கே. கிருஷ்ணன்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கிருஷ்ணன்குட்டி
மின்சாரத்துறை அமைச்சர், மரபுசாரா ஆற்றல் கிராமப்புறத் தொழில்நுட்பம், கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மே 2021 (2021-05-20)
முதல் அமைச்சர் பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சரவை
முன்னவர் எம். எம். மணி
Member of the கேரள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 சூன் 2016 (2016-06-02)
முன்னவர் கே. அச்சுதன்
தொகுதி சிற்றூர் சட்டமன்றத் தொகுதி
பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சரவை, கேரள அரசு
பதவியில்
26 நவம்பர் 2018 (2018-11-26) – 3 மே 2021 (2021-05-03)
முதல் அமைச்சர் பிணறாயி விஜயனின் முதல் அமைச்சரவை
முன்னவர் பி. ஜே. ஜோசப்
பின்வந்தவர் ரோச்சி அகசுடின்
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
1991 (1991) – 1996 (1996)
முன்னவர் கே. ஏ. சந்திரன்
பின்வந்தவர் கே. அச்சுதன்
தொகுதி சிற்றூர்
பதவியில்
1980 (1980) – 1987 (1987)
முன்னவர் பி. சங்கர்
பின்வந்தவர் கே. ஏ. சந்திரன்
தொகுதி சிற்றூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 13 ஆகத்து 1944 (1944-08-13) (அகவை 79)
பெருமாட்டி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போதைய பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
வாழ்க்கை துணைவர்(கள்) கே. விலாசினி
இருப்பிடம் பெரியாறு, கிளிப் வீடு வளாகம்,

நாந்தென்கோடு, திருவனந்தபுரம், கேரளம்

கே. கிருஷ்ணன்குட்டி (K. Krishnankutty) (பிறப்பு 13 ஆகத்து 1944) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கேரள அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். [1][2] இவர் கேரள அரசின் சிற்றூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் [3] முன்னாள் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில் கேபிசிசி உறுப்பினராக ஜனதா தளத்தில் இணையும் வரை தொடர்ந்தார்.[4] இவர் கேரளா கூட்டுறவு இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.[5] இவர் இதற்கு முன்பு பெருமாட்டி சேவை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், பாலக்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]இவர் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 6 ஆம், 7 ஆம், 9 ஆம் மற்றும் 14 ஆம் அவைகளின் உறுப்பினர் ஆவார்.[4] இவர் பிணறாயி விஜயனின் அமைச்சரவையில், திருவல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசிற்குப் பிறகு அமைச்சரானார்.[6]

இவர் கேரளாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்தார்.[7]

இவர் குஞ்சுகுட்டி மற்றும் ஜானகி ஆகியோருக்கு பெருமாட்டியில் உள்ள எழுத்தாணியில் 1944 ஆம் ஆண்டு ஆகத்து 13 ஆம் நாள் பிறந்தார்.[8] இவர் தட்டாமங்கலத்தில் அரசு எஸ். எம். உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பினை முடித்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கிருஷ்ணன்குட்டி&oldid=3537463" இருந்து மீள்விக்கப்பட்டது