கொடகரா
கொடகரா Kodakara | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°22′19″N 76°18′20″E / 10.3719°N 76.3056°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
அரசு | |
• நிர்வாகம் | கொடகரா கிராமப் பஞ்ச்சாயத்து |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 32,201 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 680684 |
தொலைபேசிக் குறியீடு | 0480 |
வாகனப் பதிவு | கே எல்-64 |
கொடகரா (Kodakara) இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை எண் 544 சாலையில் திருச்சூர் நகருக்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்காடு நகருக்கு தெற்கே 3 கிமீ தொலைவிலும், சாலக்குடி நகருக்கு வடக்கில் 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நிர்வாகரீதியாக கொடகரா சாலக்குடி தாலுக்காவின் கொடகரா பஞ்சாயத்திலும், இரிஞ்சாலக்குடா வருவாய் கோட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. கொடகரா பஞ்சாயத்து சாலக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் சாலக்குடி மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். [2]
மக்கள்தொகையியல்
[தொகு]2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொடகராவில் 15,473 ஆண்களும் 16,728 பெண்களுமாக மொத்தம் 32,201 பேர் இருந்தனர்.[1]
கொடகரா அவாலா ஊழல்
[தொகு]2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு தெரிந்த சில வாரங்களுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத கருப்புப் பணத்தை கொண்டு சென்றதாக கேரள பாரதிய சனதா தலைமைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. [3] கொடகராவில் பணமும் கைப்பற்றப்பட்டது. [3] கேரள காவல் துறையினர் இந்த வழக்கை அமலாக்க இயக்குனரகத்திடம் ஒப்படைத்தனர். [4] தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியன்று கொடகராவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. [5] இதன் உண்மையான தொகை ரூ.3.5 கோடி என்றும், அது பாரதிய சனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொண்டு வரப்பட்டது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். [5] இந்த வழக்கில் பாரதிய சனதாவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். [5] இடது சாரி மற்றும் பாரதிய சனதா இடையேயான பரசுபர புரிந்துணர்வு காரணமாக கேரள காவல்துறை முதலில் இக்குற்றத்தை விசாரிக்கவில்லை என்று ஐக்கிய சனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Visualizations | Government of India". March 2011. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
- ↑ 3.0 3.1 "Kodakara hawala heist case: Complainant files claim report in court seeking release of seized cash". Mathrubhumi. 9 June 2021. https://english.mathrubhumi.com/news/kerala/kodakara-hawala-heist-case-complainant-files-claim-report-in-court-seeking-release-of-seized-cash-1.5735303.
- ↑ "Kerala police handed over Kodakara hawala heist case details to ED: Pinarayi". The News Minute. 7 June 2021. https://www.thenewsminute.com/article/kerala-police-handed-over-kodakara-hawala-heist-case-details-ed-pinarayi-150237.
- ↑ 5.0 5.1 5.2 "Kodakara black money case: Police to quiz BJP chief K Surendran's son". Onmanorama. 6 June 2021. https://www.onmanorama.com/news/kerala/2021/06/06/kodakara-black-money-case-surendran-driver-secretary-questioned.html.
- ↑ Paravath (8 June 2021). "UDF takes anti-BJP stance, moves adjournment motion on Kodakara black money case". Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624204732/https://english.mathrubhumi.com/news/kerala/udf-takes-anti-bjp-stance-moves-adjournment-motion-on-kodakara-black-money-case-1.5732362.