில் ஐம்பத்தேழு ஆண்டுகளில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சிக்கு இதற்கு முன் ஏற்படாத ஒரு நிலையாக, மக்களவையில் 145/543 இடங்களை வென்று, கூட்டணி ஆட்சிக்கு தலைமைவகித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தியாவின் முஸ்லீம் சமூகத்தின் அண்மைய சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்பிக்க இந்தக் குழுவை நியமித்தது அதன் முன்முயற்சிகளில் ஒன்றாகும்
குழு
[தொகு]இந்த குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டது. இந்தக் குழுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் இராஜேந்தர் சச்சார் தலைமை தாங்கினார். குழுவின் மற்ற உறுப்பினர்களாக சையித் ஹமீத், எம். ஏ. பசித், அக்தர் மஜீத், அபு சலே ஷெரீப், டி. கே. உம்மன், ராகேஷ் பசந்த் ஆகியோர் இருந்தனர். குழுவில் சிறப்பு கடமைக்கான அதிகாரியாக பணியாற்ற சையத் ஜாபர் மஹ்மூத்தையும் பிரதமர் நியமித்தார். இந்த குழுவானது பெண் குழுக்களையும், ஆர்வலர்களையும் சந்தித்த போதிலும் எந்த பெண் உறுப்பினரும் சேர்க்கப்படவில்லை. [சான்று தேவை]
அறிக்கை
[தொகு]பிரதமர் மன்மோகன் சிங் நியமித்த இந்தக் குழுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராஜேந்தர் சச்சார் தலையையிலான ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.[2][3][4][5][6] இந்த குழு 403 பக்க அறிக்கையைத் தயாரித்து இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் 2006 நவம்பர் 30 அன்று வழங்கியது. இந்த அறிக்கை முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்திய பொது வாழ்க்கையில் அவர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது.[7]
இந்துக்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் சமூகத்தில் அதிக பிறப்பு விகிதம் குறித்து இந்த அறிக்கை அவதானித்தது: 2100 க்குள் முஸ்லிம்களின் விகிதம் இந்திய மக்கள்தொகையில் 17% முதல் 21% வரை இருக்கும் என்று குழு மதிப்பிட்டுள்ளது.[8]
இந்திய வாழ்வின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முக்கிய நீரோட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் முழுமையாக கலந்துகொள்வதைத் தடுக்கும் தடைகளை அகற்றுவது எவ்வாறு என்பது குறித்த சச்சார் குழு தனது பரிந்துரைகளை எடுத்துரைத்தது. இந்திய முஸ்லிம்களின் "பின்தங்கிய நிலை" அதாவது இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14% ஆக இருக்கும்போது, அவர்கள் இந்திய அதிகாரத்துவத்தில் 2.5% மட்டுமே உள்ளனர்.[9] இந்திய முஸ்லிம்கள் உள்ள நிலையானது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிலைமைகளுக்கும் தாழ்ந்து இருப்பதாக சச்சார் குழு முடிவு செய்தது.[10]
சச்சார் குழுவின் இந்த அறிக்கையானது இந்திய முஸ்லீம்களின் சமத்துவமின்மை பிரச்சினையை தேசிய அளவிலான கவனத்திற்குக் கொண்டு வந்தது. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விவாதத்தைத் தூண்டியது.
குழுவின் கண்டுபிடிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சர் ப. சிதம்பரம் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்திற்கான (என்.எம்.டி.எஃப்.சி) நிதியை அதிகரிக்க முன்மொழிந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ https://www.gktoday.com/gk/10-years-of-sachar-committee-report/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Times News Network (23 December 2009). "Padmanabhaiah, Sachar, Mamata favorites for governor". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Padmanabhaiah-Sachar-Mamta-favourites-for-governor/articleshow/5367820.cms. பார்த்த நாள்: 16 February 2010.
- ↑ Times News Network (3 April 2003). "PUCL urges Supreme Court to quash Pota". Times of India. http://timesofindia.indiatimes.com/india/PUCL-urges-Supreme-Court-to-quash-Pota/articleshow/42283104.cms. பார்த்த நாள்: 16 February 2010.
- ↑ Press Trust of India (2 October 2009). "Innocent people victimised during terror probes: Activists". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Innocent-people-victimised-during-terror-probes-Activists/articleshow/5079719.cms. பார்த்த நாள்: 16 February 2010.
- ↑ KHAITAN, TARUNABH (10 May 2008). "Dealing with discrimination". Frontline. The Hindu Group. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Express news service (27 April 2008). "'Sachar Committee report is unconstitutional'". Indian Express. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Zeeshan Shaikh (24 December 2016). "Ten years after Sachar Report". Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-02-24.
- ↑ "Five charts that puncture the bogey of Muslim population growth".
- ↑ Aslam, Faheem (21 March 2011). "Muslims' share 2.5% in bureaucracy, says Sachar Committee member". Greater Kashmir. http://www.greaterkashmir.com/news/news/muslims-share-2-5-in-bureaucracy-says-sachar-committee-member/91409.html. பார்த்த நாள்: 13 June 2016.
- ↑ "US feels India has 180m Muslims". The Times Of India. 4 September 2011. http://timesofindia.indiatimes.com/india/US-feels-India-has-180m-Muslims/articleshow/9853345.cms.