டேஷ் இன் ஸ்பிளாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேஷ் இன் ஸ்பிளாஸ் (Dash N Splash) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தண்ணீர் விளையாட்டை மையமாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா 1995 முதல் இயங்கிவருகிறது, இதுதான் சென்னையின் முதல் தண்ணீர் பொழுது போக்குப் பூங்கா ஆகும். சென்னை நகரின் வெப்பம், வியர்வை, தூசு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புத்துணர்வு பெறும்விதமாகத் தண்ணீர் பூங்கா திறக்கும் யோசனையின் பேரில் நடிகர் சூர்யாவால் இந்தப் பூங்கா திறக்கப்பட்டது. பூங்காவில் முழுமையாக முழு புத்துணர்ச்சியடையவும், தளர்வை நீக்கும் வகையில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளது. இந்தப் பூங்காவில் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வகையில் நீர் தேக்கங்கள் மற்றும் நீர் சரிவுகள் உள்ளன.[1] இந்தப் பூங்கா தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

பூங்காபற்றி[தொகு]

டேஷ் இன் ஸ்பிளாஸ் பூங்காவின் பெரும்பகுதி மேவலூர் குப்பம் கிராமத்திற்கு உட்பட்டது. இதன் எண்ணற்ற நீர் விளையாட்டுகள், நீர் சரிவுகள் போன்றவை பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருந்தது. இங்குள்ள குறிப்பிடத்தக்க நீர் விளையாட்டுகள் அலை ஸ்லைடு, விழும் ஸ்லைடு மற்றும் சுழல் ஸ்லைடு போன்றவற்றுடன், நீச்சல் குளம், செயற்கை மழை, அனைத்து வயதினருக்குமான அருவி போன்றவையும் உள்ளன.[1]

இடம்[தொகு]

இது பூந்தமல்லிக்கு அருகில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH4) சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் உள்ளது. இது 21 ஏக்கர்கள் (8.5 ha) பரப்பளவில், மேலவாக்கம் கிராமத்தில் உள்ள தெலுங்கு கங்கைத் திட்டம் கால்வாய் மற்றும் சவீதா பொறியியல் கல்லூரிக்கு அருகில் உள்ளது.

நேரம்[தொகு]

ஆண்டு முழுவதும் காலை 10.00 மணிமுதல் மாலை கதிரவன் மறையும்வரை அனுமதி உண்டு.[2] பூங்காவில் ஸ்லைடு சவாரி, சுழல் சவாரி, தடையற்ற வீழ்ச்சி, அலை ஸ்லைடு மற்றும் பல பொழுதுபோக்கு சவாரிகள் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chennai: Dash 'N Splash, Chennai TOurist Places to Visit for Amusement Park". Must See India. Archived from the original on 17 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dash N Splash - Fun Spot". Chennai Online இம் மூலத்தில் இருந்து 2009-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090504134508/http://archives.chennaionline.com/toursntravel/placesofinterest/dashnsplash.asp. 
  3. "Where summer is fun". The Hindu. 15 May 2000 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110218190610/http://www.hinduonnet.com/thehindu/2000/05/15/stories/09150654.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேஷ்_இன்_ஸ்பிளாஸ்&oldid=3930563" இலிருந்து மீள்விக்கப்பட்டது