சங்கிலியன் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் சங்கிலியின் சிலை, நல்லூர், யாழ்ப்பாணம்
King Cankili II's statue.JPG
இடம்முத்திரை சந்திப்பு, யாழ்ப்பாணம், இலங்கை
வகைகுதிரையேற்றம் சிலை
கட்டுமானப் பொருள்1500 செங்கல் மற்றும் 10 மூட்டை சீமைக்காரை[1]
முடிவுற்ற நாள்1974, மறுசீரமைப்பு2011
அர்ப்பணிப்புஇரண்டாம் சங்கிலி

சங்கிலியன் சிலை தமிழ் தியாகி மற்றும் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிலை யாழ்ப்பாண நகரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சங்கிலியன் சிலை 1974 இல் நல்லூர் முத்திரை சந்திப்பில் கட்டப்பட்டுள்ளது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். அரசியல் நோக்கங்களால் இந்த சிலை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக தமிழ் குழுக்கள் நம்புகின்றன. இந்தச் செயலால் சிலையின் வரலாற்று அழகு அழிக்கப்பட்டது எனவும், புதிய சிலைக்கு முன்னாள் சிலையின் வீர அம்சங்கள் இல்லை என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள். சங்கிலியின் கையில் இருந்த வாள் அரசாங்கத்தால் அகற்றப்பட்டு வேறொரு வடிவத்தில் இப்போதுள்ள நிலையில் மீண்டும் நிறுவப்பட்டது. [2] [3] இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருசோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆகத்து 3 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய யாழ்ப்பாண நகரத் தந்தை ஆல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாண நகர தந்தை திருமதி. யோகேஸ்வரி பட்குனராஜா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். [4]

வரலாறு[தொகு]

முதலாம் சங்கிலி[தொகு]

யாழ்ப்பாண அரசின் காரணித்துவ கால வரைபடம். ஏறக்குறைய 1619

யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொண்ட நிகழ்வானது 1505 இல் இலங்கையின் தென்மேற்கில் போட்டியாகவிருந்த கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேய வாணிபர்கள் வந்த பின் இடம்பெற்றது. ஆரம்பத்தில் முதலாம் சங்கிலி போன்ற பல மன்னர்கள் உள்ளூர் மக்களை கத்தோலிக்க சமயத்திற்கு போர்த்துக்கேயர் மதம் மாற்றியபோது எதிர்த்தனர். ஆயினும் மெதுவாக அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.

1591 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசன் எதிர்மன்னசிங்கம் போர்த்துக்கேயரால் நியமிக்கப்பட்டார்.[5] ஆயினும், அவர் பெயரவில் ஓர் போர்த்துக்கோய வாடிக்கையாளராகயிருந்து, சமய பரப்புதல் நடவடிக்கையை தடுத்து, தென் இந்தியாவிலிருந்து இராணுவ உதவியை நாடியபோது உள்ளக கண்டி இராச்சியத்திற்கு உதவினார். இறுதியாக, அதிகாரத்தை பறித்தெடுத்த இரண்டாம் சங்கிலி போர்த்துக்கேய மேலாண்மையை எதிர்த்தாலும் 1619 இல் பிலிப்பே டி ஒலிவேரா என்பவரால் அகற்றப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.[6] அதன் பின்னர் வந்த போர்த்துக்கேய ஆட்சி, கத்தோலிக்கத்திற்கு மக்கள் மதமாற்றப்பட வழி ஏற்படுத்தியது. மேலும், அதிக வரியினால் சனத்தொகை குறைவடைந்து, அதிகளவான மக்கள் முன்னைய அரசுகளின் மையப்பகுதிகளுக்கு ஓடிச் செல்லச் செய்தது.

இரண்டாம் சங்கிலி[தொகு]

1617 இல் எதிர்மன்னசிங்கத்தின் இறப்புடன், இரண்டாம் சங்கிலி, அரசனால் பரிந்துரைக்கப்பட்டவரைக் கொன்றுவிட்டு, அரியணையில் அமர்ந்தான். [7] இரண்டாம் சங்கிலியின் செயலை போர்த்துக்கேயர் ஏற்றுக் கொள்ளாததால், படை உதவியை தஞ்சை நாயக்கர்கள் மூலம் பெற்றதுடன் நெடுந்தீவு பகுதியில் மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையையும் முகாமிடச் அனுமதியளித்தான். இதனால் பாக்கு நீரிணை ஊடான போர்த்துக்கேயரின் கப்பல் போக்குவரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தியது. [7] இரண்டாம் சங்கிலிக்கு கண்டி ஆட்சியாளர்களும் உதவியளித்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் பெயரிடப்படாத இரு யாழ்ப்பாண இளவரசிகள் குமாரசிங்க, விஜயபால ஆகியவர்களைத் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் சங்கிலி எதிர்பார்ப்புடன் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து படை உதவியைப் பெற்றான். தஞ்சை நாயக்கர்கள் யாழ்ப்பாண அரசை மீட்டெடுப்பதில் முனைப்புக் காட்டினர். ஆயிலும், போர்த்துக்கேயரிடமிருந்து மீள எடுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சூன் 1619 இல், இரு படையெடுப்பு முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையினர் ஒரு கடற் படையெடுப்பை முறியடித்தனர். மற்றது பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் 5,000 பலமிக்க தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு, இரண்டாம் சங்கிலி தோற்கடிக்கப்பட்டான்.[7] சங்கிலியும் தப்பிப்பிழைத்த அவனது குடும்ப அங்கத்தவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, கோவாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சங்கிலி தூக்கிலிடப்பட்டான். எஞ்சியவர்கள் துறவிகளாகவும் துறவற கன்னியராகவும் மாற அரச கட்டளையால் ஊக்கப்படுத்தப்பட்டனர். பலர் அதற்கு உடன்பட்டனர். இதனால் யாழ்ப்பாண முடிக்கு உரிமை கோர முடியாதவாறு ஆக்கப்பட்டனர்.[7]

சங்கிலியின் பிள்ளைகள்[தொகு]

2011ல் புதிதாக அமைக்கப்பட்ட சிலை

சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது. [8]

சிலையின் வேறுபாடுகள்[தொகு]

பழையது[தொகு]

Sangili2.jpg

புதியது[தொகு]

Statue of king Cankili II.JPG

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலியன்_சிலை&oldid=2886478" இருந்து மீள்விக்கப்பட்டது