நாவல்குந்த் கம்பளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவல்குந்த் கம்பளம்
வேறு பெயர்கள்நாவல்குந்த் துரிகுலு
வகைவிரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகள்
இடம்நாவல்குந்த், தார்வாட் மாவட்டம்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது27 சூன் 2011
பொருள்பருத்தி வகை

நாவல்குந்த் கம்பளம் (Navalgund durrie) நாவல்குந்த் துரிகலு எனவும் அறியப்படும் இது இந்தியாவில் இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியலில் குறியிடப்பட்ட[1] பறவைகள் மற்றும் விலங்கு வடிவமைப்புகளுடன் நெய்யப்படும் ஓர் கம்பளமாகும். இது பெரும்பாலும் இந்தியாவின் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் வடிவமைப்பக்கப்படுகிறது.[2]

வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ் பாதுகாப்பிற்காக இந்தக் கம்பளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 இல், இது இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியல் சட்டம் 1999ன் கீழ் "நாவல்குந்த் கம்பளங்கள்" என்று பட்டியலிடப்பட்டது.[3]

அமைவிடம்[தொகு]

கையால் செய்யப்பட்ட நாவல்குந்த் கம்பளங்கள் தயாரிக்கப்படும் நாவல்குந்த் நகரம் 15°34′12″N 75°22′12″E / 15.57000°N 75.37000°E / 15.57000; 75.37000 என்றபுவியியல் ஒருங்கிணைப்புகளுக்குள் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

கன்னட மொழியில் "ஜும்கானா" குல்லு என்றும் அழைக்கப்படும் நாவல்குந்த் துரிகலு, ஆரம்பத்தில் அலி ஆதில் ஷாவின் ஆட்சியின் போது ஜம்கான் குல்லியில் வசித்து வந்த பிஜாப்பூரின் நெசவாளர்களின் குழுவால் செய்யப்பட்டது. ஆதில் ஷாக்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையிலான போரின் விளைவாக, ஜம்கான் நெசவாளர்கள் தங்கள் வணிகத்தைத் தொடர பாதுகாப்பான இடத்தைத் தேடினர், எனவே நாவல்குந்திற்கு குடிபெயர்ந்தனர். ஆரம்பத்தில் முத்து வியாபாரம் செய்து வ்ந்த இவர்கள், பின்னர் நகரத்தில் குடியேறி, தறிகளை நிறுவி துரிகல்லுவை நெய்தனர்.

இவ்வகை கம்பளங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் வீட்டில் விசைத்தறிகளை இயக்கி பிரத்தியேகமாக தயாரிக்கின்றனர். ஒரு காலத்தில், இந்த கைவினைப்பொருளில் 75 பெண்கள் பணிபுரிந்தனர். ஆனால் வசதிகள் மற்றும் மோசமான வருமானம் காரணமாக, இப்போது சுமார் 35 பெண்கள் மட்டுமே இதனை நெசவு செய்கிறார்கள். சேக் சயீத் சமூகத்தின் பாரம்பரிய முஸ்லிம் பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். எனவே இந்த கைவினை அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்திற்கும், வாழ்க்கைக்கும் ஒரு ஆதரவாக இருந்தது. இந்த வகை கம்பளங்கள் வேறு எந்த இடத்திலும் செய்யப்படுவதில்லை. கைவினைஞர்கள் இதனை நெசவு செய்யும் தங்கள் கலையைப் பற்றி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த திறன் அவர்களின் மருமகள்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படுகிறது (திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வேறு குடும்பத்திற்குச் செல்வதால் அவர்களின் மகள்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை).

உற்பத்தி விவரங்கள்[தொகு]

நாவல்குந்த் கம்பளங்களை உற்பத்தி செய்யும் பல தலைமுறைகளின் பாரம்பரியத்துடன், அவற்றின் விவரக்குறிப்புகளும், உற்பத்தி செயல்முறைகளும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவல்குந்த்_கம்பளம்&oldid=3304600" இருந்து மீள்விக்கப்பட்டது