குடிமகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிமகான்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பிரகாஷ். என்
தயாரிப்புஎஸ். சிவகுமார்
எஸ். சுகந்தி
எஸ். பிரபஞ்சு
கதைசிறீ
இசைதனுஜ் மேனன்
நடிப்பு
ஒளிப்பதிவுமெய்யேந்திரன்
படத்தொகுப்புசிபு நீல் பிஆர்
கலையகம்சினாரியோ மீடியா ஒர்க்சு
வெளியீடுமார்ச்சு 17, 2023 (2023-03-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடிமகான் (Kudimahaan) என்பது 2023 இல் பிரகாஷ். என் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சிவன், சாந்தினி, தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சேது இராமன், நமோ நாராயணா, கதிரவன், ஆனஸ்ட் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்திருந்தார். திரைப்படம் 2023 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்[தொகு]

  • விஜய் சிவன் - மதி
  • சாந்தினி தமிழரசன் - பவித்ரா
  • சுரேஷ் சக்கரவர்த்தி - சுந்தரம்
  • நமோ நாராயணா - மதுசூதனன்
  • ஜி. எஸ். சேதுராமன் - மாப்பிள்ளை
  • ஜி. ஆர். கதிரவன் - அமிர்தம்
  • கேபிஒயி ஆன்ஸ்ட் ராஜ் - அவசரம்
  • அரவிந்த் ஜானகிராமன் - காசு முகவர் மேலாளர்
  • லவ்லி ஆனந்து - சர்வானந்தம்
  • மாசுட்டர் அஜய் கிருஷ்ணா - சந்தோசு
  • டி. என். இவ்யா தரணி - சஞ்சனா
  • பார்த்தசாரதி - நிகழ்ச்சி மேலாளர்

தயாரிப்பு[தொகு]

இப்பட முன்னோட்டச் சுவரொட்டியை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் ஆகியோர் சனவரி மாதம் வெளியிட்டனர். [3] படத்தை சினாரியோ மீடியா ஒர்க்சு நிறுவனம் தயாரித்தது. [4]

வரவேற்பு[தொகு]

இப்படம் 2023 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள், பார்வையாளர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. [5] டைம்சு ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் 5-இற்கு 3.5 மதிப்பீடு கொடுத்தார். மேலும் "இரண்டாம் பாதியில் ஒரு தேவையற்ற பாடலைத் தவிர, பின்னணி இசை ஒரு குறிப்பிட்ட தனித்துவத்துடன் இருந்தது" என்றும் குறிப்பிட்டார். [6] தினமலரின் ஒரு விமர்சகர், ''நட்சத்திர செல்வாக்கில் உள்ள சில நடிகர்கள் நடித்திருந்தால் படம் இன்னும் கவனத்தை ஈர்த்திருக்கும்'' என்று குறிப்பிட்டு 5 இல் 2.75 மதிப்பீட்டைக் கொடுத்தனர் [7] தினத்தந்தி ஒரு விமர்சகர் "குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம்" என்று எழுதினார். [8] மாலை மலர் ஒரு விமர்சகர் 5இற்கு 3 மதிப்பீட்டை அளித்து, "சில இடங்களில் சிரிக்க வைக்காமல் சில இடங்களில் சிரிக்க வைக்க திரைக்கதை அமைத்துள்ளார்" என்று எழுதினார். [9] சௌத் பஃஸ்டிலிருந்து கே. ஆர். மணிகண்டன் விமர்சகர், "பெரிய நட்சத்திரங்கள் இல்லை, பெரிய நகைச்சுவை நடிகர்கள் இல்லை, பெரிய நிறுவனங்கள் இல்லை, இன்னும், குடிமகான் மிகவும் பொழுதுபோக்காவும், உங்கள் நேரம் மற்றும் பணத்திற்கு மதிப்புள்ளதாகவும் இருந்தது." என்று எழுதினார்.[10] சினிமா விகடனிலிருந்து ஒரு விமர்சகர் கதாபாத்திரங்களை திறமையாகப் பயன்படுத்தியதற்காக எழுத்தாளரையும் இயக்குநரையும் பாராட்டினார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kudi Mahaan is a family entertainer". deccan chronicle. http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=17025244. 
  2. "Kudimahaan Movie Review : Inventive plot and hilarious moments elevate this quirky comedy". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kudimahaan/movie-review/98739463.cms. 
  3. "The movie Kudimahaan is based on both friendship and faith directed by N Prakash". chennai patrika. http://chennaipatrika.com/entertainment/post/The-movie-Kudimakhan-is-based-on-both-friendship-and-faith-Directed-by-N-Prakash. 
  4. "Kudi Mahaan is a family entertainer". deccan chronicle. http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=17025244. 
  5. "Kudimahaan movie review". Behindwoods. https://m.behindwoods.com/amp/tamil-movies/kudimahaan/kudimahaan-review.html. 
  6. "Kudimahaan Movie Review : Inventive plot and hilarious moments elevate this quirky comedy". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kudimahaan/movie-review/98739463.cms. 
  7. "குடிமகான் - விமர்சனம் {2.75/5} : குடிமகான் - குடி(கடி)க்காத மகன்… - KudiMahaan". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  8. "குடிமகான்: சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. 2023-03-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  9. "KudiMahaan". www.maalaimalar.com. 2023-03-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  10. "Kudimahaan review: Prakash N's latest directorial makes you laugh your worries away". The South First. 2023-03-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  11. "குடிமகான் விமர்சனம்: மது அருந்தாமலே போதையாகும் விநோத நோய்; கலக்குகிறதா இந்த காமெடி சினிமா". 18 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிமகான்&oldid=3826223" இலிருந்து மீள்விக்கப்பட்டது