உள்ளடக்கத்துக்குச் செல்

குரூபர் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரூபர் அறக்கட்டளை
The Gruber Foundation
உருவாக்கம்1993
நோக்கம்அண்டவியல்
மரபியல்
நரம்பணுவியல்
நீதி
பெண்களின் உரிமைகள்
தலைமையகம்
மூலம்பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் அறக்கட்டளை
முக்கிய நபர்கள்
பாட்ரிசியா மற்றும் பீட்டர் குரூபர் (இணை-நிறுவனர்கள்)
வருவாய் (2016)
$4,681,748[1]
செலவுகள் (2016)$3,291,482[1]
வலைத்தளம்gruber.yale.edu

குரூபர் அறக்கட்டளை (Gruber Foundation) என்பது பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் ஆகியோரால் நிறுவப்பட்ட ஓர் உதவி அறக்கட்டளையாகும் , இது நி யூ ஏவன் கனெக்டிகட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.[2] அதன் நோக்கம் அண்டவியல்,, மரபியல், நரம்பியல், அறிவியல், நீதி, பெண்கள் உரிமைகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவதை மதித்து ஊக்குவிப்பதும் ஆகும். இது குரூபர் பரிசுகள், இளம் அறிவியலாளர் விருதுகள் , குரூபர் அறிவியல் நல்கைத் திட்டம , யேல் சட்டப் பள்ளியில் உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் திட்டம் எனும் மூன்று முதன்மைத் திட்ட முன்முயற்சிகளை உள்ளடக்கியதாகும்..[3]

குருபர் பரிசுகள்

[தொகு]

பன்னாட்டுப் பரிசுத் திட்டம் ஆண்டுதோறும் பின்வரும் குரூபர் பரிசுகளை வழங்குகிறது:

  • அண்டவியல் துறையில் குரூபர் பரிசு முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[4]
  • மரபியலில் குரூபர் பரிசு முதன்முதலில் 2001 இல் வழங்கப்பட்டது[5]
  • நரம்பியல் அறிவியலில் குரூபர் பரிசு முதன்முதலில் 2004 இல் வழங்கப்பட்டது.[6]
  • 2001 முதல் 2011 வரை வழங்கப்பட்ட நீதிக்கான குரூபர் பரிசு
  • 2003 முதல் 2011 வரை பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் பரிசு

இந்தப் புலங்களில் முக்கிய அறிவியலாளர்கள், சமூக அறிவியலாளர்கள், சட்ட வல்லுநர்களுக்கு வழங்கப்படும் இப்பரிசுகள் தங்கப் பதக்கத்தையும் , 500,000 அமெரிக்க டாலர் காசுப் பரிசையும் வழங்குகின்றன.[7]

இளம் அறிவியலாளர், விருதுகள் திறமையான தொடக்க காலத் தொழில் வல்லமைக்காக பன்னாட்டு அறிவியலாள்களுக்கு முதன்மை அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து தேர்ந்தெடுத்து வழங்கப்படுகின்றன.

  • பன்னாட்டு வானியல் ஒன்றிய உதவித்தொகை[4]
  • உரோசலிண்டு பிராங்க்ளின் இளம் புலனாய்வாளர் விருது அமெரிக்காவின் மரபியல் கழகம், அமெரிக்க மனித மரபியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது.[8]
  • நரம்பியல் அறிவியலில்[6] பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் பன்னாட்டு ஆராய்ச்சி விருது- நரம்பியல் கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது
  • பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் விருதுகள் இஸ்ரேலில் உள்ள இ ரெகோவோட்டில் உள்ள வீசுமன் அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. [9]

குரூபர் அறிவியல் உதவித்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குரூபர் அறிவியல் உதவித்தொகை யேல் அறிவியல், கலைப் பட்டப்படிப்புப் பள்ளி வழங்கும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளாகும்.[10][11] ஆண்டுதோறும் சுமார் 20 பேர் மட்டுமே யேல் பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை அறிவியல் , அண்டவியல், வானியற்பியல் ஆகிய துறைகளில் முனைவர் பட்டப் படிப்பில் மிக உயர்ந்த தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்களின் சிறந்த சாதனைகள், விதிவிலக்கான வாக்குறுதிகளை ஏற்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.[12] பங்கேற்கும் யேல் முனைவர் பட்டப் படிப்புகளில் பின்வருவன அடங்கும்.

உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் திட்டம்

[தொகு]

யேல் சட்டப் பள்ளியால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் திட்டம் முந்தைய நீதி, பெண்கள் உரிமைகள் பரிசுகளின் பணிகளோடு தொடர்ந்து விரிவடைகிறது.[13] தற்போது இந்த திட்டம் நான்கு முதன்மைக் கூறுகளைக் கொண்டுள்ளது.

  • உலகளாவிய அரசியலமைப்பு கருத்தரங்கு[14]
  • உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகள் குறித்த குரூபர் புகழ்பெற்ற சொற்பொழிவுகள்[15]
  • குரூபர் உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகள் உதவித்தொகை[16]
  • உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளில் குரூபர் திட்டம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Peter and Patricia Gruber Foundation" (PDF). Foundation Center. 2 August 2017. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018.
  2. "Yale and Patricia and Peter Gruber Announce Establishment of the Gruber Foundation at Yale". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  3. "The Gruber Foundation". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  4. 4.0 4.1 "IAU and the Gruber Foundation". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  5. "2001 Gruber Genetics Prize Press Release Rudolf Jaenisch, Gene Transfer Pioneer, Receives First-Ever International Genetics Prize". Gruber Foundation. 2001. பார்க்கப்பட்ட நாள் 4 August 2015.
  6. 6.0 6.1 "The Gruber Foundation Neuroscience Prize". Society for Neuroscience. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  7. "Gruber Prizes". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  8. "Rosalind Franklin Young Investigator Award". Genetics Society of America. Archived from the original on 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  9. "The Gruber Award". Weizmann Institute of Science. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  10. "Gruber Science Fellowship". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  11. "Grad school to increase science admits". Yale Daily News. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  12. "Gruber Science Fellowships: Moving research forward through education". Yale University. 21 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  13. "Gruber Program for Global Justice and Women's Rights". Yale Law School. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  14. "Global Constitutionalism Seminar". Yale Law School. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  15. "Gruber Lectures". Yale Law School. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  16. "Gruber Fellowships". Yale Law School. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூபர்_அறக்கட்டளை&oldid=3935869" இலிருந்து மீள்விக்கப்பட்டது