கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்

ஆள்கூறுகள்: 27°02′N 88°10′E / 27.03°N 88.16°E / 27.03; 88.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்
தன்னாட்சி மாவட்டங்கள் =
டார்ஜிலிங் is located in மேற்கு வங்காளம்
டார்ஜிலிங்
டார்ஜிலிங்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் கூர்க்காலாந்து தன்னாட்சி பிரதேசம்
டார்ஜிலிங் is located in இந்தியா
டார்ஜிலிங்
டார்ஜிலிங்
டார்ஜிலிங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°02′N 88°10′E / 27.03°N 88.16°E / 27.03; 88.16
Country இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டங்கள்டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம்
நிறுவியது14 மார்ச் 2012
தலைமையிடம்டார்ஜீலிங்
பிரதேசங்கள்டார்ஜிலிங் மாவட்டம், காளிம்பொங் மாவட்டம்
அரசு
 • பெருந்தலைவர்அனித் தாபா
பரப்பளவு
 • மொத்தம்3,303.98 km2 (1,275.67 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்878,002
 • அடர்த்தி270/km2 (690/sq mi)
மொழிகள்
 • அலுவல்நேபாளி மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்gta-darjeeling.org
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தன்னாட்சி நிர்வாகப் பிரதேசங்கள்

கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் (Gorkhaland Territorial Administration) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில், மலைப்பிரதேசங்களில், கூர்க்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டங்கள் தன்னாட்சி மாவட்டங்களாக 14 மார்ச் 2012 முதல் செயல்படுகிறது. முன்னர் இது 1988 ஆண்டு முதல் டார்ஜீலிங் கோர்க்கா தன்னாட்சி மலைக் குழு என்ற பெயரில் இயங்கி வந்தது. [1]

கோர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேச நிர்வாகத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தின் டார்ஜிலிங் வட்டம், குர்சியோங் வட்டம், மிரிக் வட்டம் மற்றும் சிலிகுரி வட்டத்தின் சில பகுதிகளும், காளிம்பொங் மாவட்டம் முழுவதும் உள்ளது.[2]

வரலாறு[தொகு]

இந்தியாவில் நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கோர்க்காலாந்து என தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கோர்க்காலாந்து விடுதலை முன்னணி எனும் இயக்கத்த்தினர் 1980 ஆண்டு முதல் போராடினர். [3] இதனால் 1988-இல் மேற்கு வங்க அரசு டார்ஜிலிங் கோர்க்கா மலைக் குழுவை நிறுவியது.[4] பின்னர் 2007-இல் பிமல் குரூங் தலைமையில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா எனும் கூர்க்கர்களின் புதிய அரசியல் தனி கோர்க்காலாந்து மாநிலததை நிறுவ வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.[5]

கோர்க்காலாந்து தன்னாட்சி பிரதேசம் நிறுவுதல்[தொகு]

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் மூன்றாண்டு போராட்டங்களுக்குப் பின்னர், பாதி அளவு தன்னாட்சி கொண்ட டார்ஜிலிங் மலைப் பிரதேச அரசு நிறுவ உடன்படிக்கை ஏற்பட்டது.[6] இதற்காக மேற்கு வங்க அரசு 2 செப்டம்பர் 2011 அன்று சட்டமன்றத்தில் சட்டமுன் வடிவை நிறைவேற்றியது.[7]நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரம் தவிர்த்த பிற சட்டம் இயற்றும் அதிகாரம் அற்ற கோர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேசத்தை நிறுவ, மாநில உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட வழிகாட்டு குழுவை அரசு நியமித்தது.[8]

புரிந்துணர்வு ஒப்பந்தம்[தொகு]

கோர்க்காலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்,[9]இந்திய அரசு அமைச்சர் ப. சிதம்பரம் முன்னணிலையில், சிலிகுரியில் 18 சூலை 2011-ஆம் ஆண்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கோர்க்காலாந்து முக்தி மோர்ச்சா அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. [10][11]இந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 14 மார்ச் 2012 அன்று கோர்க்காலாந்து தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Gorkhaland Territorial Administration Agreement signed". Outlook. 18 July 2011. Archived from the original on 3 June 2012. https://web.archive.org/web/20120603154514/http://news.outlookindia.com/items.aspx?artid=728097. பார்த்த நாள்: 16 March 2012. 
 2. Dutta, Ananya (18 July 2011). "Pact signed for Gorkhaland Territorial Administration". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article2246756.ece. பார்த்த நாள்: 16 March 2012. 
 3. "Interview with Subhash Ghisingh". Darjeeling Times. 11 January 2008. http://www.darjeelingtimes.com/news/Interviews/Interview-with-subash-ghisingh.html. பார்த்த நாள்: 16 March 2012. 
 4. "Subhas Ghising resigns". The Hindu (Chennai, India). 11 March 2008. Archived from the original on 19 மார்ச் 2008. https://web.archive.org/web/20080319231514/http://www.hindu.com/2008/03/11/stories/2008031154731100.htm. பார்த்த நாள்: 16 March 2012. 
 5. "GJM leader Bimal Gurung". The Hindu. 3 June 2010. http://news.rediff.com/column/2010/jun/03/gjm-leader-bimal-gurung-utterly-self-possessed-and-apparently-ruthless.htm. பார்த்த நாள்: 16 March 2012. 
 6. "Darjeeling issue solved: Mamata". Express Buzz. 8 June 2011. http://newindianexpress.com/nation/article432036.ece. பார்த்த நாள்: 16 March 2012. 
 7. "GTA Bill passed with 54 amendments". The Times of India. 3 September 2011. Archived from the original on 6 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121106070457/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-03/kolkata/30110031_1_territorial-administration-bill-harka-bahadur-chhetri-gjm. பார்த்த நாள்: 16 March 2012. 
 8. "Ex-judge to head hill committee". The Telegraph (Calcutta, India). 30 July 2011. http://www.telegraphindia.com/1110730/jsp/frontpage/story_14309540.jsp. பார்த்த நாள்: 16 March 2012. 
 9. "Full text of GTA MoA". Darjeeling Times. 15 July 2011. http://www.darjeelingtimes.com/images/stories/news_images/2011/jul11/jul15/finalmos.pdf. பார்த்த நாள்: 16 March 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
 10. "Gorkhaland Territorial Administration (GTA)". Indian Gorkhas. http://www.indiangorkhas.in/2011/07/gorkhaland-territorial-administration.html. 
 11. "Gorkhaland Territorial Administration Agreement signed". Outlook. 18 July 2011. Archived from the original on 19 July 2011. https://web.archive.org/web/20110719180442/http://news.outlookindia.com/item.aspx?728097. பார்த்த நாள்: 16 March 2012.