கொமொரோசு பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொமொரோசு பச்சைபுறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. தெய்சுமானீ
இருசொற் பெயரீடு
தெரெரான் தெய்சுமானீ
பென்சன், 1960

கொமொரோசு பச்சைப்புறா (Comoro green pigeon)(தெரெரான் கிரிவௌடி)[2] கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மடகாசுகர் பச்சைப்புறாவினை (தெரெரான் ஆசுடிராலிசு) ஒத்த இனமாக இருப்பதாக முன்னர் கருதப்பட்டது.

புவியியல் வரம்பு[தொகு]

தெரெரான் கிரிவௌடி தற்போது கொமொரோசுவில் உள்ள மாவாலி தீவிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இருப்பினும் இது கடந்த காலத்தில் காசிதிஜா மற்றும் நுசுவானியில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

கொமொரோசு பச்சைப்புறா, பசுமையான காடுகளிலும், இரண்டாம் நிலை காடுகளிலும், உயரமான இடங்களில் தென்னந் தோட்டங்களிலும் காணப்படுகிறது.

பாதுகாப்பு[தொகு]

சட்டப்பூர்வமாக கொமொரோசு பச்சைப்புறாக்கள் பாதுகாக்கப்பட்ட போதிலும், வேட்டையாடுதல் இன்னும் நடைபெறுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் வாழ்க்கைக்குப் பொருத்தமான காடுகள் தீவின் 5% பகுதியில் மட்டுமே உள்ளது. எலிகள் போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் முட்டைகளை வேட்டையாடுபவையாக உள்ளன. இதன் எண்ணிக்கை 2,500க்கும் குறைவானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Treron griveaudi". IUCN Red List of Threatened Species 2016: e.T22728176A94973134. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728176A94973134.en. https://www.iucnredlist.org/species/22728176/94973134. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Pigeons". International Ornithological Congress. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமொரோசு_பச்சைப்புறா&oldid=3774299" இலிருந்து மீள்விக்கப்பட்டது