உள்ளடக்கத்துக்குச் செல்

குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு
தொகுதிமணலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-01-01)1 சனவரி 1896
அதாத், அம்பலம்காவு, திருச்சூர் நகரம், கேரளம்
இறப்பு31 ஆகத்து 1981(1981-08-31) (அகவை 85)
திருச்சூர் நகரம், கேரளம்
அரசியல் கட்சிகேரள பிரதேச காங்கிரசு குழு, இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)குரூர் மனை, அதாத்

குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு (Kurur Neelakandan Namboodiripad) சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் சீடரும் ஆவார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், குருவாயூர் சத்தியாகிரகம், வைக்கம் போராட்டம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றார்.[1] [2] [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு 1896 இல் திருச்சூர் மாவட்டத்திலுள்ள அடத் குரூர் மனையில் பிறந்தார். கொச்சி இராச்சியத்திலும், திருச்சூர் மாவட்டத்திலும் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய முதல் சில தலைவர்களில் ஒருவர். 1920இல், இவர் கோழிக்கோட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்து இந்திய விடுதலை இயக்கத்தில் சேர அனுமதி கேட்டார். ஜவகர்லால் நேருவும் இந்திரா காந்தியும் முதன்முதலில் திருச்சூர் வந்தபோது, குரூர்தான் அவர்களை வரவேற்றார். இந்திராகாந்தி பின்னர் தானும் தனது தந்தையும் குரூரின் கருத்துக்களை மதிப்பதாக கூறினார்.

இவர் திருச்சூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக இருந்தார். அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராகவும் (1922-32), கேரள காதி வாரிய செயலாளராகவும் இருந்தார். இவர், மாத்ருபூமி நாளிதழின் நிறுவனர் - இயக்குநர்களில் ஒருவராவார். இவர் கேரளாவில் காதியின் ஆரம்ப கால வீரர்களில் ஒருவர். 15 ஆகஸ்ட் 1959 அன்று இவர் எரவாக்காட்டில் காரில் பயணம் செய்தபோது ஒரு குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டார். ஆனால் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கண்ணூர் மத்திய சிறையில் நடந்த காவலர்கள் தாக்கியதில் இவர் தனது வலது காதை இழந்தார்.[4]

லோகமான்யன்[தொகு]

பி. டபிள்யூ. செபாஸ்டியனுடன் இந்திய சுதந்திர இயக்கத்திற்கு மேலும் வலுவூட்ட திருச்சூர் நகரில் லோகமான்யன் என்ற செய்தித்தாளைத் தொடங்கினார். இவர், அதன் தலைமையாசிரியராகவும், செபாஸ்டியன் அச்சுக் கோர்ப்பராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kuroor Neelakantan Namboodiripad". Niyamasabha. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.
  2. "KURUR NEELAKANDAN NAMBOODIRIPAD". Press Academy. Archived from the original on 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.
  3. "'Create awareness of freedom struggle among youth'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.
  4. "Kurur Neelakandan Namboodiripad". Mathrubhumi. Archived from the original on 2014-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.
  5. "KURUR NEELAKANDAN NAMBOODIRIPAD". Press Academy. Archived from the original on 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-20.