வெருகல் - ஈச்சிலம்பத்தை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெருகல் - ஈச்சிலம்பத்தை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்திருகோணமலை மாவட்டம்
நேர வலயம்Sri Lanka Standard Time (ஒசநே+5:30)

வெருகல் - ஈச்சிலம்பத்தைப் பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கிலும், மேற்கிலும் சேருவிலை பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் இந்துப் பெருங்கடலும், தெற்கில் பொலநறுவை மட்டக்களப்பு மாவட்டங்களும் அமைந்துள்ளன. 71 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 11,332 ஆகும். பெரும்பான்மை தமிழர்களைக் கொண்ட இப்பிரிவில், 3 முசுலிம்களும், 11,283 இலங்கைத் தமிழரும், 30 சிங்களவரும், 12 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 160 பேர்.