வைசுமன் அறிவியல் கழகம்
מכון ויצמן למדע | |
முந்தைய பெயர் | தானியல் சியெப்பு ஆய்வுக் கழகம் (1934-1949) Daniel Sieff Research Institute (1934-1949) |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1934 |
நிறுவுனர் | சைம் வைசுமன் |
தலைவர் | Prof. தானியல் சைஃவுமன் (Daniel Zajfman) |
கல்வி பணியாளர் | 952 |
நிருவாகப் பணியாளர் | 400 |
மாணவர்கள் | 1,082 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 356 |
700 | |
அமைவிடம் | , |
வளாகம் | நகரப்புறம் |
Postdoctoral fellows | 380 |
இணையதளம் | www.weizmann.ac.il |
வைசுமன் அறிவியல் கழகம் வைசுமன் அறிவியல் கழகம் ( Weizmann Institute of Science, எபிரேயம்: מכון ויצמן למדע Machon Weizmann LeMada) ஓர் பொதுப் பல்கலைக்கழகமும் ஆய்வுநிலை பல்கலைக்கழகமும் ஆகும். இது இசுரேலில் இரெஃகோவோத்து (Rehovot) என்னும் இடத்தில் இருக்கும் பல்கலைக்கழகம். தெல் அவீவ் நகரத்திற்குத் தெற்கில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் இசுரேல் நாடு உருவாவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பாக 1934 இல் நிறுவப்பட்டதாகும். இப்பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலிலும் துல்லிய அறிவியலிலும் மேற்பட்டப் படிப்பும் ஆய்வுநிலைப் படிப்பும் மட்டுமே உள்ள பல்கலைக்கழகமாகும்.
பல்துறை ஆய்வு நடுவமாகிய இதில் 2,500 அறிவியலாளர்களும், முதுமுனைவர்களும் முனைவர்ப்பட்ட, மேற்பட்டப்படிப்பு மாணவர்களும் நுட்ப உதவியாளர்களும் நிருவாக உதவியாளர்களும் உள்ளனர்[1][2]
இப்பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்களாகவும் மூன்று பேர் தூரிங்கு விருது பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
வரலாறு
[தொகு]இப்பல்கலைக்கழகம் 1934 இல் சைம் வைசுமன் (Chaim Weizmann) என்பவரால் தானியெல் சியெஃபு ஆய்வுக் கழகமாக (Daniel Sieff Research Institute) நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பை வேதியியல் நோபல பரிசு பெற்ற பிரிட்சு ஆபர் (Fritz Haber) அவர்களுக்கு நல்கினார். பின்னர் அவர் இறந்த பிற்பாடு தானே இயக்குநராக இருந்தார். வைசுமன் 1949 ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் இசுரேலின் தலைவராகப் பதவி ஏற்கும் முன் கரிம வேதியியலில் ஆய்வு செய்துவந்தார். பின்னர் நவம்பர் 2, 1949 இல் இந்நிறுவனம் வைசுமன் அறிவியற்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர் மாற்றம் சியெஃபு (Sieff) குடும்பத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Scientific Activities: The Yeda-Sela (YeS) Center for Basic Research". Archived from the original on 27 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Facts and Figures - Weizmann Institute of Science". Archived from the original on 16 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
வெளியிணைப்புகள்
[தொகு]- Weizmann Institute of Science Website (ஆங்கிலம்)
- The Institute's scientific activities பரணிடப்பட்டது 2019-04-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Full list of past officers of the Weizmann Institute
- Institute's blog on ScienceBlogs
- American Committee for the Weizmann Institute of Science (ஆங்கிலம்)