கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர்சுவாமி கோயில்
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர்சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | மடத்துத்தெரு, கும்பகோணம், கும்பகோணம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கும்பகோணம் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
கோயில் தகவல் | |
மூலவர்: | காளஹஸ்தீஸ்வரர் |
தாயார்: | ஞானாம்பிகை |
சிறப்புத் திருவிழாக்கள்: | பங்குனி உத்திரம், மகம், நவராத்திரி, தீபாவளி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை சன்னதிகளும், துர்க்கை, விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் காரணாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி, புரட்டாசி, ஐப்பசி மாதம் மகம், நவராத்திரி, தீபாவளி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)