இராஜேந்தர் சச்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்தர் சச்சார்
பிறப்பு(1923-12-22)22 திசம்பர் 1923
இறப்பு20 ஏப்ரல் 2018(2018-04-20) (அகவை 94)
இந்தியா, தில்லி
தேசியம்இந்தியர்
பணிவழக்கறிஞர், நீதியரசர்
அறியப்படுவதுகுடிமை உரிமை செயற்பாட்டாளர்

இராஜேந்தர் சச்சார் (Rajinder Sachar, 22 திசம்பர் 1923 - 20 ஏப்ரல் 2018) என்பவர் இந்திய வழக்கறிஞரும், தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் ஆவார். [1] இவர் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் துணை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தவர். மேலும் மக்கள் சிவில் உரிமைச் கழகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார். [2] [3]

இவர் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த அறிய இந்திய அரசால் அமைக்கப்பட்ட சச்சார் குழுவுக்கு தலைமை தாங்கி அறிக்கையை சமர்ப்பித்தார். [4] அண்ணா அசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுத்து வைத்திருப்பதை எதிர்த்ததாற்காக 2011 ஆகத்து 16, அன்று புதுதில்லியில் சச்சார் கைது செய்யப்பட்டார். [5]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

இராஜேந்தர் சச்சார் 22 திசம்பர் 1923 இல் பிறந்தார். [1] இவரது தந்தை பீம் சென் சச்சார் . [6] இவரது தாத்தா லாகூரில் நன்கு அறியப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கறிஞராக இருந்தார். [7] இவர் லாகூரில் உள்ள டி. ஏ. வி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் லாகூர் அரசு கல்லூரி மற்றும் லாகூரின் சட்டக் கல்லூரியில் பயின்றார். [1]

22 ஏப்ரல் 1952 அன்று சச்சார் சிம்லாவில் வழக்கறிஞராக பணியாற்றத் துவக்கினார். 8 திசம்பர், 1960 அன்று இவர் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார், குடிமையியல், குற்றவில் மற்றும் வருவாய் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டார். [1] 1963 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்கள் "பிரஜாதந்திர கட்சி"யை அமைத்தனர். இவர்கள் இந்திய பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப் சிங் கைரோனுக்கு எதிராக ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் குறித்த குற்றச்சாட்டு குறிப்புகளை தயாரிக்க இவர்களின் குழுவுக்கு சச்சார் உதவினார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய நீதிபதி சுதி ரஞ்சன் தாஸ் நியமிக்கப்பட்டார், 1964 சூனில் கைரோன் உள்ளிட்ட எட்டு குற்றவாளி என கண்டறியபட்டது. [6]

நீதியரசர்[தொகு]

ஒரு நிகழ்ச்சியில் நீதிபதி ராஜேந்தர் சச்சார்

1970 பிப்ரவரி 12 அன்று சச்சார் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார், மேலும் 12. பிப்ரவரி, 1972 அன்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். 5, சூலை , 1972 அன்று இவர் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1975 மே 16 முதல் 1976 மே 10 வரையிலும், பின்னர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். [1] நெருக்கடி நிலை காலத்தில் (ஜூன் 1975 - மார்ச் 1977) தேர்தல்கள் மற்றும் குடிமை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டபோது இவரது ஒப்புதல் இல்லாமல் சிக்கிமிலிருந்து ராஜஸ்தானுக்கு பணி மாற்றப்பட்டார். [8] அவசரகாலத்தின்போது அதற்கு அனுசரணையாக இருக்க மறுத்த நீதிபதிகளில் சச்சாரும் ஒருவராக இருந்தார். இதனால் இவருக்கு அளித்த ஒரு வகையான தண்டனையாக இந்த மணிமாறுதல் இருந்தது. [9] ஜனநாயகம் மறுசீரடைந்த பின்னர், 9, சூலை, 1977 அன்று இவர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். [1]

சச்சார் தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1985 ஆகஸ்ட் 6 முதல் 1985 டிசம்பர் 22 வரை ஓய்வு பெறும் வரை இருந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேந்தர்_சச்சார்&oldid=3315684" இலிருந்து மீள்விக்கப்பட்டது