உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்ணியா
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்திருகோணமலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்64,451
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நியம நேரம்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் நகரமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 165 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 64,451 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 58,447 முசுலிம்களும், 2,522 இலங்கைத் தமிழரும், 19 சிங்களவரும், 3,445 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 391 பேர்.