குயின்சுலாந்து, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குயின்ஸ் லேண்ட் (Queens Land) என்பது தமிழ்நாட்டின், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பொழுது போக்குப் பூங்கா ஆகும். இது 2003, ஆகத்து மாதம் திறக்கப்பட்டது. இது 70 ஏக்கர் பரப்பளவில் (28 எக்டேர் ) அமைந்துள்ளது.

பொதுத் தகவல்கள்[தொகு]

இந்தப் பூங்கா சென்னை- பெங்களூர் தேசிய செடுஞ்சாலையில் திருபெரும்புதூர் பூந்தமல்லி ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது. இங்கு மகிழுந்துகள் நிறுத்த போதுமான இடவசதி உள்ளது. இந்தப் பூங்காவிற்கு கிண்டி, தி நகர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையில் இருந்து திருபெரும்புதூர் செல்லக்கூடிய அனைத்துப் பேருந்துகளும் குயின்ஸ் லேண்டில் நிறுத்தம் உள்ளது. இந்தப் பூங்காவை நிறுவியவர் இஷாந்த் பங்வால் என்பவராவார். பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 550 ரூபாய், குழந்தைகளுக்கு 450 ரூபாய் ஆகும். 2 அடிக்கும் (0.61 மீ) குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

பூங்கா வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமைறை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 7:30 மணி வரையும் திறந்திருக்கும்.அரசு விடுமுறை வராத திங்கட்கிழமைகளில் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுகிறது.

பூங்காவில் உணவகம், குடிநீர் வசதிகள் உள்ளன.

சவாரிகள்[தொகு]

கப்பல்கொடி என்னும் கோபுர வீழ்ச்சி சவாரி
கம்பிவட கூண்டுப் பயணம்

இங்கு சவாரிகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு 51 சவாரிகள் உள்ளன, அதில் 33 பெரியவர்களுக்கானது, 18 சவாரிகள் சிறுவர்களுக்கானது.

இங்கு உள்ள சில தண்ணீர் விளையாட்டுகள் நண்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறன. தண்ணீர் விளையாட்டுகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு ஆடைகள் இங்கு கிடைக்கின்றன. இங்கு பெண்கள், ஆண்களுக்கு என தனித்தனியான நீச்சல் குளங்கள் உள்ளன.

நேர்ச்சி[தொகு]

இந்தப் பூங்கா 2008 ஆம் ஆண்டு 11 வயது சிறுமி ஏரியில் படகு பயணத்தின்போது இறந்த காரணத்தால் சில கிழமைகள் மூடப்பட்டது.[1] இந்த மரணத்தின் காரணமாக ஏழு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Girl, 11, Dead in Amusement Park Accident". Amusement Safety Organization.