கிருட்டிணகிரி மாவட்டப் பாளையங்கள்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தமிழகத்தின் கிருட்டிணகிரி மாவட்டப் பகுதிகளில் விசயநகர பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில், இப்பகுதிகளை நிர்வகித்துவந்த தலைவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை பாளையங்களாக உருவாக்கிட அவர்கள் பாளையக்காரர்களாக அறியப்பட்டார்கள். அத்தகைய பாளையங்களில் தேன்கனிக்கோட்டை, செகதேவி, பாகலூர், சூளகிரி, இரத்தினகிரி, ஆலம்பாடி பாளையங்கள் குறிப்பிடத்தக்கன.
பாகளூர் பாளையம் என்பது இன்றைய ஒசூர் வட்டத்தில் ஒசூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணையாற்றங்கரையில் 89 கிராமங்களை உள்ளடக்கிய பாளையமாகும். குப்பல்ல குர்ரப்ப நாயக்கனால் போசாள மன்னன் இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் கி.பி. 1207இல் உருவானது இந்த பாகளூர் பாளையம். ஒசூர் நரத்தின் வளர்ச்சியில் பாகளூர் பாளையக்காரர் குத்தல குர்ரப்ப நாயக்கனின் பங்கு முக்கியமானது. ஆங்கிலேயருக்கும் ஐதர் அலி ,திப்பு சுல்தான் ஆகியோருக்கு நடந்த போர்களில் பாகளூர் பாளையக்காரர்கள் முக்கிய பங்குவகித்தனர். இவர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்ததால் ஆங்கிலேயர் காலத்திலும் பாகளூர் பாளையம் தொடர்ந்து நீடித்தது. 21.10.1904இல் ரெவின்யு போர்டு உத்தரவுப்படி பாளையத்தினிடமிருந்து கிராமங்கள் விடுதலைப் பெற்றன.
பேரிகை பாளையம்
[தொகு]பேரிகை பாளையமும் மைசூர் போர்களின் போது ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த பாளையமாகும். ஐந்தாவது பாளையக்காரரின் மகள் குப்பம்மாள் கட்டிய பெரிய ஏரி இன்றும் பாளையக்காரர்களின் ஆட்சியின் சின்னமாக விளங்குகிறது.
செகதேவி பாளையம்
[தொகு]செகதேவி பாளையம் எ்ன்பது கிருட்டிணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் செகதேவி என்னும் சிற்றூரை மையமாகக் கொண்டு இருந்தது. பாராமகால் கோட்டைகளில் ஒனாறாகிய செகதேவி துர்கம் இங்கு சிதைந்த நிலையில் மலைமேல் உள்ளது.
இரத்தினகிரி பாளையம்
[தொகு]இரத்தினகிரி பாளையம் என்பது தேன்கனிக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. 1799 ஆம் ஆண்டு கேப்டன் இர்டன் என்பவன் இரத்தினகிரி பாளையத்தைக் கைப்பற்றினான் அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது.இப்போது சிற்றூராக சிதைந்த கோட்டைச் சுவடுகளுடன் காணப்படுகிறது.
சூளகிரி பாளையம்
[தொகு]சூளகிரி பாளையம் கோட்டையுடன் இருந்தது இக்கோட்டை வீரசைவ மரபைச்சேர்ந்த பாளையக்காரரால் கட்டப்பட்டதாகும்.
உசாத்துணை
[தொகு]கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுச் சுவடுகள், புலவர் கோவிந்தன். வெளியீடு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம்.