கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா
गोरखा जनमुक्ति मोर्चा
தலைவர்வினய் தமாங்[1]
பொதுச்செயலாளர்ரோஷன் கிரி
தொடக்கம்7 அக்டோபர் 2007 (2007-10-07) (12 ஆண்டுகளுக்கு முன்னர்)
தலைமையகம்டார்ஜீலிங்
இ.தே.ஆ நிலைஇந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ப்பட்டது. ஆனால் அங்கீகாரம் பெறவில்லை.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மேற்கு வங்காள சட்டமன்றம்)
3 / 294

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha - GJM) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற, ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாகும்.[3] இந்த அரசியல் கட்சி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில், நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள், கூர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேசக் கோரிக்கைக்காக அக்டோபர் 2007 முதல் போராட்டங்கள் நடத்தியது.[4]போராட்டத்தின் விளைவாக 14 மார்ச் 2012 அன்று டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் அடங்கிய கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது.

17 செப்டம்பர் 2015 அன்று இக்கட்சிக்கு மேற்கு வங்க சட்டமன்றத்தில் 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தனர். கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்திற்கு, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு போதிய நிதி ஆதரவு வழங்காத காரணத்தினால், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் 18 செப்டம்பர் 2015 அன்று தங்கள் பதவியை இராஜினமா செய்தனர்..[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]