கேப்ரியெல்லா ஐஸ்லர்
அழகுப் போட்டி வாகையாளர் | |
[[File:![]() | |
பிறப்பு | மரியா கேப்ரியெல்லா டி ஜீசஸ் ஐஸ்லர் மொரலெஸ் மார்ச்சு 21, 1988 வெலன்சியா, வெனிசுவேலா |
---|---|
வசிப்பிடம் | நியூயார்க் |
உயரம் | 1.82 m (6 அடி 0 அங்) |
தலைமுடி வண்ணம் | பழுப்பு |
விழிமணி வண்ணம் | பழுப்பு |
மரியா கேப்ரியெல்லா டி ஜீசஸ் ஐஸ்லர் மொரலெஸ் (María Gabriela de Jesús Isler Morales) (பிறப்பு ஏப்ரல் 21, 1988) என்பவர் வெனிசுவேலாவின் நடனக் கலைஞரும், பிரபஞ்ச அழகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். 2013 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பட்டத்தைக் கைப்பற்றியவர்.[1] 2012 ஆம் ஆண்டின் மிஸ் வெனிசுவேலா பட்டத்தைப் பெற்றார். வெனிசுவேலாவில் இருந்து பிரபஞ்ச அழகிப் பட்டத்தைப் பெறும் ஏழாவது நபர் ஆவார். மேலும் 2009 ஆம் ஆண்டில் இருந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் பிரபஞ்ச அழகிப் பட்டத்தினைப் பெறும் மூன்றாவது நபரும் ஆவார். கேப்ரியல்லா தற்போது யுனிவர்ஸ் ஆஃப் பிளஸ்ஸிங்ஸ் ஃபன்ட் (சர்வதேச ஆசீர்வதிக்கப்பட்ட நிதி நிறுவனம்) எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிகிறார். இந்த நிறுவனமானது 501(c)3 மீச்சிறு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தனி வளர்ச்சி பெறுதலுக்கான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இளம் யுவதிகள் மற்றும் பெண்களுக்கு தன்மேம்பாடு பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது ஆகும்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
மரியா ஐஸ்லர் வெலன்சியா நகரத்தில் ஏப்ரல் 21, 1988 இல் பிறந்தார். தனது சிறுவயதிலிருந்தே மரகேயில் வாழ்ந்து வந்தார். விற்பனை மற்றும் மேலாண்மைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி பாரம்பரியங்களைப் பின்பற்றினார். லோசான் நகரத்தில் தனது தாத்தா இருந்ததனால் சுவிட்சர்லாந்து குடியுரிமையைப் பெற்றார்.[2][3] இவரின் குடும்பப் பெயரான ஐஸ்லர் என்பது சுவிட்சர்லாந்துக் குடும்பங்களின் பொதுப் பெயராகும். தனது பதினான்காம் வயதிலிருந்தே விளம்பரத் துறையில் நடித்தார். இதன்மூலம் தனது தாய் மற்றும் பாட்டியைக் கவனித்துக் கொண்டார்.[4]
மிஸ் வெனிசுவேலா 2012[தொகு]
ஆகத்து 30, 2012 கரகஸ் இல் நடைபெற்ற மிஸ் வெனிசுவேலா போட்டியின் இறுதிச் சுற்றில் இருபத்தி நான்குப் போட்டியாளர்களில் ஒருவராக ஐஸ்லர் இருந்தார். இதில் மிஸ் எலகன்ஸ் பட்டம் (நளினம் அல்லது அழகு) பெற்றார் . மேலும் குரிகோ நகரத்தில் இருந்து மிஸ் வெனிசுவேலா விருதினைப் பெறும் ஒன்பதாவது நபர் ஆனார். இதன் மூலம் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கு வெனிசுலேவா நாட்டைப் பிரநிதித்துவம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
பிரபஞ்ச அழகி 2013[தொகு]
நவம்பர் 9, 2013 இல் மாஸ்கோ, உருசியாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் வெனிசுவேலாவின் சார்பாக மரியா ஐஸ்லர் கலந்துகொண்டார் . அதில் 2012 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஒலிவியா கல்போ, மரியா ஐஸ்லருக்கு பிரபஞ்ச அழகிக்கான மகுடத்தைச் சூட்டினார். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்களில் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர் மூன்றாவது முறையாக இவ்விருதினைப் பெறுகிறார்.
சர்வதேச ஆசிர்வதிக்கப்பட்ட நிதி நிறுவனம்[தொகு]
கேப்ரியல்லா தற்போது யுனிவர்ஸ் ஆஃப் பிளஸ்ஸிங்ஸ் ஃபன்ட் (சர்வதேச ஆசீர்வதிக்கப்பட்ட நிதி நிறுவனம்) எனும் நிறுவனத்தினைத் துவங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்த நிறுவனமானது 501(c)3 மீச்சிறு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தனி வளர்ச்சி பெறுதலுக்கான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இளம் யுவதிகள் மற்றும் பெண்களுக்கு தன்மேம்பாடு பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது ஆகும். இதனை இவர் துவங்குவதற்குக் காரணம் இவர் வாழ்ந்து வந்த வெனிசுவேலாவில் வளரிளமையில் கருவுறல் மற்றும் பேறுகால இறப்பு விகிதங்கள் அதிகமாக இருந்தன. அதனைக் குறைக்கும் விதமாக இவரின் நிறுவனத்தின் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வெனிசுலாவின் கேப்ரியெல்லாவுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்". தி இந்து. 10 நவம்பர் 2013. http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5335436.ece.
- ↑ "La Miss Univers 2013 a aussi la nationalité suisse". Tribune de Genève. tdg.ch. November 11, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "10 Things You Didn't Know About Gabriela Isler". YouTube. 2013-12-18. 2014-01-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Gabriela Isler: the woman behind the Miss Universe 2013 title". gbtimes.com. நவம்பர் 29, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 26, 2013 அன்று பார்க்கப்பட்டது.