உள்ளடக்கத்துக்குச் செல்

தார்வாடு பேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தார்வாடு பேடா
தார்வாடு பேடா
நாடுஇந்தியா

தார்வாடு பேடா (ஆங்கிலம்: Dharwad pedha; கன்னடம்: ಧಾರವಾಡ ಪೇಡ) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தனித்துவமான இந்திய இனிப்பு வகையாகும். இது கருநாடகாவின் தார்வாடு நகரத்திலிருந்து இதன் பெயரைப் பெற்றது. இந்த இனிப்பு சுமார் 175 ஆண்டுகள் பழமையான வரலாற்றினை உடையது.[1] தார்வாடு பேடாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் புவிசார் குறிச்சொல் எண் 80 ஆகும்.[2]

வரலாறு

[தொகு]

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உன்னாவ்வில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோவிலிருந்து தார்வாடுக்கு இடம்பெயர்ந்த தாக்கூர் குடும்பத்தால் தார்வாடு பேடா தயாரிப்பு முதன் முதலில் தார்வாடில் தொடங்கப்பட்டது.  இராம் ரத்தன் சிங் தாக்கூர், முதல் தலைமுறை மிட்டாய் தொழிலாளி ஆவார். இவர் பேடாக்களைத் தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்யத் தொடங்கினார்.  தார்வாடு பகுதியினைச் சுற்றியுள்ள கவாலி சமூகத்தால் வளர்க்கப்படும் தார்வாடு எருமைகளின் பாலிலிருந்து தார்வாடு பேடா தயாரிக்கப்படுகிறது. இராம் ரத்தன் சிங் தாக்கூரின் பேரன் பாபு சிங் தாக்கூர் அவர்களின் தொடர் சந்தை கடைகளில் குடும்ப வணிகத்தை வளர்க்க உதவினார். பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் வணிக ரகசியமாக பேடாவின் செய்முறையை குடும்பத்தினர் நெருக்கமாகப் பாதுகாத்து வருகின்றனர். சில தசாப்தங்களாக இயங்கி வந்த பாபுசிங் தாக்கூரின் ஒற்றை விற்பனை நிலையம் பின்னர் தார்வாடு, ஹூப்ளி, பெங்களூர் பெல்காம் மற்றும் ஆவேரிக்கும் விரிவடைந்தது. இந்தியாவில் பல நகரங்களில் இனிப்புக் கடைகளில் தார்வாடு பேடா விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இவை தாக்கூர் குடும்பம் தயாரிக்கும் பேடாவினைப் போல இருப்பதில்லை.

தேவையான பொருட்கள்

[தொகு]

பால், சர்க்கரை மற்றும் தர்வாடு எருமைப் பால் ஆகியன.

தயாரிக்கும் முறை

[தொகு]

தார்வாடு பேடா பாலினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூடான பாலினை தொடர்ந்து கிளறி, கூடுதல் சுவையுடன் மற்றும் சர்க்கரை கலந்து சுண்டக்காய்ச்சித் தயாரிக்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Us :: Thakur Peda". Thakurpedha.com. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. List of Geographical Indications in India
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்வாடு_பேடா&oldid=3930788" இலிருந்து மீள்விக்கப்பட்டது