தாத்தா
Appearance
தாத்தா (grandfather) என்பது உறவுமுறையைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். தாய் மற்றும் தந்தையின் தந்தை தாத்தா என்ற உறவுமுறை பெயரால் அழைக்கப்படுகிறார்.
தென்னிலங்கை முசுலிம்களிடையே தாத்தா என்ற சொல் தமக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதலாவது தா எழுத்து வந்தான் என்பதில் வரும் தா போன்று மொழியப்படுகிறது.
கூட்டுக்குடும்பத்தில்
[தொகு]கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் குடும்பத்தின் தலைவனாக பொதுவாக தாத்தாவே செயல்படுகிறார். கூட்டுக்குடும்ப வாழ்க்கை அரிதாகிவிட்ட இக்காலத்தில் தாத்தாவின் முக்கியத்துவம் மறக்கப்பட்டுவிட்டது. தாத்தா என்பவர் குடும்பத்தில் மிக முக்கியமான நபராக திகழ்கிறார்.
வேறு மொழிகளில்
[தொகு]சிங்கள மொழியில் தாத்தா (තාත්තා) என்பது தந்தையைக் குறிக்கும்.
தமிழ்த் தாத்தா
[தொகு]பேராசிரியர் உ.வே. சாமிநாதன் (உ.வே.சா.) தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்[1].
மேற்கோள்
[தொகு]- ↑ இராம. அய்யப்பன். "தமிழ்த் தாத்தா உ.வே.சா.!". நக்கீரன் நந்தவனம். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.