காதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதி அல்லது கதர் என்பது கைநூற்பு செய்யப்பட்டு கை நெசவு செய்யப்பட்ட பருத்தித் துணி. பொதுவாக காதி என்பது பருத்தித்துணியாக இருந்தாலும் இது பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இம் மூன்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கைநூற்பும் கைநெசவும் அவசியம். இயந்திரத்தால் செய்யப்பட்ட துணி காதித் துணி ஆகாது. மகாத்மா காந்தியால் [இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது அன்னிய உற்பத்தி துணிகளுக்கான உள்ளூர் மாற்றாக காதி முன்வைக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் கதராடைகள் இந்திய அரசின் ஆதரவுடன் சந்தைப்படுத்தப்படுகின்றன.

காதித் துணி கோடையில் அணிகையில் குளிர்ச்சியும் குளிர் காலத்தில் அணியும் போது கதகதப்பும் தரும். ஆனால் இது எளிதில் சுருங்கக் கூடியது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கஞ்சி போடுவதன் மூலம் காதியின் மெருகைக் கூட்டலாம்.

இந்திய தேசியக்கொடி சட்டத்தின் படி தேசியக் கொடி காதியால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆகிய கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும் பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காதி&oldid=2878156" இருந்து மீள்விக்கப்பட்டது