கோகாரிட் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகாரிட் தவளை
தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்றில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
கியூமெரானா
இனம்:
கி. லேட்டராலிசு
இருசொற் பெயரீடு
கியூமெரானா லேட்டராலிசு
(பெளலெஞ்சர், 1887)
வேறு பெயர்கள்
  • இரானா லேட்டராலிசு பெளலெஞ்சர், 1887
  • இரானா நைக்ரோலினேடா lஇயு & கியு, 1960
  • கையைரான லேட்டராலிசு (பெளலெஞ்சர், 1887)[1]
  • பெலோபைலாக்சு லேட்டராலிசு புரோசுடு மற்றும் பலர், 2006

கியூமெரானா லேட்டராலிசு (Humerana lateralis) என்பது இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இது பொதுவாக கோகாரிட் தவளை, மஞ்சள் தவளை அல்லது மரத் தவளை என்று அழைக்கப்படுகிறது.[2][3]

கோகாரிட் தவளை, இராணா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டு பின்னர் "நீர்த் தவளை" பேரினமான பெலோபிலாக்சுவில் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், இது மிகவும் பொருத்தமான பேரினமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் கோகரிட் தவளை கைலாரனா சேர்ந்ததாக இருக்கலாம். 2015ஆம் ஆண்டில், இது தொகுதி வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் கியூமெரானா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.[4] இராணா நிக்ரோலினேட்டா என்று கூறப்படும் சிற்றினம் சமீபத்தில் கி. லேட்டராலிசின் இளைய ஒத்தபெயராகத் தீர்மானிக்கப்பட்டது.[5][2]

வாழிடம்[தொகு]

கோகாரிட் தவளையின் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டலம் ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். மிதவெப்பமண்டல அல்லது வறண்ட தாழ் நில புல்வெளி, ஈரமான புதர் நிலங்கள், தோட்டங்கள், சதுப்புநிலங்கள், நன்னீர் சதுப்புநிலங்கள் இடைவிடாத நன்னீர் சதுப்புநிலங்கள், குளங்கள் மற்றும் பருவகால வெள்ளம் அல்லது நீர்ப்பாசன விவசாய நிலங்கள் ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால்அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகக் கருதப்படவில்லை.[2]

நுகர்வு[தொகு]

கம்போடியாவின் வடக்கு மற்றும் கிழக்கே மீகாங் ஆற்றின் சில பகுதிகளில், சுனுவோல் மாவட்டம், கிராட்டி மாகாணம் போன்ற இடங்களில் இது மனித நுகர்வுக்காகச் சேகரிக்கப்படுகிறது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2013). "Hylarana lateralis (Boulenger, 1887)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
  2. 2.0 2.1 2.2 van Dijk et al. 2011
  3. "Humerana lateralis (Boulenger, 1887) | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  4. Grosjean, Stéphane (October 2015). "Corrigendum to: "Improving biodiversity assessment of anuran amphibians using DNA barcoding of tadpoles. Case studies from Southeast Asia" [C. R. Biologies 338 (2015) 351–361"]. Comptes Rendus Biologies 338 (10): 708. doi:10.1016/j.crvi.2015.06.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1631-0691. http://dx.doi.org/10.1016/j.crvi.2015.06.001. 
  5. Stuart 2008
  6. An Investigation into Frog Consumption and Trade in Cambodia

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகாரிட்_தவளை&oldid=3935271" இலிருந்து மீள்விக்கப்பட்டது