கின்னல் கைவினைப் பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்னல் பொம்மைகள்

கின்னல் கைவினைப் பொருட்கள் (Kinnal Craft)(கன்னடம்: ಕಿನ್ನಾಳ ಕಲೆ), என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள கின்னல் அல்லது கின்ஹால் நகரத்தில் உள்ள ஒரு பாரம்பரிய மர கைவினை பொருளாகும் ஆகும்.[1][2]

இந்த நகரம் கின்னல் பொம்மைகள் மற்றும் மத சிலைகளுக்குப் பிரபலமானது. சமீபத்தில் இந்த கைவினைக்கு புவியியல் சார்ந்த குறியீடு தகுதி வழங்கப்பட்டது. இதற்கான பு.கு.எ. விண்ணப்ப எண் 213* ஆகும்.

வரலாறு[தொகு]

கின்னல் ஒரு காலத்தில் கைவினைப்பொருட்களுக்கான செழிப்பான பிரபலமான இடமாக இருந்தது. மரத்தில் செதுக்கப்படும் பொருட்களுக்காக இது மிகவும் பிரபலமானது. பம்பாபதேசுவரர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற சுவரோவியங்கள் மற்றும் அம்பியில் உள்ள மரத் தேரில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள், இன்றைய கின்னல் கைவினைஞர்களின் முன்னோர்களின் படைப்புகள் என்று கூறப்படுகிறது. கைவினைஞர் ஒருவரின் மூதாதையர் வீட்டில் காணப்படும் பழைய காகித தடயங்கள் இந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

2007ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் கிளாஸ்கோ கலைப் பள்ளியின் மாணவர்கள், கருநாடகாவின் கைவினைக் குழுவுடன் இணைந்து, உள்ளூர் மாணவர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து கின்கால் கைவினைப்பொருளை புதுப்பிக்கும் முயற்சியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினர்.[3]

முறை[தொகு]

கைவினைஞர்கள் சித்ரகரா என்று அழைக்கப்படுகிறார்கள். பொம்மைகளுக்கு இலகு வகை மரம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் பசையானது புளி விதைகள் மற்றும் கூழாங்கற்களால் ஆனது. சணல் கந்தலை, ஊறவைத்து, துண்டுகளாக நறுக்கி, உலர்த்தி, பொடி செய்து, மரத்தூள் மற்றும் புளி விதை விழுது கலந்து கிட்டாக தயாரிக்கப்படுகிறது. திரவப் பசையுடன் கூடிய கூழாங்கல் தூள் கலவையானது உருவத்தின் உடலில் உள்ள அலங்காரம் மற்றும் நகைகளைப் பொறிக்கப் பயன்படுகிறது. உருவத்தின் கூறுகள் கூடியதும், கிட்டாவைக் கையால் தடவி, சிறிய பருத்தித் துண்டுகள் புளி விழுதுடன் ஒட்டப்படும். இதற்கு மேல் கூழாங்கல் பசைப் பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணப்பூச்சு பயன்பாட்டிற்கான அடிப்படையை உருவாக்குகிறது.

முன்னதாக, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களைச் சித்தரிக்கும் பொம்மைகள் பிரபலமாக இருந்தன. இப்போது உருவங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் செய்யப்படுகின்றன. இதிகாசப் பறவையான கருடனுக்கு 12 கூறுகளும், சிம்மாசனத்தில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு 22 கூறுகளும் உள்ளன. வடிவமைப்பு யதார்த்தமானது மற்றும் வடிவமைப்பு, செதுக்கலில் கலை நுணுக்கச் செயல்பாடு உள்ளது. திருவிழாக் காலங்களில், களிமண் பொம்மைகள் மற்றும் உருவங்கள் பெரும்பாலும் மாட்டுச் சாணம் மற்றும் மரத்தூள் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kinnal Craft". Glasgow Kinnal Project. Archived from the original on 28 January 2008. பார்க்கப்பட்ட நாள் 16 April 2006.
  2. "Reviving Kinnala art". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/reviving-kinnala-art/article4322206.ece. 
  3. "Kinhal Toys – Training Project" (PDF). Crafts Council of India. p. 24. Archived from the original (PDF) on 24 April 2009. பார்க்கப்பட்ட நாள் 14 August 2008.