கூட்டுக்கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டுக்கறி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளம்

கூட்டுக்கறி (Koottukari) அல்லது கூட்டு என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் சத்யாவின் போது தயாரிக்கப்படும் முக்கியமான உணவாகும். இது வாழைக்காய் மற்றும் தேங்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் மஞ்சள் நிற கறி ஆகும். இனிமையான காரச் சுவை கொண்டது.

கூட்டுக்கறி என்பது காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கறியாகும். இந்த கறியில் சேர்க்கப்படும் காய்கறிகள் கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூசனி, கேரட், புடலங்காய், பூசனிக்காய் மற்றும் வாழைக்காய் முதலியன. மேலும் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள் கருப்பு சுண்டல், கடலைப்பருப்பு. கூட்டானது ஓணம் சதய விருந்தின் மிக முக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுக்கறி&oldid=3703854" இலிருந்து மீள்விக்கப்பட்டது