குருவாயூர் சத்தியாகிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருவாயூர் சத்தியாகிரகம் (Guruvayur Satyagraha) (1931-32) என்பது தற்போதைய திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் கோயிலுக்குள் தீண்டத்தகாதவர்களை அனுமதிக்கும் முயற்சியாக நடந்த சத்தியாகிரகம் ஆகும்.

பின்னணி[தொகு]

திருச்சூர், மலபார் மாவட்டத்தின் பொன்னானி வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது கேரளாவின் ஒரு பகுதியாகும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான கே. கேளப்பன் இதற்கு தலைமை தாங்கினார். பின்னர், மகாத்மா காந்தியும், இந்திய தேசிய காங்கிரசும் விடுத்த வேண்டுகோளின் காரணமாக 12 நாட்கள் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.[1] மகாத்மா காந்தி இதை "நவீன காலத்தின் அதிசயம்" என்றும் "ஆன்மீக விடுதலையின் மக்கள் சாசனம் இது ஒரு சுமிருதி" என்று பாராட்டினார்.[2] கே. கேளப்பன், ஏ. கே. கோபாலன், பி. கிருஷ்ணப் பிள்ளை, மன்னத்து பத்மநாபன், என். பி. தாமோதரன் நாயர் ஆகியோர் இந்த போராட்டத்தின் தலைவர்களாக இருந்தனர். இது ஒரு தோல்வியாகவே முடிந்தது. மேலும், அடுத்த நான்கு வருடங்கள் வரை, குருவாயூரிலோ அல்லது கேரள மாநிலத்திலுள்ள மற்ற பகுதிகளிலோ நிலைமை பெரிதாக எதுவும் மாறவில்லை. 1936 -ல் தான் கேரளாவில் பல கோவில்கள் அனைவருக்கும் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

காந்தியின் தலையீடு[தொகு]

கோவில் அறங்காவலராக இருந்த கோழிக்கோடு சாமுத்திரிகள் (கோவில் பாதுகாவலர்கள்) இரண்டாம் கட்ட போராட்டத்தின் போது இதை ஒப்புக்கொள்ள தயங்கினர். கேளப்பனும் பத்மநாபனும் 1932 செப்டம்பர் 22 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அக்டோபர் 2 அன்று காந்திஜி தலையிட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. காந்தியின் கருத்துப்படி, கேளப்பன் இரண்டு தவறுகளைச் செய்தார். முதல் நிகழ்வில், அவர் முன்பு காந்தியிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்; இரண்டாவதாக, அவர் சாமுத்திரிகளிடம் உண்ணாவிரதம் இருப்பதற்கான நியாயமான அறிவிப்பை வழங்கியிருக்க வேண்டும். கேளப்பனின் உண்ணாவிரதத்தை காந்தி கட்டாயப்படுத்தி முடித்து வைத்தார்.[3] நடந்த முக்கிய சம்பவங்களில் ஒன்று ஏ. கே.கோபாலன் சத்தியாகிரக இயக்கத்தின் எதிரிகளால் தாக்கப்பட்டார். இது கோவிலுக்குள் கட்டாயமாக நுழைய முயன்ற கிளர்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டியது. மேலும், கோவிலை தற்காலிகமாக மூடுவதற்கும் வழிவகுத்தது.[1]

கோவில் நுழைவு ஆணை[தொகு]

அதைத் தொடர்ந்து, பொன்னானி வட்டத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 77 சதவிகிதத்தினர் அனைத்து சாதியினரும் கோவில்களில் நுழைவதை ஆதரித்தனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தலைவர்கள், பின்னர் சி. இராசகோபாலாச்சாரியின் தலைமையில் ஒன்றிணைந்தனர். மற்ற இந்திய தேசிய காங்கிரசு தலைவர்கள் பி. கிருஷ்ணப் பிள்ளை, ஏ. கே. கோபாலன் ஆகியோர் இந்த முயற்சியில் பங்கேற்றனர். இந்தியாவில் 1936இல் கோவில்களில் நுழையும் உரிமை ஈழவர் போன்ற "பிற்படுத்தப்பட்ட" இந்துக்களுக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவால் கோவில் நுழைவு ஆணையின் மூலம் வழங்கப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Menon, A. Sreedhara (1967) (in en). A Survey of Kerala History. Sahitya Pravarthaka National Books. பக். 385. https://books.google.com/books?id=N7WaZe2PBy8C&newbks=0&hl=en. 
  2. Menon, Kumara Padmanabha Sivasankara (1976) (in en). Yesterday and Today. Allied Publishers. பக். 11. https://books.google.com/books?id=CUwKAQAAIAAJ&newbks=0&hl=en. 
  3. "Chapter 5" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
  4. "Welcome to Guruvayur.. The Bhooloka vaikunda". Archived from the original on 23 November 2009. பார்க்கப்பட்ட நாள் 22 January 2007.
  5. "Archived copy". Archived from the original on 11 December 2004. பார்க்கப்பட்ட நாள் 22 January 2007.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]