கிஷ்கிந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷ்கிந்தாவில் தொடர் வண்டி

கிஷ்கிந்தா (Kishkinta) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு பொழுது போக்குப் பூங்கா ஆகும்.[1] இது வண்டலூர் தொடர்வண்டி நிலையத்திற்கருகில், அமைதியான சூழ்நிலையில், அனகாபுத்தூரிலிருந்து 13 கி.மீ தெற்கே உள்ளது. இதை நிறுவியவர் நவோதயா ஸ்டுடியோ உரிமையாளரான அப்பச்சன் ஆவார். இந்த பூங்கா 12 ஏக்கர் பரப்பளவில் கண்ணுக்கினிய தாவரங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் அலை குளங்கள், நீர் சவாரிகள், ரோலர் கோஸ்டர், சிறுவர் தொடர்வண்டி முதலியன உள்ளன குறிப்பாக சுற்றுலா வரும் குழந்தைகளைக் கவரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.[2] இதன் பெயர் இராமாயணக் காவியத்தின் கதையில் வரும் ஒரு நாட்டின் பெயரான கிட்கிந்தையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்கிந்தா&oldid=3366180" இலிருந்து மீள்விக்கப்பட்டது