உள்ளடக்கத்துக்குச் செல்

குந்துகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்துகை (Squatting) அல்லது ஆக்கிரமிப்பு என்பது கைவிடப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்படாத நிலம் அல்லது ஒரு கட்டிடத்தை ஆக்கிரமிப்பதாகும். பரவலாக ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள ஒருவர் அதனை சொந்தமாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது வாடகைக்கு விடவோ சட்டப்பூர்வ அனுமதி இல்லை . ஐக்கிய நாடுகள் சபை 2003 இல் உலகளவில் ஒரு பில்லியன் குடிசைவாசிகள் மற்றும் குடியேற்றவாசிகள் ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. குந்துகை என்பது உலகளவில் நிகழ்கிறது மற்றும் ஏழை மற்றும் வீடற்ற மக்கள் காலியான கட்டிடங்கள் அல்லது வீடுகளை ஆக்கிரமிக்கின்றனர்.

கண்ணோட்டம்

[தொகு]
அரசின்மைவாதி கொடிகளை ஏந்திய பங்கேற்பாளர்களுடன், கிரீசில் குந்துகைக்கான ஆதரவுப் போராட்டம்

பரவலாக ஏழை மற்றும் வீடற்ற மக்கள் நகர்ப்புற வீட்டுத் தோட்டம் மூலம் பாழடைந்த சொத்துகள் அல்லது நிலத்தைப் பயன்படுத்தும்போது இது நிகழ்கிறது. [1] ஐக்கிய நாடுகள் அவையின் வாழ்விட அறிக்கை 2003இன்படி ஒரு பில்லியன் மக்கள் சேரி உட்பட சில இடங்களில், சட்டபூர்வமற்ற குடியேற்றக்காரர்களாக இருந்தனர். [2] கேசியா ரீவ் என்ற கல்வியாளரின் கூற்றுப்படி, "குந்துகை என்பது கொள்கை மற்றும் கல்வி விவாதங்களில் இருந்து பரவலாக உள்ளடங்காததும் மற்றும் இது ஒரு பிரச்சனையாகவோ, ஓர் அறிகுறியாகவோ அல்லது வீடு சார் அல்லது சமூக இயக்கமாகவோ அரிதாகவே பார்க்கப்படுகிறது." [3]

இது அரசின்மை, தன்னாட்சி அல்லது சமூகவுடைமை போன்ற அரசியல் இயக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகவோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையாகவோ இருக்கலாம். குந்துகைகளை உள்ளூர் சமூகங்கள் இலவச கடைகளாகவோ, சிற்றுண்டியகம், பல்நோக்கு தன்னாட்சி சமூக மையங்களாகவோப் பயன்படுத்தலாம். [4] டச்சு சமூகவியலாளர் ஹான்ஸ் ப்ரூயிட், இவர்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்: [4]

  1. பற்றாக்குறை அடிப்படையிலானவர்கள் - வீடற்ற மக்கள் வீட்டுத் தேவைக்காக ஆக்கிரமித்தல்.
  2. ஒரு மாற்று தங்குமிட உத்தி - நகராட்சிப் பட்டியலின் படி வீடு கிடைக்கக் காத்திருக்கத் தயாராக இல்லாத மக்கள் நேரடியாக தாங்களே குடியிருப்புகளை அமைத்துக்கொள்ளுதல்.
  3. தொழில்முனைவோர் - மலிவான அருந்தகம்,மன்றம் போன்றவற்றுக்கான சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நுழைகிறார்கள்.
  4. பாதுகாப்பு - நினைவுச்சின்னங்களை அதிகாரிகள் அழிய விடாமல் பாதுகாத்து வருதல்.
  5. அரசியல் - போராட்டங்கள் அல்லது சமூக மையங்களை உருவாக்குவதற்காக கட்டிடங்களை முற்றுகையிடும் ஆர்வலர்கள்

ஆசியா, தெற்கு மற்றும் கிழக்கு

[தொகு]
மும்பையில் தெருவில் வசிப்பவர்கள்

மும்பையில் 10 முதல் 12 மில்லியன் மக்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் குந்துகையாளர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் ஆறு மில்லியன் பேர் குடியேற்றவாசிகள் ஆவர். குடியேற்றவாசிகள் பல்வேறு வழிகளில் வாழ்கின்றனர். சிலர் செங்கல் மற்றும் பைஞ்சுதையால் கட்டப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாடி வீடுகளைக் கொண்டுள்ளனர், அவற்றில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கீதா நகர் என்பது கொலாபாவில் உள்ள இந்திய கடற்படை வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு குடியேற்ற கிராமமாகும். மலாடு கிழக்கில் உள்ள ஸ்குவாட்டர் காலனி 1962 ஆம் ஆண்டு முதல் உள்ளது, தற்போது அங்கு வசிக்கும் மக்கள் மாதந்தோறும் 100 ரூபாவை நகர சபைக்கு வாடகையாக செலுத்துகின்றனர். தாராவி ஒரு மில்லியன் குடியேற்றவாசிகளைக் கொண்ட சமூகமாகும். அங்கு அமைந்துள்ள கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் சட்டவிரோதமானவை மற்றும் கட்டுப்பாடுகள் அற்றவை.ஆனால், அவை ஒவ்வொரு நாளும் $1 மில்லியனுக்கும் அதிகமான வணிகத்தைச் செய்வதாகக் கூறப்படுகிறது. [5]

சான்றுகள்

[தொகு]
  1. Peñalver, Eduardo M. (March 25, 2009). "Homesteaders in the Hood". Slate Magazine. Archived from the original on April 9, 2009. பார்க்கப்பட்ட நாள் April 17, 2009.
  2. Payne, G. (2012), Smith, Susan J. (ed.), "Self-Help: Land Development", International Encyclopedia of Housing and Home, San Diego: Elsevier, pp. 297–303, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-08-047163-1.00040-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-047171-6, archived from the original on 2022-01-24, பார்க்கப்பட்ட நாள் 2021-03-02
  3. Reeve, Kesia (2005), "Squatting Since 1945: The enduring relevance of material need", in Somerville, Peter; Sprigings, Nigel (eds.), Housing and Social Policy, London: Routledge, pp. 197–216, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-28366-3
  4. 4.0 4.1 Pruijt, Hans (2011). "Logic of Urban Squatting". International Journal of Urban and Regional Research: 1–8. http://repub.eur.nl/pub/25656. பார்த்த நாள்: 2015-11-05. 
  5. Neuwirth, R (2004) Shadow Cities: A Billion Squatters, A New Urban World, pp. 110–114. Routledge பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-93319-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்துகை&oldid=3787974" இலிருந்து மீள்விக்கப்பட்டது